Wednesday, August 8, 2018

உண்டாகவேண்டியது அமைதியா? சமாதானமா?

உண்டாகவேண்டியது
அமைதியா? சமாதானமா?
1111111111111111111111111

"செல்வம்,  Busyயா இருக்கீங்களா?       Freeயா இருக்கீங்களா?"

"Freeதான். சொல்லுங்க."

"நான் சிறுமியாயிருக்கும்போது வானவர் கீதத்தில 'பூவுலகில் நல்மனதோர்க்கு சமாதானம் உண்டாகுக'ன்னு படிப்பாங்க.

ஆனால் இப்போது 'அமைதி உண்டாகுக'ன்னு படிக்கிறாங்க.

சமாதானமும், அமைதியும் ஒண்ணா?"

(அமைதி என்ற வார்த்தைக்கு
இரண்டு அர்த்தங்கள் உள்ளன.

1.Silence.
2. Peace of mind.

இரண்டு பொருள் உள்ள வார்த்தைகளை முக்கியமான விசயங்களை,  அதுவும் விசுவாசம் சம்பந்தப்பட்ட விசயங்களை விளக்கப் பயன்படுத்தக்கூடாது.

பயன்படுத்தினால் தவறாக பொருள் கொள்ள இடம் உண்டாகும்)

"நாம இப்போ பேசிக்கிட்டு இருக்கோமா?  அமைதியா இருக்கோமா?"

"பேசிக்கிட்டுதான் இருக்கோம்."

"பேசிக்கிட்டு இருக்கோமா? சமாதானமா இருக்கோமா?"

"சமாதானமாகத்தான் பேசிக்கிட்டிருக்கோம்."

"நாம் சமாதானமா இருக்கோமுன்னா என்ன அருத்தம்?"

"நம் இருவர் மனங்களும் ஒன்றையொன்று,

அன்புடனும்,

விரோதமில்லாமல்

ஏற்றுக்கொண்டுள்ளன என்று அருத்தம்."

"Correct.

சுரூக்கமா,

மனம் ஒத்திருந்தால் சமாதானம்.

வாய் பொத்தியிருந்தால் அமைதி."

"அதாவது,

நல்ல மனதுள்ளவர்கள் மட்டுமே சமாதானமாய் இருக்கமுடியும்.

யார் வேண்டுமானாலும் அமைதியாய் இருக்கலாம்."

"ஒருவரோடு ஒருவர் விரோதம் பாராட்டும்,

அதாவது சமாதானமில்லாத,

இருவர்கூட,

மனதில் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டே,

வாயளவில் அமைதியாக இருக்கலாம்."

"அமைதியும், சமாதானமும் ஒன்றல்ல.."

"உறுதியாக.

1.மனிதரே இல்லா இடத்தில்கூட அமைதி இருக்கலாம்.

மனிதர்களிடம் மட்டுமே சமாதானம் இருக்கமுடியும்.

2. இறந்தவர்கள் புதையுண்ட இடத்தில் அமைதி நிலவும்.

உயிருள்ளவர்களிடமே சமாதானம் இருக்க முடியும்.

3. ,அமைதியாய் இருக்க ஒருவர் போதும்.

சமாதானமாய் இருக்க குறைந்தபட்சம் இருவர் தேவை.

4.  அமைதியே இல்லாத இடத்தில்கூட சமாதானம் நிலவலாம்.

சமாதானம் அரசோச்சும்  இல்லங்கள் எப்போதும் கலகலப்பாய் இருக்கும்.

பெற்றோரும், பிள்ளைகளும் எப்போதுமே பேசாது அமைதியாகவே இருந்தால் அவர்களிடையே சமாதானம் இல்லை என்பது பொருள். "

"அது சரி, மன அமைதி(Peace of mind) ஒரு ஆசீர்வாதம்தானே."

"உலகில் உள்ள அத்தனை செல்வங்களிலும் மன அமைதியே (சஞ்சலம் இல்லாமை) மேலானது.

ஆனால் இறைவனோடு சமாதானமாய் உள்ள மனதில்தான் அமைதி
நிலவும்.

பசிபிக் கடலுக்கு (Pacific ocean) அப்பெயர்(அமைதிக் கடல்) வரக்காரணம்

அங்கு மற்ற கடல்களைப்போல் அலைகள் இல்லாமை.

சஞ்சல அலைகள் இல்லாத மனம் அமைதியான மனம்.

சாவன பாவம் கோலோச்சும் மனதில் அமைதி (Peace of mind) இருக்காது.

மனசாட்சி குத்திக்கொண்டே இருக்கும்.

பாவசங்கீத்தனம் மூலமாக பாவமன்னிப்பு பெற்றபின்,

அதாவது,  இறைவனோடு  சமாதானம் ஆனபின் ,

குருவானவர்,

'சமாதானமாகச் செல்லுங்கள்' (Go in peace) என்று சொல்கிறார்.

நாம் பாவசங்கீத்தனம் செய்வது மன அமைதிக்காக அல்ல,

இறைவனோடு சமாதானம் செய்துகொள்ளவே பாவமன்னிப்பு  கேட்கிறோம்.

எதற்காக உண்கிறோம்?

பசி நீங்கவா?

இல்லை.

உடல் சக்தியும்  வளர்ச்சியும் அடைய.

உண்ணாமலிருக்கும்போது பசிப்பது போல,

பாவம் செய்யும்போது அமைதி நீங்குகிறது.

உண்ணும்போது பசி நீங்குவதுபோல,

பாவமன்னிப்பு பெறும்போது அமைதி திரும்புகிறது.

எதற்காக இறந்தபின் மோட்சத்திற்குச் செல்லவேண்டும்?

நித்தியத்துக்கும் இறைவனோடு இணைந்து வாழ்வதற்காக.

இவ்வாழ்வு நமக்கு பேரின்பத்தைத் தரும். 

ஆனால் அவ்வின்பத்திற்காக அல்ல,

இறைவனோடு வாழவே நாம் விண்ணகம் செல்கிறோம்.

பேரின்பம் இறைவன் தரும் பரிசு.

இறைமகன் மனுவுரு எடுத்தது

நாம் நமது பாவத்தினால் இழந்த இறை உறவை மீட்டுத்தர,

அதாவது, இறைவனோடு நம்மை சமாதானத்தில் இணைக்க.

அதனால்தான் உலக மீட்ப.ர் பிறந்த அன்று இறைத் தூதர்கள்,

' விண்ணுலகில்  இறைவனுக்கு மகிமையும்,

  பூலகில் நல்மனதோர்க்கு சமாதானமும் உண்டாகுக'

"Glory to God in the highest, and on earth peace to men of good will." (Luke.2:14)

என்று வாழ்த்துக்கீதம் பாடினார்ள்.

இப்போ சொல்லு, நமக்கு உண்டாகவேண்டியது அமைதியா? சமாதானமா?"

இது வரை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த செல்வத்தின் மகன், ஒரு பொடியன்,

"அப்பா, நீங்க சொல்கிற வாழ்த்துரை பைபிளில் இல்லை."

"ம்.. சொல்லு."

"நீங்க மேற்கோள் காட்டிய லூக்காஸ்.1:14ல்

'உலகில் அவருக்கு உகந்தோருக்கு
அமைதி உண்டாகுக!'
என்றுதான் இருக்கிறது.

நல்மனதோர்க்கு என்று இல்லை."

பாக்கியம்:  "அது புதிய மொழிபெயர்ப்பில்."

பொடியன்: "ஏம்பா,

ஒரே இயேசு,

அவர் ஒரு முறைதான்
பிறந்தார்.

ஒரு முறைதான் சம்மனசுக்கள் வாழ்த்தினார்கள்.

புதிய மொழிபெயர்ப்பாளர்கட்காகத்
திரும்பவும்  அவர்களிடம் வந்து வித்தியாசமாக வாழ்த்திவிட்டுப் போனார்களோ?'

"தெரியலியப்பா!

அதை அவர்களிடம்தான் கேட்கவேண்டும்.

யாராவது கேட்டுச் சொல்லுங்களேன்."

லூர்து செல்வம். 

3 comments:

  1. அறியாத புதிய தகவல். நன்றி.

    ReplyDelete
  2. கத்தோலிக்கர்கள் மொழிபெயர்ப்பு என்றும் தமிழே கர்த்தரின் வார்த்தைகள் என்றும் இன்று விவிலியத்தை குழப்பி பொருள்உணராது திருப்பலிநேரத்திலும் சொல்லும் வார்த்தைகளால் தமிழைப்பாராட்டலாம் ஆனால் யேசுவின் மனம் புண்படும்.

    ReplyDelete
  3. கத்தோலிக்கர்கள் மொழிபெயர்ப்பு என்றும் தமிழே கர்த்தரின் வார்த்தைகள் என்றும் இன்று விவிலியத்தை குழப்பி பொருள்உணராது திருப்பலிநேரத்திலும் சொல்லும் வார்த்தைகளால் தமிழைப்பாராட்டலாம் ஆனால் யேசுவின் மனம் புண்படும்.

    ReplyDelete