ஊதாரி மைந்தன் உவமை போதிக்கும் இறையியல் உண்மைகள்.
******************-***--*********
1. இறைவன் அன்பு நிறைந்த தந்தை, நாம் அவரது பிள்ளைகள்.
2. உவமையில் வரும் தந்தை மக்களுக்குப் பரிபூரண சுதந்திரம் கொடுத்திருக்கிறார்.
நமது சுதந்திரத்தில் அவர் தலையிடுவதில்லை.
அதனால்தான் இளையமகன்,
"அப்பா, சொத்தில் எனக்கு வரவேண்டிய பங்கைக் கொடும்"
என்று கேட்டவுடன் மறுப்பு ஏதும் கூறாமல் அவர்களுக்குப் பகிர்ந்துகொடுத்தார்.
இளைய மகன் சொத்தைப் பெற்றுக்கொண்டு பிரிந்துபோவதுபோல்
நாமும் பாவம் செய்யும்போது இறைவனை விட்டுப் பிரிந்து செல்கிறோம்.
இறைவன் நம்மை விட்டுப் பிரிவதில்லை, நாம்தான் பிரிகிறோம்.
3. மகன் பிரிந்து சென்றாலும் தந்தையின் அன்பு மாறவேயில்லை.
நாம் எத்தனை பாவங்கள் செய்தாலும் இறைவன் நம்மீது கொண்டுள்ள அன்பு மாறாது,
ஏனெனில் இறைவன் மாறாதவர்.
கடவுளின் எந்த பண்பும் நித்தியமானது, அதாவது துவக்கமும் முடிவும் இல்லாதது.
அவர் நம்மை நித்தியமாக அன்பு செய்கிறார்.
நாம் அவரை வெறுத்தாலும் அவரது அன்பு மாறாது.
4. மகன் ஏன் தந்தையிடம் திரும்புகிறான்?
"என் தந்தையின் கூலியாட்கள் எத்தனையோ பேருக்கு நிறைய உணவு இருக்க, நான் இங்குப் பசியால் மடிகிறேன்! எழுந்து என் தந்தையிடம் போவேன்."
அவன் பசியால் மடிவதால் திரும்புகிறான்,
அதாவது வயிறார உணவு கிடைத்திருந்தால் திரும்ப நினைத்திருக்கமாட்டான்.
இந்த இடத்தில் உவமை போதிப்பது என்ன?
இறைவன் நமக்கு கஷ்டங்களை அனுமதிப்பது நம்மை மனம் திருப்புவதற்காகத்தான்.
Sufferings are blessings in disguise as they turn us towards God.
5. தந்தையின் அன்பு நிபந்தனை அற்றது.
மகன் திரும்புதால் தந்தைக்கு ஆதயம் ஏதுமில்லை.
ஆனால் அன்பு ஆதயத்துக்காக அல்ல,
அன்பிற்காகவே அன்பரைத் தேடும்.
இறைவனின் அன்பும் நிபந்தனை அற்றது.
அன்பு அவரது இயல்பு.
Love is God's nature.
He cannot but love us.
அவரால் நம்மை அன்பு செய்யாமல் இருக்க முடியாது.
எப்படி நெருப்பால் ஒளி தராமல் இருக்க முடியாதோ,
எப்படி தண்ணீரால் நனைக்காமல் இருக்க முடியாதோ,
அப்படியே இறைவனால் நேசியாமல் இருக்க முடியாது.
அதனால்தான் நாம் எத்தனை முறை, எவ்வளவு பெரிய பாவம் செய்தாலும்
மன்னிக்கத் தயாராக இருக்கிறார்.
6. "அப்பா, வானகத்திற்கு எதிராகவும், உமக்கு முன்பாகவும் குற்றம் செய்தேன்.
இனிமேல் நான் உம்முடைய மகன் என்று எண்ணப்படத் தகுதியற்றவன். என்னை உம்முடைய கூலியாட்களுள் ஒருவனாக நடத்தும்" என்று அவரிடம் சொல்வேன்"
செய்த பாவத்திற்காக வருந்திய ஊதாரி மைந்தன் தன் பாவங்களை சங்கீர்த்தனம் செய்யத் தீர்மானிக்கிறான்.
பாவசங்கீத்தனத்தின் அவசியம் இந்த உவமையில் பொதிந்திருக்கிறது!
இறைவன் நமது பாவங்களை மன்னிக்க எப்போதும் தயார்,
நாம் செய்ய வேண்டியதெல்லாம்
பாவங்களுக்காக வருந்தி,
அவற்றை சங்கீர்த்தனம் செய்ய வேண்டியதுதான்.
7. தந்தை தன் ஊதாரி மைந்தனின் வருகைக்காக வழிமேல் விழி வைத்துக் காத்துக்கொண்டிருக்கிறார்.
நமது விண்ணகத் தந்தையும் பாவிகளை மன்னித்து ஏற்றுக்கொள்ள எப்போதும் தயாராக இருக்கிறார்.
8. மனம் திரும்பும் பாவிகட்காக விண்ணகத்தில் விருந்து தயாராக உள்ளது.
பாவங்களுக்காக
வருந்துவோம்,
'
பாவசங்கீத்தனம் செய்வோம்,
மன்னிப்புப் பெறுவோம்,
விண்ணக விருந்தில் கலந்துகொள்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment