Friday, August 10, 2018

"இப்போது திருப்பலியில் மாற்றியுள்ள சில சொற்கள் தூய தமிழ் சொற்கள் என நினைக்கிறேன். (உ.ம்) சமாதான் - வடமொழி அமைதி - தூய தமிழ்".

"இப்போது திருப்பலியில் மாற்றியுள்ள சில சொற்கள் தூய தமிழ் சொற்கள் என நினைக்கிறேன்.
(உ.ம்)
சமாதான் - வடமொழி
அமைதி - தூய தமிழ்".
*****************************

"அமைதியா?  சமாதானமா?" என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரை பற்றி ஒரு நண்பரின் பதிவுதான் இக்கட்டுரையின் தலைப்பு.

நண்பர் பைபிளை ஒரு இலக்கியமாக நோக்குவதுதான் இப்பதிவுக்குக் காரணம்.

இலக்கிய ஆராய்ச்சிக்காக பைபிள் எழுதப்படவில்லை.

பைபிள் இறைவனின் வார்த்தை,

அதாவது இறைவன் நமக்கு அருளும் நற்செய்தி. (Message)

நமது ஆன்மீக வாழ்வுக்காக இறைவனால் வழங்கப்பட்ட நற்செய்தி.

செய்தி உள்ளத்தில் உதிக்கிறது.

உள்ளத்தில் உதிக்கும் செய்தி ஒரு  கருத்து.(concept)

அதற்கு உரு கிடையாது.

கருத்து யார் உள்ளத்தில் இருக்கிறதோ அவர் மட்டுமே  அதை உணரமுடியும். 

அக்கருத்தை மற்றவர்கட்கு அறிவிக்கவேண்டுமாயின் அதற்கு உருக் கொடுக்கவேண்டும்.

அவ்வுருதான் மொழி.(Language)

மொழியின் உதவியின்றி நமது கருத்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ள முடியாது.

உலகில் எண்ணிறந்த மொழிகள் உள்ளன.

ஒருவர் தன் கருத்தை எந்த மொழியில் பரிமாறுகிராரோ அந்த மொழி தெரிந்தவர்கள் மட்டுமே  பரிமாறப்பட்ட கருத்துக்களைப் புரிந்துகொள்ள முடியும்.

மக்கள் கலப்பின் காரணமாக மொழிகளும் கலந்துவிட்டன,

அதாவது,

ஒரு மொழியின் சொற்கள் மற்றொரு மொழியோடு கலந்துவிட்டன.

இக்கலப்பு தவிர்க்க முடியாதது.

இக்கலப்பு காரணமாகத்தான் தமிழ்மொழியோடு வடமொழிச் சொற்கள் கலந்தன.

தமிழ்ச் சொற்கள் வடமொழியோடு கலந்தன.

ஆங்கிலேயர் வருகைக்குப்பின் எண்ணிறந்த ஆங்கிலச் சொற்கள் நமது வாய்க்குள் புகுந்து, தமிழோடு தமிழாக  வலம் வருவது நம் அனுபவம்.

தூய தமிழில் பேசுகிறோமா என்பது முக்கியமல்ல,

நாம் பேசுவது கேட்பவருக்குப் புரிகிறதா என்பதுதான் முக்கியம்.

நோய் சீக்கிரம் குணமாகவேண்டும் என்பதற்காக வெளிநாட்டு மருந்துகளைப் பயன்படுத்துவதில்லை?

அழகான தோற்றத்திற்காக வெளிநாட்டு Dressகளை அணிவதில்லை?

ருசிக்காக வெளிநாட்டு உணவு வகைகளை உண்பதில்லை?

விரைவான பயணத்திற்காக வெளிநாட்டு வாகனங்களைப் பயன்படுத்துவதில்லை?

விதவிதமான அநேக வெளிநாட்டு விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்துவதில்லை? 

இவற்றைப் பயன்படுத்தும்போது அவை சம்பந்தப்பட்ட வெளிநாட்டு சொற்களையும்தான் பயன்படுத்துகிறோம்.

பைபிள் பொருள் நயத்துக்காகவோ, மொழி நயத்துக்காகவோ எழுதப்பட்ட இலக்கியம் அல்ல.

இறை வெளிப்பாடுகளை நமக்கு அருள்வதற்காக பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் எழுதப்பட்ட ஆன்மீக நூல்.

முதலில் பைபிள் நூல்களை எழுதியவர்கள் அவர்கள் கால மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் அவர்கள் பேசிய மொழிகளில் எழுதினார்கள்.    

உலகெங்கும் இறைவார்த்தை எடுத்துச் செல்லப்பட்ட பின்பு பைபிள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.

தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது.

எந்த மொழியில் மொழிபெயர்க்கப்பட்டாலும் மூல நூலின் பொருள்மாறாமல் இருக்கவேண்டும்.

அதாவது எழுதியர் எந்த செய்தியைத் தரும் நோக்கோடு எழுதினாரோ அந்தச் செய்தி சிறிதும் மாறாமல் இருக்கவேண்டும்.

அதற்காக மக்கள் மத்தியில் வழக்கிலுள்ள சொற்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.

இறைச்செய்தியை மாற்றமின்றி தரும் சொற்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.

தூய தமிழ் மேல் ஆசைப்பட்டு இறைச்செய்தியை அதற்குப் பலி கொடுத்துவிடக்கூடாது.

"ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் அவன் ஆன்மாவிற்குக் கேடு விளைந்தால், அவனுக்கு வரும் பயனென்ன? ஒருவன் தன் ஆன்மாவிற்கு ஈடாக எதைக் கொடுப்பான்?" (மத்.16:26)

இது பழைய மொழிபெயர்ப்பு.

"மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?"

இது புதிய மொழிபெயர்ப்பு.

'ஆன்மா' (आत्मा)
என்பது வடமொழிச் சொல்லாம்.

ஆகவேதான் தூய தமிழான 'வாழ்வை'ப் புகுத்தினார்களாம்!

வாழ்வு தூய தமிழாக இருக்கலாம்.

ஆனால் பொருள்?

மனிதருக்கு வாழ்வு இருக்கிறது.

மிருகத்துக்கும்தான் வாழ்வு இருக்கிறது!

ஆனால்,

மிருகத்துக்கு ஆன்மா இருக்கிறதா?

ஆன்மா அழியாதது.

வாழ்வு சாவில் முடிந்து விடுமே!

விண்ணக வாழ்வுமட்டுமே நிலையான வாழ்வு.

"வாழ்வு என்ற வார்த்தை நிலை வாழ்வைத்தான் குறிக்கிறது " என்று வாதிடலாம்.

ஆனால்,

ஆன்மாதான் விண்ணகத்தில் நிலையாக வாழ்கிறது!

புதிய மொழிபெயர்ப்பாளர்கள் கருத்துப்படி

"வாழ்வு நிலையாக வாழ்கிறது" என்று கூறவேண்டும்!!

Soul lives,  but soul is not life.

Soul is a being that lives.

புதிய மொழிபெயர்ப்பை இப்படியும் தவறாகப்  புரிந்துகொள்ள இடம் இருக்கிறது :

"மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் செத்துப்போனால் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?"

"அந்த அர்த்தத்தில் எழுதவில்லை" என்று வாதிடலாம்.

ஆனால் அப்படியும் பொருள் கொள்ள இடம் கொடுக்கலாமா?

நண்பரின் பதிவுக்கு வருவோம்.

'சமாதானம்' வடமொழியாய் இருக்கலாம்.

ஆனால் தமிழர்கள் உரிய பொருளில் பயன்படுத்திக் கொண்ண்டிருக்கும் வார்த்தை.

ஏற்கனவே பைபிளின் பழைய மொழிபெயர்ப்பில் இருக்கும் வார்த்தை.

அதற்கு ஒரு பொருள்தான் இருக்கிறது. 

'அமைதி'  தமிழ்ச் சொல்தான். 

ஆனால் இரு பொருள்கொண்டது.

1.மாணவர்கள் வகுப்பில் அமைதியாக இருந்தார்கள்

The students were silent in the class.

2.மனதில் அமைதி வேண்டும்.
We should have peace of mind.

இருவருக்கிடையே சமாதானம் நிலவுகிறது என்றால், சமாதானம் நிலவுகிறது என்று அர்த்தம்.

அப்படீன்னா?

If you say that there is 'samaathaanam'  between two people, it only means they are at peace with each other.

ஆனால்,

அமைதி (Silence) நிலவும் இடத்தில்,

அமைதி (Peace) நிலவுகிறது என்று கூறமுடியாது!

முதல் உலகப்போர் முடிந்ததும்,

வென்ற நாடுகளுக்கும்,
தோற்ற நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று.

தொடர்ந்து அமைதி நிலவியது,

ஆனால் அமைதி நிலவவில்லை.

அதாவது,

போர்ச்சப்தம் நின்றது,

ஆனால் தோற்ற நாடுகள் இரண்டாம் உலகப்போருக்குத் தயாரிக்க ஆரம்பித்தன.

முதல் உலகப் போருக்குப் பின் கையெழுத்தான அமைதி ஒப்பந்தம்தான் இரண்டாம் உலகப்போருக்கான முதல் காரணம்.

இதிலிருந்து 'அமைதி' என்ற தூய தமிழ்ச் சொல்லின் இயலாமையைப் புரிந்துகொள்ளலாம்.

சமாதான நிலையைப் புரிந்துகொள்ள சமாதானம் என்ற சொல்லே பொருத்தமானது.

வடநாட்டுக் கோதுமை நம் வயிற்றுக்குள் நுழையும்போது, 

ஒரு வடசொல் தமிழுக்குள் நுளைவதில் தப்பு ஒன்றும் இல்லை.

வடமொழிச் சொல்லையே பயன்படுத்தக்கூடாது என்பவர்கள் பின்வரும் திருக்குறளை வாசிக்கவும்:

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் (भगवान)   முதற்றே உலகு."

இறைவனைக் குறிக்க வள்ளுவரே 'भगवान' என்ற வடமொழிச் சொல்லைப் பயன்படுத்துகிறார்.


அதை மாற்ற எந்த தமிழ் அறிஞரும் முயலவில்லை.

நாமும் நமக்குள் வந்த சமாதானத்தைக் காப்பாற்றுவோம்.

சமாதானத்தின் தேவன் நம்மைக் காப்பாராக!

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment