Thursday, June 14, 2018

சிறிய வடிவில் பெரிய தியானம்.

சிறிய வடிவில்
பெரிய தியானம்.
*******************************
ஒரு நாள் பிரசங்கத்தில் சுவாமியார் சொன்னார்,

"ஒவ்வொரு நாளும் காலையில் மூவொரு கடவுளின் நினைவுடன்தான் கண் விழிக்க வேண்டும்.

ஒவ்வொரு நாளையும் தந்தை, மகன், தூய ஆவியின் பெயரோடுதான் ஆரம்பிக்க வேண்டும்.

'தந்தை, மகன், தூய ஆவியின்'

என்று கூறும்போது மனதில்
பரிசுத்த தமதிரித்துவத்தைப் பற்றித் தியானிக்க வேண்டும்.

நாள் முழுவதுமே ஒவ்வொரு வேலையையும் தமதிரித்துவ தியானத்தோடுதான் ஆரம்பிக்க வேண்டும்."

இறைவன் ஆவி, உருவமற்றவர்.

மனிதர்களாகிய நம்மால்

உருவமுள்ள பொருட்களையே

புறக்கண்ணால் பார்க்கமுடியும்.

ஒரு ஆளையோ, பொருளையோ நினைத்துப் பார்கக்கும்போது

உருவம்தான் மனதில் தோன்றும்.

அப்படியானால்

உருவமற்ற கடவுளை

எப்படி  நினைத்துப் பார்ப்பது?

நமது மனதில்

பதியக்கூடியவற்றை

இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

1. ஆட்கள்,  பொருட்கள்.(Persons and things)

2.கருத்துக்கள். (Concepts)

1. ஆட்கள் இருவகை:

உருவம் உள்ள மனிதன்,

உருவமற்ற கடவுள், சம்மனசுக்கள்.

கடவுள் உருவமற்றவர் மட்டுமல்ல, அளவுகடந்தவர்.

நமது புத்தியும், மனமும் அளவுள்ளவை.

அளவில்லாத கடவுளை

எப்படி

அளவுள்ள மனதில் பதியவைப்பது?

மனதில் பதியவைத்தபின்தான் தியானிக்க முடியும்.

அதற்காக நமது புத்தி ஒரு வேலை செய்கிறது.

அளவில்லாத கடவுளுக்கு

அளவுள்ள உருவத்தைக் கொடுக்கிறது.

அது கற்பனை உருவம்தான்.

தந்தையாகிய இறைவனுக்கு அது கொடுத்திருக்கும் உருவம்,

நீளத் தாடியுள்ள வயசான தாத்தா,

அவர் கையில் உலக உருண்டை.

'தந்தை' என்று சொன்னவுடன்

  மனதில் பதிந்துள்ள

இந்த உருவம் ஞாபகத்திற்கு வரும்.

அதோடு இறைவன் உலகைப் படைத்த கருத்தும் ஞாபகத்திற்கு வரும்.

மகன் மனுவுரு எடுத்ததால்
அவரை நினைத்துப் பார்ப்பது எளிது.

மகனை நினைக்கும்போது அவர் உலகை இரட்சித்தது நினைவுக்கு வரும்.

பரிசுத்த ஆவிக்கு,

பைபிளில் வரும்

புறா

அல்லது

நெருப்பின் நாக்கு வடிவம்

மனதில் பதிந்திருக்கும்,

பைபிள் வாசிப்பவர்கட்கு.

பரிசுத்த ஆவி

அன்பின் கடவுளாகையால்

அவர் பெயரை உச்சரிக்கும்போது

இறைவன் நம்மீது கொண்டுள்ள

அளவற்ற அன்பு

ஞாபகத்திற்கு வரும்.

ஆக தமதிரித்துவ செபம் சொல்லும்

ஒவ்வொரு முறையும்

இறைவன் நம்மைப்

படைத்தார்,

இரட்சித்தார்,

அன்பு செய்கிறார்

என்று தியானிக்கிறோம்.

படைப்பு, இரட்சிப்பு, அன்பு- -

இம்மூன்றும் முழு பைபிளின் சுருக்கம்.

ஆக இந்த செபம் சொல்லும் ஒவ்வொரு முறையும்

பைபிளை முழுவதும் தியானிக்கிறோம்.

'தந்தை,  மகன்,  தூய ஆவியாரின் பெயராலே, ஆமென்,

என்று செபிக்கும்போது,

'நம்மைப்

படைத்து,

இரட்சித்து,

அன்பு செய்கிற

இறைவன் பெயராலே,

ஆமென்.

என்று சுருக்கமாக தியானிக்கிறோம்.

சிறிய வடிவில் பெரிய தியானம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment