Wednesday, August 15, 2018

"உங்களுக்குச் செவிசாய்ப்பவன் எனக்குச் செவிசாய்க்கிறான்." (லூக். 10:16)

"உங்களுக்குச் செவிசாய்ப்பவன் எனக்குச் செவிசாய்க்கிறான்."
(லூக். 10:16)
"''''''"""""""""'"''"""'"""""""""""""""""""""""""
"''''''
இயேசு தனது சீடர்களைப் போதிக்க அனுப்பும்போது ,

அவகளுக்குச் சில கடமைகளையும்ளையும்,
உரிமைகளையும்  கொடுத்து அனுப்புகிறார்.

கடமைகள்:

தம் அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் ஆண்டவரை மன்றாடுங்கள்.

பணப்பையோ கைப்பையோ மிதியடியோ எதுவும் எடுத்துச் செல்லவேண்டாம்.

நீங்கள் எந்த வீட்டுக்குப் போனாலும், முதலில், "இவ்வீட்டுக்குச் சமாதானம்" என்று வாழ்த்துங்கள்.

அங்குள்ள பணியாளரைக் குணமாக்கி, கடவுளின் அரசு உங்களை நெருங்கியுள்ளது" என்று மக்களுக்குத் தெரிவியுங்கள்.



உரிமைகள்:

வேலையாள் கூலிக்கு உரிமை உடையவன்.

உங்களுக்குச் செவிசாய்ப்பவன் எனக்குச் செவிசாய்க்கிறான்.

"பணப்பையோ கைப்பையோ மிதியடியோ எதுவும் எடுத்துச் செல்லவேண்டாம்."

என்று கூறிய இயேசு,

"வேலையாள் கூலிக்கு உரிமை உடையவன்."

என்று கூறுகிறார்.

இந்த வார்த்தைகளில் அவர்களது சீடர்களுக்கு மட்டுமல்ல,

நமக்கும் அறிவுரை இருக்கிறது.

"எனக்குப் பணிபுரிவதற்காகத் தங்கள் உடைமைகளை துறந்து வந்திருக்கும் என் சீடர்கட்கு,

உணவு, உடை, இருப்பிடம் மற்றும் வாழ்க்கை வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டியது உங்கள் கடமை."

என்று இயேசு கூறுகிறார்.

நமது ஞானமேய்ப்பர்கள் தங்கள் வாழ்நாளின் ஒவ்வொரு வினாடியையும்

நமது ஆன்மீகப் பணிக்காக மட்டுமே செலவிடுகிறார்கள்.

ஆகவே உலகரீதியாக அவர்களைக் கவனிக்கவேண்டியது நமது கடமை.

"தம் அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் ஆண்டவரை மன்றாடுங்கள்."

என்று ஆண்டவர் தம் சீடர்கட்குப் பணிக்கிறார்.

இங்கு நாம் இரண்டு விசயங்களைக் கவனிக்க வேண்டும்.

1. அறுவடையின் ஆண்டவரே இயேசுதான்.

இறைப்பணிக்கு அதிகமான ஆட்களை அனுப்பும்படி இயேசுவிடம்தான் கேட்கவேண்டும்.

பணியாளர்களைத் தேர்வுசெய்கிறவரும் (Vocation),

அனுப்புகிறவரும் (Mission) அவரே.

நாம் கேட்காமலேயே அவரே அனுப்பலாம்.

ஆனாலும்

நாமே பொறுப்புணர்ந்து,

இறை வார்த்தை போதிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்து

'வேலைக்கு ஆட்கள் காணாது ஆண்டவரே,

இன்னும் ஆட்களை அனுப்புங்கள்'.என்று கேட்கும்போது

நமது ஒத்துழைப்பை நாம் வெளிப்படுத்துகிறோம்.

2. அறுவடைக்கான. ஆட்கள் வானத்திலிருந்து 'பொத்தென்று' குதிப்பதில்லை.

இறைமக்களாகிய நம்மிடமிருந்துதான் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

ஆகவே தேவஅழைத்தலுக்காக நமது பிள்ளைகளைத் தயார்செய்யவேண்டியதும்,

இறைவன் அழைக்கும்போது அனுப்பவேண்டியதும் நமது பொறுப்பு.

அடுத்து, தனக்கு நிகர் தானே ஆன இறைமகன் இயேசு

தன் அதிகாரத்துக்கு   நிகரா
அதிகாரத்தைத்

தன் சீடர்கட்குக் கொடுத்திரருக்கிறார். 

"உங்களுக்குச் செவிசாய்ப்பவன் எனக்குச் செவிசாய்க்கிறான்"

இது சீடர்கள் போதிப்பதற்காகக் கொடுக்கப்பட்ட அதிகாரம்.

சீடர்கள் வழியாகப் பேசப்போகிறவர் இயேசுவே.

நவீன விஞ்ஞான மொழியில் சொல்வதானால்,

'இயேசு Mikeல் பேசுகிறார்.

அவரது பேச்சு சீடர் என்ற. Speaker வழியே நமக்குக் கேட்கிறது.

ஆகவே இயேசுவின் அதிகாரப்பூர்வமான சீடர்கட்கு செவிசாய்க்கிறவன் இயேசுவுக்கே செவிசாய்க்கிறான்.

இன்றையதினம்

நமது பாப்பரசர்,

ஆயர்கள்,

குருக்கள்

ஆகியோர் இயேசுவின் அதிகாரப்பூர்வமான சீடர்கள்.

இயேசு அவர்கள் மூலமாகத்தான்

நற்செய்தியயை அறிவிக்கிறார்,

ஆன்மீக ஆலோசனைகள் வழங்குகிறார்,

நமது  பாவங்களை மன்னிக்கிறார்,

நம்மை அவரது கூடாரத்திற்குள் சேர்த்துக்கொள்கிறார்,

நம்மை விசுவாசத்தில் உறுதிப்படுத்துகிறார்,

தம்மையே நமக்கு உணவாகத் தருகிறார்.

பொதுநிலையினராகிய நாமும் இயேசுவின் சீடர்கள்தான்.

ஏனெனில்

நாமும் இயேசுவின் போதனைகளை ஏற்கிறோம்,

அதன்படி நடக்கிறோம்,

அதை மற்றவர்கட்கு அறிவிக்கிறோம்.

ஆனால் நமக்கும் குருக்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

ஆசிரியர் வகுப்பில் பாடம் போதிக்கிறார்.

புத்திசாலி மாணவன் ஒருவன் கொஞ்சம் மந்தமான சகமாணவனுக்கு அதே பாடத்தை விளக்குகிறான்.

ஆயினும் மாணவன் ஆசிரியர் அல்ல.

தேர்வு நடத்துதல், மதிப்பீடு செய்தல், Promote செய்தல் போன்ற அதிகாரங்கள் மாணவனுக்கு இல்லை.

நாம் மாணவன் மாதிரி.

குரு ஆசிரியர் மாதிரி.

பல பூட்டுக்களைத் திறக்க ஒரே சாவி பயன்படுவதுபோல
பல Problem களுக்கு

இயேசுவின்

"உங்களுக்குச் செவிசாய்ப்பவன் எனக்குச் செவிசாய்க்கிறான்"

என்ற வார்த்தைகள் தீர்வாய் அமைகின்றன.

It is a ready made, ever at hand solution  for many difficult problems.

கானாவூர்த் திருமணத்தின்போது இரசப்பற்றாக்குறையினால் பிரச்சனை ஏற்பட்டபோது அன்னை மரியாளிடம் இருந்த ஒரே தீர்வு,

"அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்." 

இப்போதும் மரியாள்தான் திருச்சபையின் தாய்.

இப்போதும் ஏதாவது பிரச்சினைக்குத் தீர்வு கேட்டால்,

மாதா அதையேதான் சொல்வாள்.

மரியாளின் மைந்தன் திருச்சபையை நிருவி,

அதன்மூலம் பேசுகிறார்.

நம்மால் தீர்வு காணமுடியாத ஆன்மீகப் பிரச்சனைகட்கு நாம் தீர்வு காண அணுகவேண்டியது திருச்சபையைத்தான்.

இயேசு கூறியபடி,

திருச்சபைக்குச் செவி கொடுக்கிறவன்

இயேசுவுக்குச் செவிகொடுக்கிறான்.

உதாரணத்திற்கு ஒரு பிரச்சனையை எடுத்துக்கொள்வோம்.

இரட்சண்யம் பெற பைபிள் மட்டும் போதுமா?

நமது பிரிந்த சகோதரர்கள் 'போதும்' என்கிறார்கள்.

ஆனால்,

தாய்த்திருச்சபை கூறுகிறது,

"பைபிள் மட்டும் போதாது.

திருச்சபையின் பாரம்பரியமும் (Holy Tradition)
வேண்டும்.

பாரம்பரியம்தான் எது பைபிள் என்று வரையறுத்தது."

தாய் நம்மைப் பார்த்து,

"இதுதான் உன் அப்பா" என்று கூறும்போது

நாம் அம்மாவையும், அப்பாவையும் சேர்த்துதான் ஏற்றுக் கொள்கிறோம்.

அவ்வாறுதான் திருச்சபையின் பாரம்பரியம்,

"இதுதான் பைபிள்"  என்று கூறும்போது

நாம் இரண்டையும்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

திருச்சபை நமது தாய்.

அந்தத் தாய் நமக்குத் தந்த விலை மதிப்பற்ற பொக்கிஷம் பைபிள்.

பாரம்பரியம் நமது தாயின் வரலாறு.

பழைய ஏற்பாடு  கிறிஸ்துவின் பிறப்பிற்கு முன்பே எழுதப்பட்டுவிட்டது.

புதிய ஏற்பாடு எழுதப்படுவதற்கு முன்பேயே திருச்சபையின் பாரம்பரியம் இருந்தது.

பாரம்பரியம்தான்

இயேசுவைப்பற்றி எழுதப்பட்டிருந்த பல நூல்களிலிருந்து

குறிப்பிட்ட நூல்களைத் தேர்ந்தெடுத்து,

அவற்றையும்,

அப்போஸ்தலகளின் நிரூபங்களையும் சேர்த்து

புதிய ஏற்பாட்டிற்கு உருக்கொடுத்தது.

"பாரம்பரியம் வேண்டாம், அது உருவாக்கிய புதிய ஏற்பாடு வேண்டும்." என்று சொன்னால் எப்படி? 

எழுதியது பாரம்பரியம், எழுதப்பட்டது நற்செய்தி.

எழுதியது  வேண்டாம், எழுதப்பட்டது வேண்டும் எனக்கூறுவது வேடிக்கையையில்லை?

இவ்வளவையும் எழுதிவிட்டு

திருச்சபையில் அப்பப்போ ஏற்படும் மாற்றங்கள் பற்றி

குறை சொல்கிறீர்களே, அது எப்படி?

என்ற கேள்வி எழும்.

இது வரை எழுதியது திருச்சபையின் போதனை பற்றி.

நிறை வேண்டி குறை காண்பது நடைமுறை பற்றி.

திருச்சபையின் போதனைகளில் மாற்றம் ஏற்படாது,

ஏற்பட முடியாது.

விசுவாச சத்தியங்கள் பற்றி

அகில உலகிற்கும் அறிவுறுத்தும்போது

பாப்பரசரால் தவறு செய்ய முடியாது,

அதுதான் தவறாவரம்.

குருக்கள் போதனை விசயங்களில் முழுக்கமுழுக்க பாப்பரசருக்குக் கட்டுப்பட்டிருப்பதால் அவர்கள் போதனை திருச்சபையின் போதனைதான்.

விமர்சனத்துக்கு உட்படுவது
நடைமுறைகள்தான்.

உதாரணத்திற்கு,

திவ்யநற்கருணை

உண்மையிலேயே  இயேசுவவின் திருஉடலும், திருஇரத்தமும் ஆகும்

என்பது மாறாத விசுவாச சத்தியம்.

இதை விமர்சிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை.

ஆனால் திவ்யநற்கருணையை பக்தி
பற்றிய நடைமுறைகள் மாறிக்கொண்டே வருகின்றன.

முதலில்

திவ்யநற்கருணை வாங்கும்போது முழந்தாள்ப்படியிட்டு, நாவில் வாங்கினோம்.

அடுத்து நின்று நாவில் வாங்கினோம்.

அடுத்து நின்று கையில் வாங்குகிறோம்.

முதலில் திவ்யநற்கருணையைப் பார்த்தவுடன் முழந்தாள் படியிட்டோம்.

இப்போது தலைவணங்குறோம்.

முதலில் திவ்யநற்கருணையைப் பீடத்தின் நடுப்பகுதியில் ஸ்தாபித்தோம்,

இப்போது

நடுப்பகுதியை பைபிளுக்குக் கொடுத்துவிட்டு

திவ்யநற்கருணையை ஓரத்தை ஒட்டி ஸ்தாபிக்கிறோம்.

மாற்றங்கள் பக்தியின் வளர்ச்சியைக் குறிக்கவேண்டும்,

தளர்ச்சியை அல்ல.

இத்தகைய
வேண்டாத மாற்றங்கள் குறித்து விமர்சித்தால் என்ன தப்பு?

ஆனால் ஒரு விசயம் உறுதி.

எந்த மாற்றத்தாலும் திருச்சபையின் விசுவாச சத்தியங்களில், 

போதனையில் கைவைக்க முடியாது.

பரிசுத்த ஆவி நம்மோடு இருக்கிறார்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment