"உலகமோ அவரை அறிந்துகொள்ளவில்லை."
++++++++++++++++++++++++
நடுநிசி, 12 மணி.
செல்வம் நல்ல தூக்கத்தில் ஆழ்ந்திருந்தான்.
அப்பப்போ அவன் விடும் குறட்டைகளைக் கேட்டு ரசிப்பதற்கு அருகில் யாருமில்லை.
பாக்கியம் அவளுடைய அம்மா வீட்டுக்குப் போயிருந்தாள்.
பிள்ளைகளெல்லாம் வெளியூரில் படித்துக்கொண்டிருந்தார்கள்.
கனவுகள் மட்டும் அப்பப்போ வந்துபோகும்.
திடீரென ஒரு சங்கீதஒலி கேட்டது.
"Open the door please."இனிய குரலில்.
"வித்தியாசமான கனவு. Calling bell சப்தம்கூட கனவில் வருகிறதே!"-தூக்கத்திலேயே நினைத்துக்கொண்டான்.
அடுத்து இரண்டு முறை, அதே இனிய குரல், அதே Open the door please!
வித்தியாசமான கனவு!
பரவாயில்லை, ரசிக்கும்படியாகத்தான் இருக்கிறது!
அடுத்து கதவைத்தட்டும் சப்தம்.
கனவில் வந்து கதவைத்தட்டுவது யார்?
கதவைத் தட்டும் சப்தம் தொடர்ந்தது.
இது கனவு இல்லையோ?
எழுந்தான்.
சப்தம் ஓங்கிக் கேட்டது.
இது கனவு இல்லை.
எழுந்தவன் கதவை நோக்கி நடந்து, கதவைத் திறந்தான்.
அங்கே,
முகத்தில் அனல் பரக்க பாக்கியம் நின்றுகொடிருந்தாள்.
"ஏங்க, எவ்வளவு நேரம் கதவைத் தட்டிக்கிட்டிருக்கேன்.
காதில விழல?"
"நல்ல வேளை கதவு காதில விழல.
விழுந்திருந்தால், என் காது மட்டுமில்ல, என் தலையும் சேர்ந்து போயிருக்கும்."
"இந்த நக்கல் பேச்சுக்கு மட்டும் குறைவில்லை."
பாக்கியம் வீட்டிற்குள் விரைந்தாள்.
"உண்மையிலேயே நடந்தது என்ன தெரியுமா?
கனவுல உன் குரல ரசிச்சிக்கிட்டிருந்தேன்.
அவ்வளவு இனிமை?"
"அதெப்படி குரலை மட்டும் ரசிச்சீங்க? என்ன ஏன் ரசிக்கல?"
"குரல்மட்டும்தானே கேட்டது. Open the door please!"
"மண்டு, மண்டு. என் குரலுக்கும், Calling bell குரலுக்கும் வித்தியாசம் தெரியல? ''
"நான் உன்னையே நினைச்சுக்கிட்டிருந்தேனா, அதுதான் அது உன் குரல் மாதிரியே இருந்தது."
"இருக்கும், இருக்கும். நான் போட்ட கடிதத்துக்குப் பதில்போட நினைப்பில்ல. என்னையே நினைச்சிக்கிட்டிருந்தாராம்."
"கடிதம் போட்டியா? கனவிலேயா?
கடிதம் ஏதும் வரவில்லையே."
பாக்கியத்தின் கண்கள் மேஜைப்பக்கம் திரும்பின.
அங்கே கத்தையாக பல கடிதங்கள் கிடந்தன.
போய் அவற்றை அள்ளி வந்தாள்.
அவற்றை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தாள்.
அவற்றினிடையே அவள் எழுதிய கடிதம் இருந்தது.
அதை உறுவி அவனிடம் கொடுத்தாள்.
"தேதியைப்பாருங்கள். கடிதம் போன வாரமே வந்துவிட்டது.
இன்னும் அதைத் திறக்கவே இல்லை."
"அது என் கண்களில் படவேயில்லை.
இப்போது சாமியார் ஞாயிற்றுக்கிழமை வைத்த பிரசங்கம் ஞாபகத்துக்கு வருகிறது."
"ஏங்க, என் கடிதத்தைப்பற்றியா சாமியார் பிரசங்கம் வைத்தார்?"
"இல்லை.
'வார்த்தை உலகில் இருந்தார்:
அவர்வழியாகத்தான் உலகம் உண்டானது:
உலகமோ அவரை அறிந்துகொள்ளவில்லை.'
இந்த பைபிள் வசனம் பற்றியே பிரசங்கம் வைத்தார்.
வார்த்தையாம் இறைமகன் அவரால் படைக்கப்பட்ட உலகத்தில் இருந்தார்.
ஆனாலும் அவரால் படைக்கப்பட்ட மக்கள் அவரை அறிந்துகொள்ளவில்லை.
பெற்றெடுக்கப்பட்ட பிள்ளை தாயை அறியாவிட்டால் அவளுக்கு எப்படி இருக்கும்?"
"ஏங்க, நான் என் கடிதத்தைப்பற்றி சொல்லிக்கிட்டிருக்கேன்.
நீங்க பைபிள் வசனத்தைச் சொல்லுறீங்க.
இரண்டுக்கும் என்னங்க சம்பந்தம்?"
"உன் கடிதத்தை நான் இன்னும் வாசிக்கல. ஏன்? "
"அது பல கடிதங்களுக்குள் மாட்டிக்கிட்டு. "
"கரெக்ட். உனக்கு என்னைப்பற்றிமட்டுமே கவலை.
அதனால்தான் எனக்குக் கடிதம்.போட்டுட்டு பதிலை எதிர்பார்ததுக்கிட்டிருக்க.
ஒரு வாரமா பதில் பதில் வரலன்னவுடனே இரவுன்னுகூட பார்க்காமல் தேடி வந்துட்ட.
ஆனால் நான் ஒரு Business man.
Business கடிதங்கள் நிறைய வரும்.
உன் கடிதம் என் கண்ணுல படாததற்கு நான் பல Business தொடர்புகள் வைத்திருப்பதனால உன் கடிதத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கல.
மற்ற கடிதங்களுள் அது மாட்டிக்கொண்டது.
அதேபோல்தான் கடவுளுக்கு நம்ம மேல மட்டும்தான் அக்கரை.
நாம் கடவுளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்குப் பதிலா, எண்ணற்ற உலகக்கவலைகளை தலைமேல அள்ளிப்போட்டிருக்கோம்.
பூசை நேரத்தில்ததான் மாணவர்கட்கு Tuition இருக்கும்.
என்னைப் போன்றவர்கட்கு அப்போபார்த்துதான் ஏதாவது Meeting இருக்கும்.
பணத்திற்கும், பணசம்பந்தப்பட்ட காரியங்ட்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களால் வார்த்தையானவரைப்பற்றி அறிய இயலாது."
"அது உண்மைதாங்க. உலகத்தில் வாழ்வதே இறைவனை அறியவே.
இறைவனை அறிந்து அவருக்காக மட்டும் வாழவே.
ஆனால் அநேகர் தாங்கள் உலகிற்கு வந்ததே உலகை அனுபவிக்கதான் என்று எண்ணுகிறார்கள்.
உலக காரியங்களில் வெற்றிபெற உதவவே இறைவனை வேண்டுகிறார்கள்.
உலக காரியங்களில் இறைவன் நமது Agentஆகவும், brokerஆகவும் இருந்து செயல்பட விரும்புகிறார்கள்.
முளைத்த செடியை முட்புதர்கள் அமுக்கி விடுவதுபோல இறைவார்த்தை தம்முள் வளராதபடி உலகக்கவலைகள் அமுக்கிவிடுகின்றன."
"இறைவனுக்காக வாழ்வது ஆன்மீகம்.
இவ்வுலகிற்காக வாழ்வது லௌகீகம்.
நாம் ஆன்மாவும், உடலும் இணைந்தவர்கள்.
உண்மையில் ஆன்மாதான் நாம்.
உடல் நம்முடையது, அதாவது ஆன்மாவுடையது.
உடலை இயக்குவது நமது ஆன்மாதான்.
ஆன்மா வடமொழிச் என்பதற்காக அதைவிட்டுவிட முடியாது.
ஆன்மாவை மையமாக வைத்து வாழும் வாழ்க்கை ஆன்மீக வாழ்க்கை.
உடலை மையமாக வைத்து வாழும் வாழ்க்கை லௌகீக வாழ்க்கை.
லௌகீக வாழ்க்கை மட்டும் வாழ்பவர்கள் உலக சம்பந்தப்பட்ட காரியங்களுக்காக ஆன்மாவைத் தியாகம் செய்து விடுவார்ள்,
அதாவது,
இழந்துவிடுவார்கள்.
ஆன்மாவை இழந்தால் வாழ்ந்தும் பயனில்லை.
"ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் அவன் ஆன்மாவிற்குக் கேடு விளைந்தால், அவனுக்கு வரும் பயனென்ன?
ஒருவன் தன் ஆன்மாவிற்கு ஈடாக எதைக் கொடுப்பான்?"
(மத்16:26)
நாம் இவ்வுலகில்தான் வாழ்கிறோம்,
ஆனால் மறுவுலக நிலைவாழ்வுக்காக.
லொகீக வலையில் சிக்காமல்
ஆன்மீக வாழ்வு வாழ்ந்து
ஆண்டவர் பாதம் அடைவோம்
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment