வருகிறது கிறிஸ்மஸ்
*. * * * * * *
அழகு நிறை குடில்கள்,
அலங்கார ஸ்டார்கள்,
மணம் பரப்பும் மலர் வகைகள்,
புதுப்புது உடை வகைகள்,
அறுசுவை உணவு வகைகள்,
இவையெல்லாம் நமக்குப் பிடிக்கும்,
கிறிஸ்மஸ் விழாவில்.
இவையெல்லாம் இயேசுவுக்கும் பிடிக்கும்,
நமது உள்ளம் சுத்தமாயிருந்தால் மட்டும்.
இயேசு பிறக்கவேண்டியது
நமது உள்ளம் என்னும் குடிலில் மட்டும்தான்.
நமது உள்ளத்தில் பிறந்து,
இதயத்தில் வாழ்ந்திடவே
மனிதனாய்ப் பிறந்தார் நம்
மாமன்னர் இயேசு.
குடில் கட்டுவோம், தப்பில்லை.
ஸ்டார்கள் கட்டுவோம், தப்பில்லை.
புது ட்ரெஸ் எடுப்போம், தப்பில்லை.
அறுசுவை உணவுண்போம், தப்பில்லை.
அதற்கெல்லாம் முன்னால்,
உள்ளத்தைச் சுத்தமாக்குவோம் ,
பாவசங்கீர்த்தனம் மூலம்.
சுத்தமான உள்ளத்தையும்,
அன்பு நிறை இதயத்தையும்
இயேசு விரும்புகிறார்,
வெறும் ஆடம்பரத்தையல்ல.
ஏழ்மையில் பிறந்த இயேசு
எளிய நல் மனத்தோரையே
விரும்புகிறார் எப்போதும்.
“ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்;
ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது."
(மத்.5:3)
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment