தீமையிலிருந்து நன்மையை வரவழைக்கும் இறைவன்.
********************************
மாறாத கடவுள்
சதா மாறிக்கொண்டேயிருக்கும்
இந்த உலகத்தைப் படைத்தது
மிகப் பெரிய அதிசயம்.
அதை விடப் பெரிய அதிசயம்
மாறாத விதிகளின் அடிப்படையில்
அது மாறிக்கொண்டிருப்பதுதான்.
இயற்கையின் விதிகளில் எந்த மாற்றமும் ஏற்படவேயில்லை.
ஆகவேதான் மனிதனால் விஞ்ஞானத்தை உருவாக்க முடிந்தது.
மாறாத விதிகளின்படி இயங்கும்
மாறிக்கொண்டையிருக்கும் உலகை இறைவன் படைத்திருப்பது மிகமிகப் பெரிய அதிசயம்.
இறைவன் அழகான இவ்வுலகைப் படைத்தது
வெறுமனே உலகை அழகுபார்ப்பதற்காக அல்ல.
அம்மா விதவிதமான உணவுப்பண்டங்கள் தயாரிப்பது வெறுமனே அவற்றை அழகுபார்ப்பதற்காகவா?
நாம் உண்பதற்காகத்தானே அம்மா உணவு தயாரிக்கிறார்கள்.
அவ்வாறேதான் இறைவன் உலகைப் படைத்தது மனிதன் வாழ்வதற்காக.
ஆனால் நாம் நிரந்தரமாக இங்கு வாழ்வதற்காக அல்ல.
நாம் Trainஐ உண்டாக்கியிருப்பது பிரயாணம் செய்வதற்காக.
ஆனால் வாழ்நாளெல்லாம் பிரயாணம் செய்துகொண்டே இருப்பதற்காகவா?
ஏறவேண்டிய ஏறி
இறங்கவேண்டிய இடத்தில் இறங்குவதற்குத்தானே.
அவ்வாறேதான் இவ்வுலகில் நாம் வாழ்வது
மறுவுலக வாழ்வுக்காக நம்மைத் தயாரிப்பதற்காகத்தான்.
மறுவுலக வாழ்வே நிரந்தரமானது.
மறுவுலகில் இறைவனோடு நிரந்தரமாக வாழ்வதற்காகவே
இவ்வுலக வாழ்வு நமக்குத் தரப்பட்டுள்ளது.
மனிதன் உடலும், ஆன்மாவும் இணைந்த படைப்பு.
உடல்
மாறாத விதிகள் கொண்ட
மாறிக்கொண்டேயிருக்கும்
இவ்வுலக
இயற்கையைச் (Nature) சேர்ந்தது.
ஆன்மா
மறுவுலக வாழ்விற்கென்ற படைக்கப்பட்ட
Supernatural being.
நமது உடல் இயற்கைப் பொருட்களால் (தண்ணீர், காற்று, உலோகங்கள் etc.) ஆனதால் இயற்கை விதிகட்குக் கட்டுப்பட்டது.
ஆகவேதான் ஆன்மா உடலை விட்டுப் பிரியும்போது, உடல் மண்ணிற்குத் திரும்பிவிடுகிறது.
இயற்கை இயங்க இயற்கை விதிகள் தரப்பட்டுள்ளது போலவே,
ஆன்மா இயங்க Supernatural laws (Commandments of God) தரப்பட்டுள்ளன.
ஆனால் ஒரு வித்தியாசம், கடவுள் இயற்கைக்குச் சுதந்திரம் எதுவும் கொடுக்கவில்லை.
அது விதிகளின்படிதான் இயங்கும்.
காற்று வெப்பமடைந்தால் விரிவடையும்.
தண்ணீரை வெப்பப்படுத்தினால் ஆவியாகும்.
வேறுமாதிரி இயங்க முடியாது.
ஆனால் ஆன்மாவிற்குச் சுதந்திரம் (Freedom of choice) கொடுக்கப்பட்டுள்ளது.
ஆன்மா தன் சுதந்திரத்தைப் பயன்படுத்தி
விதிகளின்படி இயங்கவேண்டும்.
அப்படி இயங்கினால் மறுவுலகில் நித்தியமாக இறைவனோடு வாழும் சன்மானம் (Reward) கிடைக்கும்.
தன் சுதந்திரத்தை விதிகட்கு எதிராகப் பயன்படுத்தினால்
மறுவுலகில் இறைவனோடு
வாழும் சன்மானம் (Reward) கிடைக்காது.
இந்த இழப்பிற்கு ஆன்மாதான் முழுப் பொறுப்பு,
ஏனெனில் அது ஆன்மா தன் முழுச் சுதந்திரத்தைப் பயன்படுத்தித் தேடிக்கொண்ட இழப்பு.
இறைவன் நம் முதல் பெற்றோரை நல்லவர்களாகத்தான் படைத்தார்.
ஆனால் விதிகளை மீறி பாவம் செய்தமையால் நமக்குள் தீமை புகுந்தது.
தீமை உலகிற்குள் புகக் காரணமானவர்கள் நாம்தான்.
கடவுள் தீமை புகுவதைத் தடுக்கவில்லை.
ஏன்?
தீமையைத் தடுத்திருக்க வேண்டுமானால்
நமக்குச் சுதந்திரத்தைக் கொடுக்காமல் இருந்திருக்கவேண்டும்.
சுதந்திரம் இல்லாமல் எப்படி சன்மானம் பெறமுடியும்?
சுதந்திரத்தை இன்றி இயங்கினால்
நமக்கும்,
சாவி கொடுத்து இயங்கும் கடிகாரத்திற்கும்
என்ன வித்தியாசம்?
ஆனாலும், நாம் செய்யும் தீமையிலிருந்து நன்மையை வரவழைக்க இறைவனால் முடியும்.
வில்லனின் எதிர்ப்பிலிருந்து ஹீரோ வெற்றிக்கனி பறிப்பதுபோல,
தீமையிலிருந்து இறைவன் நன்மையை வரவழைக்கிறார்.
நாம் செய்த பாவந்தானே இறைவனை மனுவுரு எடுக்கச் செய்தது.
இறைவன் மனிதன் ஆனது நமக்குக் கிடைத்த பாக்கியம் அல்லவா!
இயேசுதானே நமக்குக் கிடைத்த செல்வம் !
யூதர்கள் இயேசுவைக் கொன்றது பாவம்,
ஆனால் அதிலிருந்து இயேசு நமது இரட்சண்யத்தைப் பிறப்பித்தார்.
நீரோ மன்னன் விசுவாசிகளைக் கொன்றான்,
அதுவே அவர்களைப் புனிதர்கள் ஆக்கியது.
வேதசாட்சிகள் சிந்திய இரத்தம்
திருச்சபையின் வித்தாக மாறியது.
புண்ணியவான்கள் மட்டுமே வாழும் பங்கில் பணிபுரியும் பங்குச்சாமியாரைவிட
பாவிகள் நிறைந்த பங்கில் பணிபுரியும் பங்குச்சாமியாருக்குதான் ஆன்மீகப்பணி அதிகம்,
விண்ணில் அவருக்குச் சன்மானமும் அதிகம்.
பகலில் எரியும் மெழுகுதிரியைவிட
இருட்டில் எரியும் மெழுகுதிரிக்கே மதிப்பு அதிகம்.
புனிதமான திருச்சபையே பாவிகளின் கூடாரம்தான்,
ஆஸ்பத்திரி வியாதியஸ்தர்களின் புகலிடமாக இருப்பதுபோல.
பாவிகளைப் பரிசுத்தவான்கள் ஆக்குவதே
திருச்சபையின் பணி.
திருச்சபைக்குள் வாழ்வோரிடம்கூட குழப்பங்கள் இருப்பதைப் பார்க்கிறோம்.
அவற்றைப் பார்த்து நாம் பயப்பட வேண்டியதில்லை.
ஏனெனில் குழப்பவாதிகளால் திருச்சபையை ஒன்றும் செய்துவிடமுடியாது,
ஏனெனில் அது கல்லின்மீது கட்டப்பட்ட வீடு.
குழப்பங்களிலிருந்தும் நன்மையை வரவழைக்க இறைவனால் முடியும்.
ஏனெனில் அவர் சர்வ வல்லவர்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment