புதிய மொழிபெயர்ப்பின் விளைவாக இப்படியும் நடக்கலாம்.
*************--**-***************
தூய தமிழ் மொழிபெயர்ப்பின் காரணமாக இப்படியும் நடக்கலாம்.
"காலம் போகிற போக்கைப் பார்த்தால்,
நாம் இயேசுவுக்காக உயிரைத் தியாகம் செய்ய வேண்டிய காலம் நெருங்கிவிட்டது என்று நினைக்கிறேன்."
"ஹலோ! நீ எந்தக் காலத்தில் இருக்கிறாய்?
இப்போது இந்த விசயத்தில் திருச்சபையின் போதனை மாறிவிட்டது தெரியாதா?"
"என்ன உளருகிறாய்?"
"நான் ஒன்றும் உளரவில்லை. நீ பைபிளே வாசிப்பதில்லை என நினைக்கிறேன்."
"இது குறித்து பைபிள் என்ன சொல்கிறது?"
"மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும்
தம் வாழ்வையே இழப்பாரெனில்
அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?
அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?"
இதை நீ வாசித்ததில்லையா?"
"இதற்கு விளக்கம் கொடு."
" 'தம் வாழ்வையே இழப்பாரெனில்'
என்றால் 'செத்துப்போனால்'
என்று அருத்தம்.
'ஒருவர் உலகம் முழுவதையும் சொந்தமாக்கிக் கொண்டாலும் அவர் செத்துப்போனால் அவருக்கு என்ன பயன்?' என்பது பொருள்.
அதாவது எக்காரணத்தை முன்னிட்டும் உயிரை விட்டுவிடக்கூடாது."
"அப்போ உன் முடிவு?"
"எக்காரணத்தை முன்னிட்டும் என் உயிரை விட மாட்டேன்.
வேதத்திற்காக உயிரை இழப்பவர்கள் பைபிளுக்கு விரோதிகள்."
"அப்போ வேதசாட்சிகள்?"
"அது அந்தக்காலம். எத்தனை மாற்றங்களைச் சந்தித்திருக்கிறோம்?"
தூய தமிழுக்கு ஆசைப்பட்டு 'ஆன்மா'வை 'வாழ்வாக'மாற்றியதன் விளைவைப் பார்த்தீர்களா?
இப்போது எனக்கொரு சந்தேகம் வருகிறது.
ஆன்மாவை வாழ்வாக மாற்ற மொழி ஆர்வத்தைவிட வேறு ஏதாவது காரணமாக இருக்குமோ எனச் சந்தேகம் வருகிறது.
ஏனெனில் திருப்பலி செபங்களில் 'ஆன்மா' சேர்க்கப்பட்டுள்ளது
'உம் ஆன்மாவோடும் இருப்பாராக.'
வேறொரு காரணம் இருந்தால்
அது தவறான காரணமாகத்தான் இருக்கும்.
ஆபத்தான காரணமாகவும் இருக்கும்.
குருக்கள் யாராவது இவ்வரிகளை வாசிக்க நேர்ந்தால்
விளக்கம் தாருங்களேன்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment