நம்புங்கள், செபியுங்கள், நல்லது நடக்கும்.
*******************************
நமது செபத்தின் வெற்றிக்கான படிகள்.
1. நம்புங்கள்.
2. செபியுங்கள்.
3. நல்லது.
4. நடக்கும்.
கணிதவகுப்பு,
ஆசிரியர் சொல்கிறார்,
"இப்போ போடப்போற கணக்கின் விடை சரியாக வரவேண்டுமானால் அதற்குரிய எல்லா படிகளும் (Steps) சரியாக இருக்க வேண்டும். ஒரு படி தவறாக இருந்தால்கூட சரியான விடை கிடைக்காது"
இது கணக்கிற்கு மட்டுமல்ல, எல்லா அனுபவங்களுக்கும் பொருந்தும்.
ஒருவர் ஒரு ஊருக்கு கேட்டார்.
"Straight ஆ போங்க.
முதல் Junction ல்ல Right ல திரும்புங்க.
அடுத்து ஒரு Junction வரும்.
அதில Left ல திரும்புங்க.
அப்புறம் Straight ஆ போங்க." என்றார்.
வழிகேட்டவர்
முதல் Junctionல்ல left ஆ திரும்பி,
அடுத்த Junctionல்ல Right லதிரும்பிப் போனால்
ஊருக்குப் போவாரா?
ஊருக்குப் போவார், ஆனால் வேறு ஏதாவது ஊருக்குப் போவார்.
இப்போ செபத்துக்கு வருவோம்.
செபம் வெற்றி பெற
முதலில் நம்ப வேண்டும்.
எதை நம்ப வேண்டும்?
நல்லது நடக்கும் என்று நம்ப வேண்டும்.
அதாவது செபத்தின் இறுதியில்
என்ன நடந்தாலும்
அது நமக்கு நல்லதாகத்தான் இருக்கும்
என்று நம்பவேண்டும்.
அப்புறம் செபிக்கவேண்டும்.
எப்படி செபிக்கவேண்டும்?
நம்பிக்கையோடு செபிக்க வேண்டும்.
அதாவது
செபத்தின் விளைவாக
எது நடந்தாலும்
அது நமது நன்மைக்காகத்தான் இருக்கும்
என்ற நம்பிக்கையோடு
செபிக்க வேண்டும்.
உறுதியான நம்பிக்கையோடு செபித்தால் வெற்றி உறுதி.
ஒரு பையனுக்கு ஒரு பெண்ணைப் பிடித்திருக்கிறது.
அந்தப் பெண் தனக்கு மனைவியாக வரவேண்டும் என்று அவன் இறைவனிடம் செபிக்கிறான்.
அவன் உண்மையான பக்தனாக இருதால் எப்படி செபிப்பான்?
"இறைவா,
எனக்கு இந்தப் பெண்ணைப் பிடித்திருக்கிறது.
அவளையே திருமணம் செய்ய விரும்புகிறேன்.
அவளே என் மனைவியாக ஆக அருள்புரியும்.
ஆயினும் எனது விருப்பப்படியல்ல,
உமது சித்தப்படியே நடக்கட்டும்.
ஏனெனில் எனக்கு எது நல்லது என்று
உமக்கு மட்டுமே தெரியும். "
இந்த செபம் கேட்கப்படும்.
எது நடந்தாலும் இறைவன் சித்தப்படியே நடக்கும்.
கத்திதான் வேண்டும் என்று அடம்பிடிக்கும் எந்த பிள்ளைக்கும்
ஒரு நல்ல தகப்பன் அதை வாங்கிக்கொடுக்கமாட்டான்.
இறைவன் நமது நல்ல தந்தை.
நமக்குக் கெடுதியானவற்றை
நாம் எப்படி அடம் பிடித்துக் கேட்டாலும்
அவர் எப்படித் தருவார்?
நாம் செபிக்கும்போது,
1. இறைவன் நமக்கு நல்லதை மட்டுமே செய்வார் என உறுதியாக நம்புவோம்
2.அந்த நம்பிக்கையுடன் செபிப்போபம்.
3.நமக்கு எது நல்லதோ அதைக் கட்டாயம் கடவுள் தருவார்.
4.இறைவனால் எது நடந்தாலும் அது நமது நன்மைக்காகத்தான் இருக்கும்.
லூர்து செல்வம் ..
No comments:
Post a Comment