நான் யார்?
****************-*****-*----******
"ஹலோ! என்னத்தப்போட்டு உருட்டிக்கொண்டிருக்கீங்க?"
"ஒண்ணையும் உருட்டல. என்னுடைய பேனாவைக் காணல. தேடிக்கிட்டிருக்கேன்."
"என்னுடைய பேனாவையா?"
"இல்ல. என்னுடைய பேனாவை."
"நானும் அதத்தானே சொல்றேன."
"நீ எதையும் சொல்லு.
பேச நேரமில்லை.
நான்......இதோ எடுத்திட்டேன். இப்ப ரெடி."
"எதுக்கு?"
"பேசத்தான்.
வாங்க, உட்காருங்க."
"உட்காருவது இருக்கட்டும். முதல்ல சொல்லுங்க. இது யாருடைய நாற்காலி? "
"முதல்ல என் கேள்விக்குப் பதில் சொல்லுங்க.
இது யாருடைய வீடு?"
"அதுகூட மறந்துபோய்ச்சா? உங்களுடைய வீடு."
"இல்ல. என்னுடைய வீடு."
"ஆமா, வார்த்தைக்கு வார்த்தை என்னுடைய, என்னுடையன்னு சொல்றீங்கள.
யாருங்க அந்த 'என்'?"
"நீங்க ஊனக்கண்ணால 'என்'னப் பார்க்க முடியாதுங்க."
"என்னது? உங்கள.."
"உங்களல்ல. என்ன."
"இப்போ உங்களுக்கு என்னாச்சி? "
"ஒண்ணும் ஆகல.
நான் கேட்கிற கேள்விக்குப் பதில் சொல்லுங்க.
நாம எல்லோருமே அடிக்கடி 'நான்' என்கிற வார்த்தையைப் பயன்படுத்துறோமே, அது யாரைக் குறிக்கும்? "
"It is 'First person, singular. It refers to the speaker."
"Hello! நான் இலக்கணக்குறிப்புக் கேட்கல.
நான் யார்"
"நீங்க ..."
"நீங்கல்ல. 'நான்' யார்?"
"உங்க கேள்வியே புரியல. பதில எங்கே போய்த் தேடுவேன்? நீங்களே தேடிச்சொல்லுங்க."
"கடவுள் மனிதனைப் படைக்கும்போது
முதலில் 'களிமண்ணால் மனிதனை உருவாக்கினார்'.
பின்பு 'அவன் முகத்தில் உயிர் மூச்சை ஊதவே, மனிதன் உயிருள்ளவன் ஆனான்.'
களிமண் + உயிர்மூச்சு = மனிதன்.
மனிதனை மனிதனாக்கியது களிமண்ணா? உயிர்மூச்சா?"
"உயிர்மூச்சுதான்.அது இல்லாவிட்டால் களிமண்தான் இருந்திருக்கும்."
"உயிர் மூச்சு நமது ஆன்மா.
களிமண் நமது உடல்.
இரண்டும் இணைந்தது மனிதன்.
இந்த அமைப்பில் சிந்திக்கும் திறன் பெற்றது ஆன்மாவா? உடலா? "
"களிமண் எப்படி சிந்திக்கும்?
ஆன்மாதான் சிந்திக்கும்."
"தன்னை 'நான்' என்று உணர்வது ஆன்மாவா? உடலா? "
"ஆன்மாதான்."
''அப்படியானால் 'நான்' யார்?"
"நமது ஆன்மாதான்.
ஆனால், உடல்தானே தன் வாய்மூலம் அதைச் சொல்கிறது."
"ஆன்மா சிந்தித்ததை
சொல்லவும்,
செயல்படுத்துவதற்கும்தான்
உடல் படைக்கப்பட்டு ஆன்மாவசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நமது உடல் hardware.
ஆன்மா software.
Software, hardwareமூலம் செயல்புரிகிறது."
"அதாவது உடலை இயக்குவது ஆன்மா.
ஆன்மா உடலைவிட்டு பிரிந்துவிட்டால் உடல் களிமண் மட்டும்தான்.
ஆன்மா அழியாது."
"ஆன்மா இறைவனை நோக்கிய தனது வாழ்விற்கு,
அதாவது, ஆன்மீக வாழ்வுக்கு,
உதவியாக தன்வசம் ஒப்படைக்கப்பட்ட உடலைப் பயன்படுத்தி
நித்திய பேரின்ப வாழ்வை அடையவேண்டும்.
இறைவனை அன்புசெய்து,
அவ்வன்பை இறைப்பணியிலும்,
இறைவனுக்காக பிறர்பணியிலும்
ஒளிரச்செய்ய
உடலைக் கருவியாகப் பயன்படுத்த வேண்டும்.
மாறாக,
உடல் தேடும் சிற்றின்ப ஆசைகளை நிறைவேற்றும் கருவியாக
தான்செயல்படக்கூடாது.
ஆன்மாவிற்கு சேவை செய்யதான் உடல் படைக்கப்பட்டது.
உடலுக்கு சேவை ஆன்மா படைக்கப்படவில்லை.
இறைவனுக்கு சேவை செய்யவே படைக்கப்பட்டது
ஆன்மாவிற்கு தூய தமிழ் வார்த்தையைத் தேடும் பணியை விட்டு விட்டு
அதைக் காப்பாற்றும் பணியில் இறங்குவோம்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment