Tuesday, June 5, 2018

"செசாருடையதைச் செசாருக்கும், கடவுளுடையதைக் கடவுளுக்கும் செலுத்துங்கள்" (மாற்கு.12:17)

"செசாருடையதைச் செசாருக்கும், கடவுளுடையதைக் கடவுளுக்கும் செலுத்துங்கள்"
(மாற்கு.12:17)
**---**------********-**************

சில யூதர்களிடையே ஒரு தவறான நம்பிக்கை இருந்தது.

மெசியா பிறந்து,

அவர்களை உரோமையர்களின் அடிமைத்தனத்திலிருந்து

மீட்பார் என நம்பினார்கள்.

அதாவது தங்களுக்கு அரசியல் சுதந்திரம் பெற்றுத்தரவே

மெசியா பிறப்பார் என்று தவறாக நம்பினார்கள்.

இன்றும்கூட நம்மவரில் சிலர்
நமக்கு

ஆன்மீக விடுதலையோடு (Spiritual liberation)

அரசியல் சுதந்திரம் (Political liberation),

பொருளாதாரச் சுதந்திரம் (Economical liberation),

சமூக சுதந்திரம்(Social liberation)

போன்ற இவ்வுலகைச் சார்ந்த விடுதலைகளையும் பெற்றுத்தரவே

இயேசு மனிதனானார் என்று நம்புகிறார்கள்.

இதற்கு முழுமனித விடுதலை (Liberation of the whole man) என்ற பெயரையும் சூட்டியிருக்கிறார்கள்.

ஆனால் இது தவறான நம்பிக்கை.

மனிதனுக்கு ஆன்மாவும் உடலும் இருக்கின்றன.

இறைவன் இரட்சிக்க வந்தது நமது ஆன்மாவை, உடலையல்ல.

இயேசு பாவிகளை மீட்க வந்தார்.

பாவம் செய்வது ஆன்மாவா? உடலா?

ஆன்மாதான் பாவம் செய்கிறது,

பாவம் செய்ய உடலைப் பயன்படுத்திக்கொள்கிறது.

பாவம் செய்கிற ஆன்மாவை மீட்கவே இயேசு மனிதன் ஆனார்.

இயேசு வந்தது நமது ஆன்மீக மீட்பிற்காக.

நமது புத்தி(Intellect)

மனது (Mind)

இதயம்(Heart -the seat of love.) ஆகிய மூன்றும் ஆன்மாவைச் சார்ந்தவை.

இங்கே நாம் இதயம் எனக் குறிப்பிடுவது அன்பின் இருப்பிடமான இதயத்தை, உடலிலுள்ள இதயத்தை அல்ல.

புத்தியின் நோக்கம் இறைவனை அறிவது.

மனதின் நோக்கம் அவரைத் தியானிப்பது.

இதயத்தின் நோக்கம் அவரை நேசிப்பது.

இம்மூன்றை இறைவனுக்கு எதிராகப் பயன்படுத்தும்போது நாம் பாவம் செய்கிறோம்.

இந்தப் பாவத்திலிருந்து மீட்கவே இயேசு மனிதனானார்.

ஆன்மாவின் உயிர் மூச்சாக இருப்பது அன்பு.

நாம் பாவம் செய்யும்போது அன்பு செத்து விடுகிறது.

அதைத்தான் பாவத்தின் சம்பளம் மரணம் என்கிறோம்.

இந்த ஆன்மீக மரணத்தை வெல்லவே இயேசு மனிதன் ஆனார்.

இயேசு தன் சிலுவை மரணத்தால் நமது ஆன்மீக மரணத்தை வென்றார். 

பாவத்தினால் மரணம் அடையும் ஆன்மா, 

நாம் செய்த பாவத்திற்காக வருந்தி  நல்ல பாவசங்கீத்தனம் செய்யும்போது

அன்பு என்னும் உயிர் பெறுகிறது.

உலகில் வாழும் எல்லா மனிதரும் இறையன்புடன் வாழ்ந்தால் பிறரன்பு தானே பிறக்கும்.

இவ்வுலகம் முழுவதும்

இறையன்புடனும்

பிறரன்புடனும் வாழ்ந்தால்

எல்லா அடிமைத்தனங்களும்

தாமே அகன்றுவிடும்.

இருளை விரட்ட இருட்டோடு போரிடவேண்டியதில்லை.

ஒளியை ஏற்றினால் இருள் தானாக ஓடிவிடும்.

மெசியாவின் வருகையின் நோக்கம் யூதர்களின் 

அரசியல்  விடுதலை அல்ல,

ஆன்மீக விடுதலை.

இயேசு பிறந்தது யூதர்கட்காக மட்டுமல்ல, அனைத்து உலகினருக்காகவும்தான்.

அரசியலைப் பொறுத்தமட்டில்,

செசாருக்கு உரியதை செசாருக்கே கொடுக்கச் சொன்னதால்

அரசியல் சுதந்திரம் இயேசுவின் வருகையின் நோக்கம் அல்ல என்பது தெளிவாகிறது.

இங்கு இயேசு வார்த்தைளை அளந்து போட்டிருப்பது தெளிவாகும்.

செசாருக்கு 'உரியதை'  செசாருக்கு  -

என்ன பொருள்?

இறைவனுக்கு உரியதை அரசு கேட்க அதற்கு உரிமை இல்லை,

கேட்டால் கொடுக்கக்கூடாது.

தெளிவாகச் சொல்வதானால் நமது மறை உரிமைகளில் அரசு தலையிடக்கூடாது.

மீறித் தலையிட்டால் நமது உயிரே போனால்கூட அதற்குக் கீழ்ப்படியக்கூடாது.

இயேசுவின் வார்த்தைகளைச் சரியாகப் புரிந்துகொண்டதால்தான்

விசுவாசிகள் இறைவனுக்காக வேதசாட்சிகளாக மரித்தார்கள்,

மரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இறைவனுக்காகப் பிறந்தோம்.

இறைவனுக்காக வாழ்வோம்.

இறைவனுக்காக மரிப்போம்.

இறைவனோடு இணைந்து என்றென்றும் வாழ்வோம்

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment