Tuesday, May 7, 2019

மனிதர்கள் மனிதர்களாய் வாழவேண்டுமா? புனிதர்களாய் வாழவேண்டுமா?

மனிதர்கள் மனிதர்களாய் வாழவேண்டுமா?

புனிதர்களாய் வாழவேண்டுமா?
*******************************

பழைய T. V ஒன்று விலைக்கு வந்தது.

பார்க்க அழகாய் இருந்தது. வாங்கிவிட்டேன்.

என் பேரன் வந்து T. V ஐ on பண்ணினான்.

உள்ளே வெளிச்ம் நன்றாய்த் தெரிந்தது,

ஆனால்
படம் எதுவும் தெரியவில்லை.

ரொம்ப நேரம் முயன்று பார்த்துவிட்டு

T. Vயா இது கூறிவிட்டுப் போய்விட்டான்.

ரிப்பேர் பார்ப்பவனிடம் கொண்டு போன பின்தான் தெரிந்தது

உள்ளே Picture tubeஏ இல்லை என்று!

பார்ப்பதற்குT. V,

ஆனால்,  T. Vயே இல்லை!

இதே போல்தான்
எழுதாத பேனாக்கள், 
எரியாத பல்புகள்,
ஓடாத கார்கள்,
தெரியாத கண்ணாடிகள், படிக்காத மாணவர்கள்.... சொல்லிக் கொண்டே போகலாம், முடிவில்லாமல்!

எது எதுக்காக உண்டாக்கப் பட்டதோ,

அது அதைச் செய்யாவிட்டால்

அது அது அல்ல! 

எழுதுவதற்காக செய்யபட்ட பேனாவினால் எழுதமுடியாவிட்டால் அது பேனா அல்ல.

எப்படி வாழவேண்டும் என்று மனிதன் படைக்கப்பட்டானோ

அப்படி வாழாவிட்டால் அவன் மனிதனே அல்ல!

எப்படி வாழவேண்டும் என்று மனிதன் படைக்கப்பட்டான்?

புனிதனாய் வாழவேண்டும் என்று படைக்கப்பட்டான்.

புனிதனாய் வாழ்பவனே மனிதன்.

அதாவது  மனிதன் என்ற சொல்லின் பொருள் புனிதன் என்று சொல்லும் அளவிற்கு வாழவேண்டும்.

புனிதம் இல்லாமல் ஒருவன் வாழ்ந்தால், பெயருக்கு அவன் மனிதனாய் இருக்கலாம்,

உண்மையில் அப்பெயருக்குப் பொருத்தம் இல்லாதவன்.

Picture tube இல்லாத T. V, பார்வைக்கு மட்டும்தான் T. V!

'புனிதனாய் வாழவேண்டும்' என்றால் என்றால் என்ன பொருள்?

இறையன்பிலும், பிறர் அன்பிலும் வாழவேண்டும்.

புனிதராய் வாழ இறையன்பும் பிறர்அன்பும் பிரிக்க முடியாதவை.

இறையன்பு இல்லாதவனிடம் பிறர் அன்பு இருந்தும் பயனில்லை.

ஏனெனில் பிறர் அன்புக்கு இறை அன்புதான் உயிர்.

இறை நம்பிக்கையே இல்லாதவர்கள்  'மனிதம்,மனித நேயம்' என்ற சொற்களைப் பயன் படுத்துகிறார்கள்.

அவர்கட்குக் கடவுள் கிடையாதாம், மனிதனை மனிதன் என்பதற்காக மட்டும் நேசிக்க வேண்டுமாம்!

எந்த செயலுக்கும் ஒரு நோக்கம் (Purpose) இருக்கவேண்டும்.

சாப்பிடுவதற்கு ஒரு நோக்கம் உண்டு,

சாப்பிடுவதெற்கென்றே சாப்பிடுபவன் தின்னிமாடன்!

இவ்வுலகில் நாம் வாழ்வதன் நோக்கம்,

  இறைவன் திட்டப்படி வாழ்ந்துவிட்டு

வாழ்க்கைக்குறிய சம்பாவனையைப் பெறுவதற்காக

அவரிடமே போய்ச் சேர்வதுதான்.

இந்த உயரிய நோக்கம் இன்றி,

'இந்த உலகில் வாழ்வது இங்கு வாழ்வதற்காகத்தான்,

மறு உலகிற்குப்போவதற்காக அல்ல

என்று கூறுவது,

'இரயிலில் பயணிப்பது

பயணிப்பதற்காக மட்டும்தான்,

எந்த ஊருக்கும் போவதற்கல்ல'

என்று கூறுவதற்குச் சமம்.

பிறரை நேசிப்பது பிறருக்காகவோ, நமக்காகவோ அல்ல,

இறைவனுக்காக.

நமக்கு உயிர் இறைவனே, இறைவனுக்காக அன்றி செய்யும் எதுவும் உயிர் அற்ற செயல்.

படம் தெரியாத T. Vக்கும்,

எழுதாத பேனாவுக்கும் சமம்!

அச்செயல் நமது நோக்கத்தை அடைய எந்த விதத்திலும் உதவாது.

இறைவனுக்காக ஒரு சிறுவனுக்கு நாம் கொடுக்கும் ஒரு தம்ளர் தண்ணீரின் பொருட்டு நமக்கு மறு உலகில் சம்பாவனை உண்டு.

ஆனால் இறைவனுக்காக அல்லாமல் நமது பெருமைக்காக நமது சொத்தை முழுவதும் ஏழைகளுக்குக் கொடுத்தால்கூட நமக்கு விண்ணுலகில் எந்த பயனும் இல்லை.

இறைநேயம் இல்லாமல் மனிதநேயம் இல்லை.

நமது வாழ்வு

இறைவனை மையமாகக் கொண்டிருக்கவேண்ண்டும்,

மனிதனை அல்ல.

இறைவனுக்காக வாழாத எவனும் மனிதன் அல்ல. மனிதன் என்ற பெயரில் வாழும் வெற்றுடம்பு.

இறைவனுக்காக, இறையன்பில் பிறரன்போடு வாழ்பவனே மனிதன்,

அவன்தான் புனிதன்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment