Thursday, June 21, 2018

தியானம் எங்கே, நாமும் அங்கே.

தியானம் எங்கே,  நாமும் அங்கே.
****------*******-********---*************-**

"

தியானம் எங்கே,  நாமும் அங்கே.
****------*******-********---*************-**

"செபம் சொல்லும்போது Concentration வேணும்னு சொல்றீங்க,

செபமாலை சொல்லும்போது அது ரொம்ப கஸ்டமாயிருக்கே,  உங்களுக்கு எப்படி.? "

"அதுல என்ன கஸ்டம்னு நினைக்கிறீங்க?"

" மனதை ஒருநிலைப்படுத்தணும்னா சொல்ற செபமும் மனமும் இணைந்திருக்கணும்,

வாயொன்று சொல்ல மனம் வேறெங்கோ இருக்கக்கூடாது.

சரிதான?"

"சரிதான். ஆனால் செபமாலை  சொல்லும்போது என்ன பிரச்சினை?

செபமாலை இரகசியங்களைத் தியானித்துக்கொண்டே 'அருள் நிறைந்த மரியே' சொல்ல வேண்டும். அதில் என்ன பிரச்சினை? "

"பிரச்சினையே அங்கேதான்.

சொல்லும் செபத்திற்கும்,  தியானிப்பதற்கும் சம்பந்தமே இல்லை.

'அருள்நிறைந்த' செபத்தில் கபிரியேல் தூதர் தூதுரைத்த நிகழ்ச்சி வருகிறது.

தியானிப்பதற்கு கர்த்தர் பிறந்தது,  இரத்த வியர்வை வியர்த்தது, உயிர்த்தது போன்ற நிகழ்ச்சிகள் வருகின்றன.

நாம் தியானிக்க வேண்டியது எதை?

அருள் நிறைந்த செபத்தையா? உயிர்த்த நிகழ்ச்சியையா? "

"இதில பிரச்சினையே இல்லை.

ஒரு வருடம் வெளிநாட்டில் இருந்துவிட்டு அம்மாவைப் பார்க்க வந்திருக்கிறீர்கள்.

அம்மா சமயல்கட்டில் நின்று சமையல் வேலையைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் அருகில் நின்றுகொண்டு உங்கள் வெளிநாட்டு அனுபவங்களை விபரித்துக்கொண்டிருக்கிறீர்கள்.

இந்த அனுபவத்தை நீங்களே விபரியுங்கள் பார்ப்போம்."

"சரி.

அம்மாவையும், அவர்கள் செய்துகொண்டிருக்கும் சமையல் வேலைகளை ரசித்துக்ககொண்டே அனுபவங்களை விபரித்துக்கொண்டிருக்கிறேன்.

அம்மாவும் வேலைக்கிடையே அப்பப்போ என்னைப் பார்த்து அன்புடன் புன்முறுவல் பூக்கிறார்கள்.

இடையிடையே பேசவும் செய்கிறார்கள்.

இப்போ ஒரு கப் காபி தருகிறார்கள்.

அதைக் குடித்துக்கொண்டே அம்மாவுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்."

"போதும்.

இப்போது உங்கள் மனது உங்கள்  அனுபவங்கள்,  அம்மா, அவர்களுடைய வேலை, அவர்களுடைய அன்பு ஆகிய எல்லாவற்றிலேயும்தானே இருக்கிறது."

"ஆமா."

இப்போ இன்னொரு காட்சி.

இயேசு சிலுவையைச் சுமந்துகொண்டு போகிறார்.

மாதாவும் அழுதுகொண்டே பின்தொடர்கிறார்கள்.

மாதாவுடன் நீங்களும் போகிறீர்கள்.

  மாதாவுடன் பேசிக்கொண்டே,

அதாவது  

மாதாவை நோக்கி

'அருள் நிறைந்த ' செபத்தைச் சொல்லிக்கொண்டே 

இயேசுவின் பாடுகளைக் கவலையுடன்

பார்த்துக்கொண்டே போகமுடிமா? "

"முடியும்.

சமையல்கட்டில் அம்மாவின் வேலைகளை இரசித்துக்கொண்டே என் அனுபங்களைக் கூறியதுபோல

இயேசுகளின் பாடுகளைத் தியானித்துக்ககொண்டே

மாதாவுக்குள்ள செபத்தை மாதாவுக்குச் சொல்கிறேன்.

மாதாவுடன் பேசும்போது இயேசுவையும்  கவனிக்கிறேன்.

அப்படியே ஒவ்வொரு இரகசியத்தைத் தியானிக்கும்போதும்

மாதா என் அருகில் இருப்பதுபோல

நினைத்துக்கொள்கிறேன். சரியா? "

"Very good. உங்கள் கேள்விக்கு நீங்களே விடை அளித்துவிட்டீர்கள்.

மனம் ஒரு குரங்கு.

கொஞ்சக் கவனக்குறைவாய் இருந்தால்  நாம் ஒன்றைத் தியானித்துக்கொண்டிருக்கும்போது
சம்பந்தமே இல்லாத. நிகழ்ச்சிக்குத் தாவும்.

அப்பப்போ  பிடித்துக் கட்டிப்போடவேண்டியதுதான்.

நமது தியான எல்லையை விட்டு அது வெளியே போகாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.

எதைப்பற்றித் தியானிக்கிறோமோ

அங்கே நாம் இருப்பதாகக் கற்பனை செய்துகொள்ள வேண்டும்.

அப்படிச் செய்தால் மனம் அந்த இடத்தை விட்டு வேறெங்கும் போகாது.

செபம் செய்வோம்.

செபமாலை சொல்வோம்.

மாதாவுடன்  இயேசுவை பின்தொடர்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment