ஒரு பஸ்க்கு ஒரே ஒரு ட்ரைவர்.
********-***--*********---******--*
தென்காசி to நெல்லை பேருந்து.
21 எண்ணிட்ட இருக்கையில் அமர்ந்திருக்கிறேன்.
நான்மட்டுமல்ல, பலர் அவரவர் இருக்கையில் அமர்ந்திருக்கின்றனர்.
பேருந்து ஓடிக்கொண்டிருக்கிறது.
அருகிலிருந்த நண்பர் (அவர எனக்கு முன்னபின்ன தெரியாது. மரியாதையயின் நிமித்தம் நண்பர் என்றேன்.) என்னைப்பார்த்து,
"சாருக்கு எந்த ஊரோ?"
"கீழப்பாவூர்."
"என்ன வேலை பார்க்கிறீங்க?"
"ஓய்வு பெற்ற ஆசிரியர்."
"ரொம்ப சந்தோசம்."
"நான் ஓய்வு பெற்றதில உங்களுக்கு என்ன சந்தோசம்?"
"சார், நீங்க ஆசிரியர்ங்கதுல ரொம்ப சந்தோசம்னேன்."
"அப்படியா?"
"எனக்கு Teachers கூட பேசுவது ரொம்ப பிடிக்கும்.
உங்ககூட கொஞ்சம் பேசலாமா? "
"கொஞ்சம் என்ன, நிறையவே பேசலாம். பேசுவதென்றால் எனக்கு சர்க்கரைப் பொங்கல் சாப்பிடுகிறது மாதிரி. "
"நான் ஒரு கேள்வி கேட்பேன். மனதில் பட்ட பதிலைக் கூறவேண்டும்.
இந்த பஸ்ல அறுபது பேர் பயணம் செய்கிறோம்.
இதை வைத்து ஒரு தத்துவ உண்மை கூற முடியுமா?
ஆசிரியரால் முடியும் என்று நினைக்கிறேன்."
"ஏன் முடியாது?
60 பேர் ஒரு பஸ்ல பயணிக்கிறோம்."
"ஆமா"
"அதாவது ஒரு பஸ்ல 60 பேர் பயணிக்கிறோம்."
"இரண்டும் ஒன்றுதானே?"
"இல்லை. முதல் வாக்கியம் பயணிகளைப் பற்றி.
இரண்டாவது வாக்கியம் வாகனத்தப் பற்றி."
"There is shift in the stress, correct? "
"Correct. எத்தனை பயணிகள் பயணிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல, எத்தனை பஸ்ல போகிறார்கள் என்பதுதான் இங்க முக்கியம்.
ஒரு பஸ், ஒரு ட்ரைவர்.
ஒரு பஸ்க்கு ஒரே ஒரு ட்ரைவர்.
அதாவது ஒரு பஸ்ஸ பல ட்ரைவர்கள் ஓட்ட முடியாது."
"சார், தத்துவம் ரூட் மாறிப் போய்க்கிட்டிருக்கு."
"இல்ல, சரியான ரூட்லதான் போய்க்கிட்டிருக்கு.
நீங்க Protestant Pastor, அதுதான் என்னுடைய ரூட் தப்பான ரூட் மாதிரி உங்களுக்குத் தெரியுது."
"அப்போ நீங்க கத்தோலிக்க குருவா? "
"இல்லை, சாதாரண விசுவாசி.
அது இருக்கட்டும்.
சொல்ல வந்தத முதல்ல சொல்லி முடிச்சிடுறேன்.
நாம் விண்ணகம் நோக்கிப் பயணிக்கும் வாகனம்
இயேசுவால் நிருவப்பட்ட ஒரே திருச்சபை .
ஒரே திருச்சபைக்கு ஒரே தலைவர்,
ஒரு பஸ்க்கு ஒரே ஒரு ட்ரைவர் மாதிரி.
தத்துவம் புரியுதா?"
"புரியுது.
நாங்களும் அதத்தான சொல்றோம்.
ஒரே தலைவர் கிறிஸ்து என்று."
"நான் சொன்னது உங்களுக்குப் புரியல.
நான் சொன்னது,
'ஒரே திருச்சபைக்கு ஒரே தலைவர்,'
ஆயிரக்கணக்கான திருச்சபைகட்கு என்று நான் சொல்லவில்லை."
"ஆயிரக்கணக்கான திருச்சபைகளில
நீங்க இருப்பதுதான்
'ஒரே திருச்சபை'
என்று எத வச்சி சொல்றீங்க?"
"இது சரியான கேள்வி .."
"கேள்வி மட்டும் சரியா இருந்தால் போதாது.
பதிலும் சரியா இருக்கணும்."
"இயேசுவுக்கு ஏராளமான சீடர்கள் இருந்தாங்க.
அதுல 12 பேர அப்போஸ்தலர்களாக நியமித்தார்.
சரியா?"
"சரி."
"அப்போஸ்தலர்களின் தலைவராக இராயப்பரை நியமித்தார்.
சரியா?"
"சரியில்லை."
"அப்படீன்னா இயேசுவின் சொற்களில உங்களுக்கு நம்பிக்கை இல்லை."
"இயேசு எப்போ சொன்னார்?"
"இது கேள்வி.
இத வாசிங்க."
" "இயேசு சீமோன் இராயப்பரை நோக்கி, "அருளப்பனின் மகனான சீமோனே, இவர்களைவிட நீ அதிகமாய் எனக்கு அன்புசெய்கிறாயா ?" என்று கேட்டார். அவர் அதற்கு, "ஆம், ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர்" என்றார். இயேசுவோ அவரிடம், "என் ஆட்டுக்குட்டிகளை மேய்" என்றார்.
16 இரண்டாம் முறையாக இயேசு அவரை நோக்கி, "அருளப்பனின் மகனான சீமோனே, நீ எனக்கு அன்புசெய்கிறாயா ?" என, அவர் அவரை நோக்கி, "ஆம், ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர்" என்றார். இயேசுவோ அவரிடம், "என் ஆடுகளைக் கண்காணி" என்றார்.
17 மூன்றாம் முறையாக அவரை நோக்கி, "அருளப்பனின் மகனான சீமோனே, என்னை நீ நேசிக்கிறாயா ?" என்று கேட்டார். "என்னை நேசிக்கிறாயா ?" என்று அவர் மூன்றாம் முறையாகக் கேட்டதால், இராயப்பர் மனம்வருந்தி இயேசுவை நோக்கி, "ஆண்டவரே, உமக்கு எல்லாம் தெரியுமே: நான் உம்மை நேசிக்கிறேன் என்பது உமக்குத் தெரியும்" என்றார். இயேசு அவரிடம், "என் ஆடுகளை மேய்."
(அரு.21: 15 - 17)
வாசிச்சாச்சி."
"மேற்படி உரையாடல் எப்போது நடந்தது?'
"இயேசு உயிர்த்தபின்."
"இயேசு எத்தனை முறை
'என்னை நீ நேசிக்கிறாயா ?'
என்று இராயப்பரிடம் கேட்டார்?"
"மூன்று முறை."
"முதல் முறை ஆண்டவர் 'என் ஆட்டுக்குட்டிகளை மேய்' என்றார்.
இரண்டாம் முறை, 'என் ஆடுகளைக் கண்காணி' என்றார்.
மூன்றாம் முறை, 'என் ஆடுகளை மேய்.' என்றார்.
இந்த மூன்றுக்கும் சரியான விளக்கம் கொடுங்களேன்."
"நான் கொடுத்தாலும் நீங்க அத ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. நீங்களே கொடுத்திடுங்க."
"அப்படீன்னா நான் கொடுக்கிற விளக்கத்தை நீங்களும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லைன்னு சொல்லாமல் சொல்றீங்க."
"அப்படிச் சொல்லல.
பிடிச்சா ஏற்றுக்கொள்வோம்."
"உங்களுக்கு பிடிச்சாலும், பிடிக்காவிட்டாலும் சொல்லத்தான் போறேன்.
இயேசுவின் திருச்சபை ஒரு மூன்றடுக்கு அமைப்பு.
1. சாதாரண விசுவாசிகள். (The laity) என் ஆட்டுக்குட்டிகள்.
2. குருக்கள், ஆடுகள்.
3. ஆயர்கள், ஆடுகள்.
இம்மூவருக்கும் தலைவராக இராயப்பர் நியமிக்கப்பட்டார்.
விசுவாசிகள் மீது இயேசுவுக்கு உள்ள அக்கரையைப் பாருங்கள்.
பொதுவாக ஆயர்கட்கு ஆட்டுக் குட்டிகள் மீது பாசம் அதிகம்.
ஆட்டுக் குட்டிகளைத் தோளில் போட்டுக்கொண்டு ஆயர்கள்
ஆடுகள்பின் நடந்துபோவது வழக்கம்.
விசுவாசிகள்மீது இயேசுவுக்குத் தனி அக்கரை இருப்பதற்கு காரணம் இருக்கிறது.
விசுவாசிகளிடம்தான்
எதிர்கால
குருக்களும்,
ஆயர்களும்,
போப்பாண்டவரும்
உருவாகிறார்கள்
ஆகவேதான்
ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பதற்கு
அதாவது
விசுவாசிகளைக் கவனிப்பதற்கு
முதலிடம் கொடுத்துள்ளார்
இயேசு.
ஆட்டுக்குட்டிகளையும், ஆடுகளையும் மேய்க்கும் பொறுப்பை
ஆண்டவர் இராயப்பரிடம் மட்டுமே கொடுத்தார்.
இதிலிருந்து தெரியவில்லையா
ஆண்டவர்
இராயப்பரைத்
திருச்சபையின் தலைவராக நியமித்தார் என்று?
இராயப்ருக்குப்பின்
அவரது இடத்தில் இருக்கும்
இருக்கும் போப்பாண்டவர்
திருச்சபையின் தலைவர்.
அதாவது இராயப்பரைத் தலைவராகக் கொண்ட
அப்போஸ்தலர் வழிவந்த
ஒரே திருச்சபை, ஒரே தலைவர்.
விளக்கம் போதுமா? "
".............."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment