ஆண்டவரின் அன்னை
அருள்மிகப் பெற்றவரா?
அருள் நிறைந்தவரா?
********************************
"தம்பி, இந்த பெட்டியில என்ன இருக்கு பாரு."
"சோளம் இருக்கு."
"அதை எடுத்து பக்கத்தில இருக்கிற சாக்கில தட்டு."
"அதுல நெல் இருக்கு."
"பரவாயில்லை, அதோடு தட்டு."
"தட்ட முடியாது. :
"ஏன்? "
"சாக்கு நிறைய நெல் இருக்கு."
"பக்கத்துச் சாக்கில என்ன இருக்கு? "
"அதுலேயும் நெல்தான் இருக்கு. "
"அதிகமாயிருக்கா? குறைவாயிருக்கா?"
"அதிகமாகத்தான் இருக்கு, ஆனால் சாக்கு நிறைய இல்ல."
"அப்போ கொஞ்சம் இடம் இருக்கு, அப்படித்தானே? "
"ஆமா."
"அப்போ அதுல தட்டு."
"சரிண்ணா. தட்டிவிட்டேன்."
இது என்ன விளையாட்டு?
விளையாட்டல்ல. விளக்குவதற்கான முன்னுரை.
முதல் சாக்கில் நெல் நிறைந்திருக்கு. வேறு எந்த பொருளையும் ஏற்க அதில் இடமில்லை.
இரண்டாவது சாக்கில் நெல் அதிகமாயிருந்தாலும் நிறைய இல்ல. அதாவது அதில இன்னும் நெல்லையோ, வேறு எந்தப்பொருளையோ சேர்க்க இடம் இருக்கிறது.
நமது பிள்ளைகள் நம்மிடம் வந்து ஏதாவது ஒரு பொருள் வாங்கவேண்டுமென்று சொன்னால் நாம் என்ன செய்கிறோம்?
அப்பொருள் வாங்க பணம் கொடுக்கிறோம்.
அதேபோல் நமது ஆன்ம சம்பந்தப்பட்ட காரியங்கட்கு இறைவன் தனது அருளைத் தருகிறார்.
உலக வாழ்வில் ஒரு நபரின் சமூக அந்தஸ்து அவர் ஈட்டிய சொத்தின் அளவால் தீர்மானிக்கப்படுகிறது.
ஆன்மீக வாழ்வில் இறைவனுக்கும், அவருக்கும் இடையே உள்ள நெருக்கத்தின் அளவு அவரிடம் உள்ள இறை அருளின் அளவால் மதிப்பீடு செய்யப்படுகிறது.
உலகச் சொத்து நமது கண்களுக்குத் தெரியும்.
ஆனால் இறையருள் அதை உடையவரால் உணரப்படும்.
மற்றவர்களின் புறக்கண்களுக்குத் தெரியாது.
சாவான பாவ நிலையிலுள்ளவர்களிடம் இறையருள் முற்றிலும் இல்லை.
பாவ வாழ்வை விட்டு வெளியேறினால் அருள் வாழ்விற்குள் நுழையலாம்.
அவரவர் அருள் வாழ்வின் அளவு அவரவரின் புனிதத்தின் அளவைப் பொறுத்தது.
புனிதர்கள் நம்மை விட அருள் மிகப் பெற்றவர்கள்.
ஒரு எவர் சில்வர் தம்ளரில்
தண்ணீர் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.
நீர் குறைவாக இருந்தாலும், மிகுதியாக இருந்தாலும், நிறைவாக இல்லாவிடில் நீர் இல்லாத பகுதியில் காற்று இருக்கும்.
தம்ளரை நீரால் நிறப்பிவிட்டால், அங்கு நீரைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது.
நமது முதல் பெற்றோர் செய்த கர்மப் பாவத்தின் விளைவாக, நாம் ஜென்மப் பாவத்துடன், ஆண்டவரின் அருள் இன்றி பிறக்கிறோம்.
ஞானஸ்நானம் பெற்று ஜென்மப் பாவம் நீங்கி அருள் வாழ்வு கிடைத்துவிட்டாலும், நமது 'விழுந்த மனித சுபாவம் (Fallen human nature) அப்படியே இருக்கிறது.
ஆகவே நாம் அருளை மிகுதியாகப் பெற்றாலும் நமது மனித சுபாவம் அப்படியே இருப்பதால் நம்மிடம் குற்றம் குறைகள் இருக்கும்.
அதாவது நாம் யாரும் அருள் நிறைந்தவர்கள் அல்ல.
ஆனால் இறைவன் இயேசு தூயவராக இருப்பதால் தன்னைபெறப்போகும் தாயும் பாவ மாசு மரு இன்றி தூயவளாக இருக்கவேண்டும் எனத் தீர்மானித்தார்.
ஆகவே தன் தாய்க்கு ஜென்மப் பாவம் இன்றிo.
அவள் உற்பவித்த நொடியிலிருந்து
இறுதிநாள் வரை சிறு குற்றங்கள்கூட இல்லாதிருந்தாள்.
அன்னைமரி அருள் நிறைந்தவள்.
'அருள் மிகப் பெற்றவள்' என்று சொன்னால் அன்னையின் அருள் நிலையைக் குறைத்து மதிப்பீடு செய்வதாகும்.
மற்ற புனிதர்கள் அருள்மிகப்பெற்றவர்கள்.
சிறு குறைகள்கூட இல்லாதோர் யாருமில்லை.
ஆனால் அன்னை மரி ஜென்மப்பாவமின்றி உற்வித்த நொடியிலிருந்து வாழ்வின் இறுதி நாள்வரை மிகவும் பரிசுத்தமாக, மிகச்சிறு குற்றம் குறைகள் கூட இல்லாதிருந்தாள்.
ஆதாரம்?
திரு விவிலியம்.
ஆதியாகமத்தில் நமது முதற் பெற்றோரை ஏமாற்றிய சாத்தானை நோக்கி கூறினார்:
"I will put enmities between thee and the woman, and thy seed and her seed: she shall crush thy head, and thou shalt lie in wait for her heel."
(Genesis. 3:15)
"உனக்கும், பெண்ணுக்கும், உன் வித்துக்கும், அவள் வித்துக்கும் இடையில் பகையை உருவாக்குவோம்.
அவள் உன் தலையை நசுக்குவாள்..."
மரியாள் 'சாத்தானின் தலையை நசுக்குவாள் ' .-
பாவத்துக்குக் காரணம்
சாத்தான்.
அவனுடைய தலை நசுக்கப்பட்டதால் பாவத்தால் மரியாளை நெருங்க இயலாது.
மரியாள் ஜென்மப் பாவ மாசின்றி உற்பவித்ததற்கு இவ்வேத வசனம் சான்று.
கபிரியேல் தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தபோது,
"அருள் நிறைந்தவரே வாழ்க!"
"Hail, thou who art full of grace"
என்று வாழ்த்தினார்.
" அருள் நிறைந்தவரே" என்றால் மாதாவிடம் அருளுக்கு எதிரான எதுவும் இல்லை என்பது பொருள்.
"அருள் மிகப் பெற்றவரே" என்றால் அருள் மிகுதி என்று மட்டும் பொருள்படும். குற்றம் குறைகள் எதுவும் இல்லை என்ற பொருள் வராது.
நம் அன்னையைத் தவிர எல்லாப் புனிதர்களும் அருள் மிகப் பெற்றர்கள்.
நம் அன்னை மட்டும் அருள்
நிறைந்தவர்.
ஆகவே நம் அன்னையை,
"அருள் நிறைந்த மரியே"
என்று வாழ்த்துவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment