பாவிகளின் கூடாரம்.
********************************
மருத்துவமனை நோயாளிகளின் கூடாரம்.
சுகம் பெற விரும்பும் நோயாளிகளே அங்கு வருவர்.
நோய் நீக்கி சுகம் அளிப்பவர் மருத்துவர்.
* * .. * . *
அறிவிலிகளின் கூடாரம் பள்ளிக்கூடம்.
அறியாமை நீங்கி அறிவு பெறும் விரும்புபவர்கள் மாணவர்கள்.
அறியாமையை நீக்கி அறிவொளியை ஏற்றுபவர்கள் ஆசிரியர்கள்.
* * * * *
பாவிகளின் கூடாரம் தாய்த் திருச்சபை.
பாவம் நீங்கி இரட்சிப்பு அடைய விரும்புவோரே திருச்சபையில் இருக்கிறார்கள்.
பாவம் நீக்கி இரட்சிப்பு அளிப்பவர் நம் ஆண்டவர் இயேசு.
* * * *
இயேசு பாவிகளைத் தேடியே விண்ணிலிருந்து மண்ணிற்கு வந்தார்.
இயேசு நம்மைத் தேடியே விண்ணிலிருந்து மண்ணிற்கு வந்தார்.
ஏனெனனில் நாம் பாவிகள்.
நாம் இயேசுவின் திருச்சபையில்தான் இருக்கிறோம்.
நாம் பாவிகள் என்று இயேசுவிற்குத் தெரியும்.
மொத்த மனுக்குலத்திலும் இரண்டே இருவர் மட்டும் பாவமாசற்றவர்கள்.
இயேசு கடவுள். அவரால் பாவம் செய்ய முடியாது.
அன்னை மரியாள். இயேசுவின் தாய். இறைவனின் அருளால் நிறைக்கப்பட்டவள்.
அருள் நிறைந்த மரியாள், இறைவனால் பாவத்திலிருந்து காப்பாற்றப்பட்டாள்.
இது இறைவனின் தாய் என்பதால் அவளுக்கு அருளப்பட்ட விசேச வரம்.
(மரியாளைக் குறிக்கும் 'அருள் நிறைந்த' என்ற சொற்றொடரை மாற்ற வேண்டிய அவசியம் என்ன? அருள் நிறைந்தவர் நம் அன்னை.)
இந்த இருவர் தவிர மற்ற எல்லோரும் பாவிகள்தான்
'என்னிடம் பாவமே இல்லை' என்பவர் பொய்யர்.
"ஆனால், பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால் நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்வோம்; உண்மையும் நம்மிடம் இராது."(1அருளப்பர்1:8)
நோயாளிகள் நலம்பெற மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
பாவிகள் மன்னிப்புப் பெற்று, மீட்படைய கத்தோலிக்கத் திருச்சபைக்குள் வரவேண்டும்.
திருச்சபை பாவிகள் மீட்புப் பெற வேண்டிய கூடாரம்.
இயேசு தனது பிரதிநிதிகளான குருக்கள் மூலம் பாவமன்னிப்பு அருள்கிறார்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment