Wednesday, June 20, 2018

செபமாலை ஒரு பைபிள் தியானம்.

செபமாலை ஒரு பைபிள் தியானம்.
*****************----******-***-----**

"சார் என்ன, சப்தத்தையே காணோம்.",

"ஒரு கேள்வி மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தது. "

"நீங்களும் ஓடிக்கொண்டிருந்தீர்கள்,

அதாவது நான் இதுவரைச் சொன்னதைக் கவனிக்கவேயில்லை! ''

"கவனித்தேன். ஆனாலும் இன்னொரு கேள்வியும் மனதை உறுத்திக்கொண்டே இருந்தது."

"சரி கேளுங்கள்."

"ஒரு கிறிஸ்தவன் கிறிஸ்துவைத்தானே பின்பற்ற வேண்டும்?

நீங்கள் ஏன் 'அம்மா, அம்மா' என்று மாதா பின்னாலே ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்? "

"ஹலோ! இந்தக் கேள்வியை நீங்கள்  முதலில்

கிறிஸ்துவிடம் கேட்டிருக்க வேண்டும்.

'ஆண்டவரே!

எங்களை இரட்சிப்பதற்கென்று பிறந்துவிட்டு,

33 ஆண்டு வாழ்க்கையில்

30 ஆண்டுகளை அம்மாகூட இருந்தே

வேஸ்ட் பண்ணிட்டடீங்களே!'

என்று கிறிஸ்துவிடம் கேட்டிருக்க வேண்டும்.

கேட்டிருந்தால் எங்கிட்ட கேட்கவேண்டிய அவசியம் இருந்திருக்காது."

"இப்போ நீங்க பதில் சொல்லுங்க."

"நாங்கள் கிறிஸ்துவைப் பின்பற்றுவதால்தான் மாதாமீது பக்தி வைத்துள்ளோம்."

"அதெப்படி?"

"இயேசுவின் அறிவுரைப்படி

அவரது
விண்ணகத் தந்தையை

'எங்கள் தந்தையே என்று அழைக்கிறோம்.

இயேசுவை நேசிப்பதால்தான்

அவரின் மண்ணகத் தாயை 'எங்கள் தாயே'

என்று அழைக்கிறோம்.

இதில் என்ன தவறு இருக்கிறது ?

நமது தாயை நேசிப்பதில் என்ன தவறு  இருக்கிறது?

நமது தாயிடம் பேசுவதில் என்ன தவறு இருக்கிறது?

தாயை அவமதிப்பது மகனை அவமதிப்பதுபோல்தான்."

"சரி, சரி.

நேசியுங்கள்,  பேசுங்கள்.

அதென்ன செபமாலை?

புரியவில்லை."

"செபமாலை மூலம் மாதாவிடம் பேசுகிறோம்.

அதில் எது புரியவில்லை? "

"பைபிள் வாசிக்கும் பழக்கம் உண்டென்று நினைக்கிறேன்."

"ஹலோ! பைபிள்தான் எங்கள் உயிர்."

"சந்தோஷம். பைபிள் கையில் இருக்கா? "

"இருக்கு."

"பைபிளைத் திறந்து லூக்காஸ் 1: 28ஐ வாசியுங்கள்."

" தூதர் அவளது இல்லம் சென்று, " அருள் நிறைந்தவளே வாழ்க, ஆண்டவர் உம்முடனே " என்றார்."

"யாருடைய தூதர்? "

"கடவுளின் தூதர்."

"யாரை வாழ்த்துகிறார்?"

"மரியாளை."

"என்ன சொல்லி வாழ்த்துகிறார்? "

" அருள் நிறைந்தவளே வாழ்க, ஆண்டவர் உம்முடனே."

"இன்னொரு நேரம் சொல்லுங்க."

"அருள் நிறைந்தவளே வாழ்க, ஆண்டவர் உம்முடனே"

"இன்னொரு நேரம் சொல்லுங்க."

"அருள் நிறைந்தவளே வாழ்க, ஆண்டவர் உம்முடனே"

"இன்னொரு நேரம் ....."

"ஹலோ!  என்னையே செபமாலை சொல்ல வைக்கிறீங்க!

சரி.

செபமாலை செபங்கள் பைபிளிலிருந்து எடுக்கப்பட்ட வசனங்கள்தான்.

ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனாலும் ஒன்று புரியவில்லை.

சொன்ன செபத்தையே திரும்பத்திரும்ப சொல்றீங்க."

"அதனால்தான் அதற்கு செபமாலைன்னு பெயர்.

ஒரே ஒரு பூவைக்கொண்டு பூமாலை கட்டமுடியுமா?"

"நான் அதைக் கேட்கல, சார்.
ஒரே செபத்தை 53 தடவை சொல்றதைவிட

அத்தனை வெவ்வேறு செபங்களைக் கோர்த்து

செபக்கதம்பமாலையாகச் சொல்லலாமே."

"செபம் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.

செபத்தின் அடிப்படைத்தேவை

நம் மனம் இறை மனத்தோடு

இணைய வேண்டும் என்பதுதான்.

ஆனால் நாம் இப்போது சொல்லும்  செபமாலை

நமது அன்னையே

புனித டோமினிக் வழியாக

நமக்குத் தந்தது.

செபமாலையை நமக்குத் தந்த அன்னையை

'செபமாலை அன்னை என்று அழைக்கிறோம்.

'The rosary was given to Saint Dominic 

in an apparition

by the Blessed Virgin Mary

in the year 1214

in the church of Prouille.

This Marian apparition

received the title of 

Our Lady of the Rosary.

நம் அன்னையே தந்ததை
ஏன் மாற்றவேண்டும்?"

"புரிகிறது .

இப்போ புரிகிறது

செபமாலை

ஒரு பைபிள் தியானம் என்று.

ஒரு 153 மணி செமமாலை சொல்லும்போது

பைபிள்படியிலான

இயேசுவின்  வாழ்க்கை வரலாற்றையே

தியானித்து முடித்துவிடுகிறோமே!"

"ஹலோ! நீங்களா இப்படிச் சொல்றீங்க?

நம்ப முடியவில்லையே! "

"ஆமா, நான்தான் இப்படிச் சொல்றேன்.

நம்புங்கள்."

"மரியே வாழ்க."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment