பழமையும் புதுமையும்.
**********************************
"Good morning, Father."
"Good morning. Glad to meet you.எப்படி இருக்கீங்க?"
"I'm fine.
நேற்று சொந்த ஊர்ல முதல் திருப்பலி நிறைவேற்றினேன்.
ரொம்ப மகிழ்ச்சியாய் இருந்தது.
வசீகர வார்த்தைகளைச் சொல்லும்போதும்,
மரியன்னையின் கையில் தவழ்ந்த அதே இயேசு என் கரங்களில் தவழ்ந்தபோதும்
நான் அடைந்த ஆனந்தத்தை விபரிக்க மனித மொழியில் வார்த்தை இல்லை."
"அருள் நிறைந்த மரியன்னைக்குக்கூட கிடைக்காத பாக்கியம் குருக்களுக்கு!
மரியாள் 10 மாதம் வயிற்றில் சுமந்து பெற்றெடுத்த அதே இயேசுவை
குருவானவர் அரை மணி நேரப் பூசைப்பலியில் அப்ப, ரசத்திலிருந்து பெற்றெடுக்கிறார், தினமும்!
அம்மாவுக்குக் கொடுக்காத பாவமன்னிப்பு அதிகாரத்தை இயேசு குருக்களுக்குக் கொடுத்திருக்கிறார்.
பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் இறைவனுக்கே உரியது,
அதை குருக்களோடு மட்டும்தான் இயேசு பகிர்ந்திருக்கிறார்."
"சுவாமி, எனது குருத்துவப் பணியை ஆரம்பிக்குமுன் இப்பணியில் அனுபவமிக்க தங்களிடமிருந்து சில அறிவுரைகளைப் பெற ஆசிக்கிறேன்."
"குருமடத்தில் தங்களுக்குப் போதிய பயிற்சி அளித்திருப்பார்களே."
"உண்மைதான்.
ஆயினும் என்னைக் குருமடத்திற்கு அனுப்பியவர் நீங்கள்தானே!
உங்களது அறிவுரையுடனும், ஆசீருடனும்தான் என் பணியை ஆரம்பிக்கவேண்டும்."
"நீங்கள் முதலில் ஞாபகத்தில் பதிக்கவேண்டியது
கிறிஸ்து எந்தப் பணிக்காக உலகிற்கு வந்தாரோ
அதே பணிக்காகத்தான் நீங்கள் குருவாகியிருக்கிறீர்கள்.
ஆன்மாக்கள் இரட்சண்யம், நற்செய்தி அறிவிப்பு
பணிக்காகமட்டுமே திருநிலைப் படுத்தப் பட்டிருக்கிறீர்கள்.
நமது ஆன்மீக வாழ்வுக்கு முன்மாதிரிகையாக வாழ்ந்த நம் ஆண்டவர்
பொது வாழ்வில் நுழையுமுன் தன்னைப் பசாசு சோதிக்க அனுமதிக்கிறார்.
தன்னைப் பின்பற்றி பொது வாழ்வில் நுழைவோர் எப்படியெல்லாம் பசாசினால் சோதிக்கப்படுவர்,
சோதனைகளை எவ்வாறு வெல்லவேண்டும் என்று நமக்கு அறிவுறுத்தவே கடவுளாகிய அவரே தான் சோதிக்கப்ப அனுமதிதத்தார்.
முதல் சோதனை உணவைப் பற்றியது.
இரண்டாவது சோதனை உலக அதிகாரத்தையும், மகிமையையும் பற்றியது.
மூன்றாவது சோதனை வீண் சாதனைகள் பற்றியது.
(இங்கிருந்து கீழேகுதியும்.)
நாம் குருத்துவ வாழ்வைத் தேர்ந்தெடுத்திருப்பது
உணவு போன்ற வாழ்க்கை வசதிகளை அனுபவிப்பதற்கோ,
அதிகாரம் செலுத்தி மகிமை அடைவதற்கோ,
ஆன்மீக வாழ்வுக்கு உதவாத சாதனைகளை நிகழ்த்துவதற்கோ அல்ல.
ஆன்மீக உணவாகிய இறை வார்த்தையை சொல்லாலும், செயலாலும் எல்லோருக்கும் கொடுத்தல்,
அதிகாரப் பிரயோகத்திற்காக அல்லாமல் இறைவனுடைய மகிமைக்காக மட்டுமே உழைத்தல்,
சாதனைகளை நடத்த அல்ல, பணி புரியவே உழைத்தல்
ஆகியவற்றிகாக மட்டுமே நாம் அனுப்பப் படுகிறோம்."
"ஆனால் பங்கு தளப்பணியில் பள்ளிக்கூட நிர்வாகம், பங்கு நில நிர்வாகம், வரவு செலவு நிர்வாம் போன்ற ஆயிரம் பணிகள் சுமத்தப்படுகின்றனவே."
"உண்மைதான். இது கடலில் நீந்திக்கொண்டிருப்பவன் ஒரு பாறாங்கல்லை வைத்திருப்பது மாதிரி.
நீந்துவதைவிட பாறாங்கல் பாரத்தால் மூழ்கிப் போகாதிருப்பதிலேயே அதிகக் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.
கஸ்டப்பட்டுதான் கரை சேர வேண்டும்.
நமது பணி ஆன்மீகப்பணி மட்டுமே.
நமது உதவியால் எத்தனை ஆத்துமங்கள் இரட்சிக்கப்பட்டுள்ளன என்பதுதான் முக்கியமே தவிர,
எவ்வளவு பண வசூல் செய்து, எத்தனை கட்டடங்கள் கட்டியிருக்கிறோம் என்பது அல்ல.
பங்குக் குருவின் பணி தன்னிடம் ஒப்பிக்கப்பட்டுள்ள மக்களின் நலனுக்காக தேவத்திரவிய அனுமானங்களை நிறைவேற்றுவதுதான்.
இந்த பணி குருக்கள் அல்லாதவர்களால் செய்யபப்பட முடியாது.
இயேசு உயிர்த்தவுடன் தனது சீடர்களுக்குக் கொடுத்த முதல் பணி,
"யாருடைய பாவங்களை மன்னிப்பீர்களோ அவை அவர்கட்கு மன்னிக்கப்படும்."
என்பதுதான்.
பாவமன்னிப்பு பெற்றால் மட்டுமே இரட்சண்யம் உண்டு.
நம்மிடம் ஒப்படைக்கப்பட்டவர்களுடைய பாவங்களை மன்னிப்பது நமது தலையாய கடமை.
திருப்பலி பீடத்தில் நமது பணி எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பாவசங்கீத்தனத் தொட்டியிலும்.(Confessional)
முதலில் பாவசங்கீத்தனத் தொட்டியில் அமர்ந்து விட்டு அப்புறம் பலிபீடத்திற்குச் சென்றால்
மக்கள் பாவசங்கீத்தனம் செய்துவிட்டு திருப்பலிக்கு வரும் பழக்கத்திற்குத் திரும்புவார்ள்."
"உண்மைதான் சுவாமி. இதை நான் ஏற்கனவே தீர்மானித்துவிட்டேன். உறுதியாகக் கடைப்பிடிப்பேன்."
"இன்னொரு முக்கியமான விசயம்.
நாம் ஆபீசில் வேலை பார்க்கும் பணியாளர் அல்ல, பள்ளிக்கூடத்தில் பணிபுரியும் ஆசிரியர்களும் அல்ல.
அவர்கள் பணிக்குச் செல்லும்போது அதற்குரிய ஆடை (uniform) அணிந்தால் போதும்.
நாம் கிறிஸ்துவின் பிரதிநிதிகள். ஆன்மீகப் பணியார்கள்.
நாம் மக்கள் முன் வரும்போது நாம் 'குரு' என்ற அடையாளம் (identity) நம்மிடம் இருக்கவேண்டும்.
நமது ஆன்மீகப் பணி மற்றவர்கட்கு எப்போது வேண்டுமானாலும் தேவைப்படலாம்.
குருவானவரைத் தேடி பாவசங்கீத்தனம், அவஸ்தை போன்ற அவசரத் தேவைகட்காக யார் வேண்டுமென்றாலும், எப்போது வேண்டுமென்றாலும் தேடி வரலாம்.
நாம் நமது Identity dress இல்லாதிருந்து
நம்மைப் பார்த்தும் குரு என்று கண்டுபிடிக்க முடியாததால் அவர்களது ஆன்மீகத்தேவைகள் நிறைவேறாமல்போனால் நாம்தான் கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும்.
கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்தீர்கள் என்றால் புரியும் நமது அங்கி நமது ஆன்மாவுக்கும் பாதுகாப்பு என்று.
அது மட்டுமல்ல
இன்று பாவசங்கீர்த்தனங்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்திருப்பதற்கு
குருக்கள் அங்கியின்றி பொது இடங்களுக்கு வருவதும் ஒரு காரணம்.
கொஞ்சம் சிந்தித்தால் இது புரியும்.
உடை விசயத்தில் நான் கூறிய கருத்துக்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
இறைவனது ஆசீர் என்றும் உங்களோடு இருக்கும்."
"Thank you, dear Father."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment