Sunday, December 31, 2017

Good bye 2017! Welcome 2018!






Good bye 2017! 
Welcome 2018!
********************************

From the moment we were born into this world, we started our trips around the sun.

As many full trips, so many years old we are.

We are starting another full trip around the sun.

We cannot escape journeying around the sun as the world in which  we live does the same from the instant it was created.

"I am the light of the world",(John. 8:12) said Jesus.

Just as the material world revolves around the sun in order to keep itself functioning, our spiritual life revolves around Jesus, the light of the world, to keep itself growing.

Jesus is the ever bright and life giving Sun, around whom our spiritual life revolves.

Jesus is the centre of our spiritual life.

Simply put, our life is Christ centred.

"He who follows me can never walk in darkness," said Jesus.

In Jesus we see things as they really are.

"He will possess the light which is life."

He is not only our light,  but also our life.

"Jesus said to him, I am the way; I am truth and life."(John. 14:6)

In short , Jesus is our everything. 

There is a difference between the world revolving around the sun and we around Jesus.

The world is bound by the law of nature and it cannot go astray.

But we have freedom of choice and action and there is every possibility of going astray, unless we are always conscious  of our presence in Jesus,  Our Lord.

We should  make an  examination of conscience at night before going to bed, in order to find out whether we have made use of our freedom correctly.

If we have gone wrong we should correct ourselves the next day.

We should do the same thing  at end of the year.

We should start the new year with the resolution to keep to the path of Jesus, our Light.

The practice of New Year’s resolutions demonstrates two aspects of our human nature that are important for the spiritual life:

our constant need for growth

and

our inability to persevere by our sheer will power.

Many a times we are dissatisfied with our own resolution because we are
unable to persevere in carrying out the resolution made.

Sometimes our dissatisfaction reaches an extreme level which even makes us make a resolution never more to make a resolution at all!

This is because we fail to strengthen our resolution with the grace of God.

We cannot move even small atom without the grace of God.

We have already noted that our spiritual life revolves around God just as our material world revolves around the sun.

The Son of God is the Sun, due to the gravitational force of love and grace of whom our spiritual journey is moving along the right path without going astray.

So it is Jesus' love and grace that keeps us bound with Him.

"Ask,  it shall be given," Jesus has said.

We are thinking of only material things to be asked for.

But we should ask for the grace of God to be of help in our spiritual life.

We can ask for material helps too provided they are not injurious to our spiritual welfare.

Now coming  to the point, we should make new year resolution with full confidence not in our own ability, but in the ability of God, for whom everything is possible.

We should pray to God to help us to translate our resolution into practice.

First our resolution should not be vague.

"I will lead a good life hereafter"  is very vague.

It should be particular.

For instance,

"I shall not be short tempered."

"I shall not be angry with anyone for any reason."

"I shall not talk ill of anyone to anyone."

"I shall start every day with a Rosary."

"I shall make an examination of conscience every day before going to bed."

There are thousands of resolutions like the above.

Every morning we should pray to God to help us to carry out the resolution made.

Before going to bed we should examine our conscience to see how far we have succeeded in putting our resolution into practice.

The next day we should renew our resolution and start afresh.

Our failures will one day reach zero level,  which means we have succeeded.

Then we will have to keep up the success with the grace of God.

Let us welcome the new year,2018, with a resolution, that will help us to take a forward step in our spiritual life.

Lourdu Selvam.

Saturday, December 30, 2017

திருக் குடும்பம்.

திருக் குடும்பம்.
********************************
ஒரு புதிய பார்வை.

குடும்பத் தலைவர் -
புனித சூசையப்பர்.

மற்ற அங்கத்தினர்கள் -
புனித மரியாள்,
இறைமகன் இயேசு.

புனித சூசையப்பர் - அருள் மிகப் பெற்றவர்.

புனித மரியாள் - அருள் நிறைந்தவர்.

இறைமகன் இயேசு - அருளின் ஊற்று.

கொஞ்சம் உற்று நோக்குங்கள்.

அருள் வரிசையில்

அருளின் ஊற்று - இயேசு  - முதல் இடம்.

அருள் நிறைந்தவர் - புனித மரியாள்  - இரண்டாவது இடம்.

அருள் மிகப் பெற்றவர். -
புனித சூசையப்பர் - மூன்றாவது இடம்.

மூன்றாவது இடத்திலுள்ளர்தான் திருக்குடும்பத்தின் தலைவர்.

குழந்தை இயேசு நமக்குக் கற்பிக்கும் பாடம்:

தாழ்ச்சி.

அருளின் ஊற்று இயேசுவும்,  அருள் நிறைந்த மரியாளும் அருள் மிகப் பெற்ற சூசையப்பரின் தலைமையை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

அதாவது முதல் இடமும் , இரண்டாம் இடமும் மூன்றாம் இடத்தின் தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

சர்வ வல்லவர் தன்னைத்தானே தாழ்த்தியிருக்கிறார்.

தனது வாழ்க்கை மூலம் நமக்கு ஒரு பாடம்  கற்றுத் தந்துள்ளார்.

"29நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்."
(மத்.11:29)

இயேசுவிடமிருந்து தாழ்ச்சியைக் கற்றுக்கொள்வோம்.

லூர்து செல்வம்.

Thursday, December 28, 2017

இறைவனின் தாய்.

இறைவனின் தாய்.
********************************

பிரிந்து சென்ற சகோதரர் ஒருவர் என் கையில் இருந்த செபமாலையைப் பார்த்தார்.

பின் என்னைப் பார்த்தார்.

பின் செபமாலையைப் பார்த்தார்.

பழையபடி என்னைப் பார்த்தார்.

"ஹலோ, சார்,  செபமாலை வேண்டுமா?"

"உங்ககிட்ட ஒண்ணு கேட்கணும்."

"கேளுங்க."

"நீங்க கிறிஸ்தவர்தான?"  

"அதுல என்ன சந்தேகம்?

"கிறிஸ்துவை விட அவரது தாய்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நீங்கள் எப்படி  கிறிஸ்தவராக முடியும்?"

"தப்பாகப் புரிந்திருக்கிறீர்கள். நாங்கள் கிறிஸ்துவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால்தான் அவரது தாய்க்கும் முக்கியத்துவம் கொடுக்கிறோம்."

"அதெப்படி?"

"கிறிஸ்து  யாரை நமது தந்தை என்று அழைக்கச் சொன்னார்?"

"தனது தந்தையை."

"கிறிஸ்துவின் தந்தை நமக்குத் தந்தை என்றால் கிறிஸ்து நமக்கு யார்? "

"சகோதரர்."

"சகோதரரின் தாய் நமக்கும் தாய்தானே."

"ம்ம்ம் "

"நீங்க உங்க அம்மாவை ஏன் நேசிக்கிறீர்கள்?"

"எனது அம்மாவாக இருப்பதால்தான்."

"நாங்களும் அப்படித்தான். இயேசுவின் தாய் எங்கள் தாயாக இருப்பதால்தான் அவர்களை நேசிக்கிறோம்."

"நாங்கள் பைபிள்படி நடப்பவர்கள். பைபிளில் எங்கேயும் இயேசு 'என் தாயை நேசியுங்கள்' என்று சொல்லவில்லையே!"

"இயேசு 'என் தாயை நேசிக்காதீர்கள்' என்று சொல்லியிருக்கிறாறா?"

"சரி, அது போகட்டும். இறைவன் துவக்கமும் முடிவும் இல்லாதவர்.

மரியாள் இறைவனால் படைக்கப்பட்டவர்.

இறைவனால் படைக்கப்பட்டவரை எப்படி  இறைவனின் தாய் என்கலாம்?"

"உங்கள் மகன் பெயர் என்ன?"

"ஜோசப்."

"ஜோசப் என்ன வேலை செய்கிறார்?"

"எங்கள் ஊர் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கிறான்."

"நீங்கள் தலைமை ஆசிரியரோட அப்பாவா?"

"ஆமா."

"ரொம்ப சந்தோசம். நீங்கள் தலைமை ஆசிரியரோட அப்பா, தலைமை ஆசிரியர் உங்கள் மகன்."

"இரண்டும் ஒன்றுதான்."

"இயேசு கடவுள்.

மரியாள் இயேசுவின்தாய்.

அப்படியானால், மரியாள்...?"

"கடவுளின் தாய்"

"Very good. சரியாய்ச் சொன்னீங்க."

"சொல்ல வச்சிட்டீங்க.

ஆனாலும் ஒரு சந்தேகம். இயேசுவுக்கு இரண்டு சுபாவங்கள்.

தேவ சுபாவம், மனித சுபாவம்.

மரியாள்   மனித  சுபாவத்தை மட்டும்தான்  உற்பவித்தாள்.

அப்படியானால் மரியாள் இயேசுவின் மனித சுபாவத்தின் தாய் என்றுதானே கூறவேண்டும்."

" அப்படியானால்   நீங்கள் ஜோசப்புக்கு அப்பா இல்லையே!"

"ஏன்?"

"உங்கள் மனைவி உற்பவித்தது ஜோசப்பின் உடலையா?   ஆன்மாவையா?"

"உடலை மட்டும்தான். ஆன்மா இறைவனின் நேரடி படைப்பு."  

"உங்கள் வாதப்படி நீங்கள் ஜோசப்பின் உடலுக்குதானே அப்பா. எப்படி ஜோசப்பிற்கு அப்பா  என்று  கூறலாம்?"

"தெரியவில்லை."

"நீங்கள் ஜோசப் என்ற ஆளுக்கு அப்பா. அந்த ஆளுக்கு ஆன்மாவும் சரீரமும் இருக்கிறது.

இயேசுவின் மனித சுபாவத்தை மட்டும்  மரியாள் கருத்தரித்தாலும்,  அந்த சுபாவம் பரிசுத்த தம திருத்துவத்தின் இரண்டாம் ஆளுக்கு உரியது.

திருத்துவத்தின் இரண்டாம் ஆள் கடவுள்.

இயேசுவின் மனிதசுபாவத்தை மட்டுமே மாதா உற்பவித்தாலும்,  அந்த சுபாவத்திற்கு உரிய இயேசு தேவ ஆளாய் இருப்பதால், மரியாளை தேவமாதா என்று அழைக்கிறோம்.

இயேசுவின் தாய் இறைவனின் தாய்,  புரிகிறதா?"

புரிகிறது. சரி,  ஒரு சின்ன உதவி செய்ய முடியுமா?"

"உங்க கையில் இருக்கிற செபமாலையைக் கொஞ்சம் தர முடியுமா?"

"கொஞ்சம் என்ன. முழுவதையுமே தர்ரேன். பிடியுங்க."

லூர்து செல்வம்.

Monday, December 25, 2017

ஆண்டவரின் அன்னை அருள்மிகப் பெற்றவரா? அருள் நிறைந்தவரா?

ஆண்டவரின்    அன்னை
அருள்மிகப் பெற்றவரா?
அருள் நிறைந்தவரா?

********************************

"தம்பி,  இந்த பெட்டியில என்ன இருக்கு பாரு."

"சோளம் இருக்கு."

"அதை எடுத்து பக்கத்தில இருக்கிற சாக்கில தட்டு."

"அதுல நெல் இருக்கு."

"பரவாயில்லை, அதோடு தட்டு."

"தட்ட முடியாது. :

"ஏன்? "

"சாக்கு நிறைய நெல் இருக்கு."

"பக்கத்துச் சாக்கில என்ன இருக்கு? "

"அதுலேயும்   நெல்தான் இருக்கு. "

"அதிகமாயிருக்கா? குறைவாயிருக்கா?"

"அதிகமாகத்தான் இருக்கு, ஆனால் சாக்கு நிறைய இல்ல."

"அப்போ கொஞ்சம் இடம் இருக்கு, அப்படித்தானே? "

"ஆமா."

"அப்போ அதுல தட்டு."

"சரிண்ணா. தட்டிவிட்டேன்."

இது என்ன விளையாட்டு?

விளையாட்டல்ல. விளக்குவதற்கான முன்னுரை.

முதல் சாக்கில் நெல் நிறைந்திருக்கு. வேறு எந்த பொருளையும் ஏற்க அதில் இடமில்லை.

இரண்டாவது சாக்கில் நெல் அதிகமாயிருந்தாலும் நிறைய இல்ல. அதாவது அதில இன்னும் நெல்லையோ,  வேறு எந்தப்பொருளையோ சேர்க்க இடம் இருக்கிறது.

நமது பிள்ளைகள் நம்மிடம் வந்து ஏதாவது ஒரு பொருள் வாங்கவேண்டுமென்று சொன்னால் நாம் என்ன செய்கிறோம்? 

அப்பொருள் வாங்க பணம் கொடுக்கிறோம்.

அதேபோல் நமது ஆன்ம சம்பந்தப்பட்ட காரியங்கட்கு இறைவன் தனது அருளைத் தருகிறார்.

உலக வாழ்வில் ஒரு நபரின் சமூக அந்தஸ்து அவர் ஈட்டிய சொத்தின் அளவால் தீர்மானிக்கப்படுகிறது.

ஆன்மீக வாழ்வில் இறைவனுக்கும், அவருக்கும் இடையே உள்ள நெருக்கத்தின் அளவு அவரிடம் உள்ள இறை அருளின் அளவால் மதிப்பீடு செய்யப்படுகிறது.

உலகச் சொத்து நமது கண்களுக்குத் தெரியும்.

ஆனால் இறையருள் அதை உடையவரால் உணரப்படும்.

மற்றவர்களின் புறக்கண்களுக்குத் தெரியாது.

சாவான பாவ நிலையிலுள்ளவர்களிடம் இறையருள் முற்றிலும் இல்லை.

பாவ வாழ்வை விட்டு வெளியேறினால் அருள் வாழ்விற்குள் நுழையலாம்.

அவரவர் அருள் வாழ்வின் அளவு அவரவரின் புனிதத்தின் அளவைப் பொறுத்தது.

புனிதர்கள் நம்மை விட அருள் மிகப் பெற்றவர்கள்.

ஒரு எவர் சில்வர் தம்ளரில்
தண்ணீர் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

நீர் குறைவாக இருந்தாலும், மிகுதியாக இருந்தாலும், நிறைவாக இல்லாவிடில் நீர்  இல்லாத பகுதியில் காற்று இருக்கும்.

தம்ளரை நீரால் நிறப்பிவிட்டால், அங்கு நீரைத் தவிர வேறு எதுவும்  இருக்க முடியாது.

நமது  முதல் பெற்றோர் செய்த கர்மப் பாவத்தின் விளைவாக, நாம் ஜென்மப் பாவத்துடன், ஆண்டவரின் அருள் இன்றி பிறக்கிறோம்.

ஞானஸ்நானம் பெற்று ஜென்மப் பாவம் நீங்கி அருள் வாழ்வு கிடைத்துவிட்டாலும், நமது 'விழுந்த மனித சுபாவம் (Fallen human nature) அப்படியே இருக்கிறது.

ஆகவே நாம் அருளை மிகுதியாகப் பெற்றாலும் நமது மனித சுபாவம் அப்படியே இருப்பதால் நம்மிடம் குற்றம் குறைகள் இருக்கும்.

அதாவது நாம் யாரும் அருள் நிறைந்தவர்கள் அல்ல.

ஆனால் இறைவன் இயேசு தூயவராக இருப்பதால் தன்னைபெறப்போகும் தாயும்   பாவ மாசு மரு இன்றி தூயவளாக இருக்கவேண்டும் எனத் தீர்மானித்தார்.

ஆகவே தன் தாய்க்கு ஜென்மப் பாவம் இன்றிo.

அவள் உற்பவித்த நொடியிலிருந்து
இறுதிநாள் வரை சிறு குற்றங்கள்கூட இல்லாதிருந்தாள்.

அன்னைமரி அருள் நிறைந்தவள்.

'அருள் மிகப் பெற்றவள்' என்று சொன்னால் அன்னையின் அருள் நிலையைக் குறைத்து மதிப்பீடு செய்வதாகும்.

மற்ற புனிதர்கள் அருள்மிகப்பெற்றவர்கள்.

சிறு குறைகள்கூட இல்லாதோர் யாருமில்லை.

ஆனால் அன்னை மரி ஜென்மப்பாவமின்றி உற்வித்த நொடியிலிருந்து வாழ்வின் இறுதி நாள்வரை மிகவும் பரிசுத்தமாக,  மிகச்சிறு குற்றம் குறைகள் கூட இல்லாதிருந்தாள்.

ஆதாரம்?

திரு விவிலியம்.

ஆதியாகமத்தில் நமது முதற் பெற்றோரை ஏமாற்றிய சாத்தானை நோக்கி கூறினார்:

"I will put enmities between thee and the woman, and thy seed and her seed: she shall crush thy head, and thou shalt lie in wait for her heel."
(Genesis. 3:15) 

"உனக்கும், பெண்ணுக்கும், உன் வித்துக்கும்,  அவள் வித்துக்கும் இடையில் பகையை உருவாக்குவோம்.

அவள் உன் தலையை  நசுக்குவாள்..."

மரியாள் 'சாத்தானின் தலையை நசுக்குவாள் ' .-

பாவத்துக்குக் காரணம்
சாத்தான்.

அவனுடைய தலை நசுக்கப்பட்டதால் பாவத்தால் மரியாளை நெருங்க இயலாது.

மரியாள் ஜென்மப் பாவ மாசின்றி உற்பவித்ததற்கு இவ்வேத வசனம் சான்று.

கபிரியேல் தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தபோது,

"அருள் நிறைந்தவரே வாழ்க!"

"Hail, thou who art full of grace"

என்று வாழ்த்தினார்.

" அருள் நிறைந்தவரே"   என்றால் மாதாவிடம் அருளுக்கு எதிரான எதுவும் இல்லை என்பது பொருள்.

"அருள் மிகப் பெற்றவரே" என்றால் அருள் மிகுதி என்று மட்டும் பொருள்படும். குற்றம் குறைகள் எதுவும் இல்லை என்ற பொருள் வராது.

நம் அன்னையைத் தவிர எல்லாப் புனிதர்களும் அருள் மிகப் பெற்றர்கள்.

நம் அன்னை மட்டும் அருள்
நிறைந்தவர்.

ஆகவே நம் அன்னையை,

"அருள் நிறைந்த மரியே"

என்று வாழ்த்துவோம்.

லூர்து செல்வம்.

Sunday, December 24, 2017

சமாதானம் செய்ய வந்த சர்வ வல்லவர்.

சமாதானம் செய்ய வந்த சர்வ வல்லவர்.
********************************

சமாதானம் = சமம் + தானம்.

சர்வ வல்லவர்  இறைவன்.

மிக உயர்ந்தது அவர் ஸ்தானம்.

பாதாளத்தில் விழுந்தான்
மனிதன் பாவத்தினால்,

சமாதானம்  கேட்கக்கூட திராணி இல்லை அவனுக்கு.

இரங்கினார் இரக்கத்தின் தேவன்.

சம தானத்தில் சமாதானம் செய்திட,

மனிதனைத் தன் நிலைக்கு உயர்த்திட,

மனிதநிலைக்குத் தன்னைத் தாழ்த்தினார் இறைவன்.

மனிதனை ஏற்றிட தானே இறங்கினார் மனித நிலைக்கு.

சம தானத்திற்கு இறைவன் இறங்கி,

நம்மைத் தன் பிள்ளைகளாக்கினார்.

தந்தை எவ்வழி பிள்ளைகளும் அவ்வழி.

நாம் மாறுவோம்

சமாதானத்தின்

தூதுவர்களாய்!

  "சமாதானம் செய்வோர்

பேறுபெற்றோர்;

ஏனெனில் அவர்கள்

கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்." (மத்.5:9)

லூர்து செல்வம்.



Friday, December 22, 2017

அமைதியா? சமாதானமா?

அமைதியா? சமாதானமா?
********************************
முதல் பாடவேளை (First period)  முடிந்து, இரண்டாவது பாடவேளை ஆரம்பித்தது.

ஒரு வகுப்பிலிருந்து வெளியேறி அடுத்த வகுப்பிற்குள் நுழைந்தேன்.

சமூக அறிவியல் பாடம்.

மாணவர்கள் மிக அமைதியாக இருந்தனர்.

நான்   அன்றைய  பாட போதபோதனையை ஆரம்பிக்குமுன்பு முந்தின நாள் நடத்தப்பட்ட பாடத்தில் கேள்விகள் கேட்கத் தயாராகிக்கொண்டிருந்தபோது ஒரு மாணவன் பவ்யமாக எழுந்து நின்றான்.

"என்ன விஷயம்? நீ கேள்வி கேட்கப்போகிறாயா? "

"சார், இல்ல. ஒரு சந்தேகம். முதல் உலகப் போர் முடிந்ததும்
வென்ற நாடுகட்கும்,
தோற்ற நாடுகட்கும்
இடையே ஏற்பட்டது
அமைதி ஒப்பந்தமா, சமாதான ஒப்பந்தமா? "

"நான் இப்போது கேட்கப்போகிற கேள்விக்குப் பதில் சொல். உன் கேள்விக்குப் பதில் அங்கே இருக்கும்.

நான் வகுப்பிற்குள் வந்தபோது எப்படி இருந்தீங்க"

"அமைதியாக இருந்தோம்"

"அதாவது? "

"பேசாம இருந்தோம்."

"சமாதானமாயிருந்தீங்களா?"

"நிச்சயமா இல்லை. கடைசி பெஞ்சுக்காரங்க சண்டை போட்டுக்கிட்டிருந்தாங்க. நீங்க வர்ரத சன்னல் வழியாகப் பார்த்ததும் அமைதி ஆய்ட்டாங்க."

"ஏன் அமைதியானாங்க?"

"உங்களுக்குப் பயந்து."

"எனக்குப் பயந்து அல்ல. என் கையிலிருக்கிற பிரம்புக்குப் பயந்து."

"ஆமா, சார்."

"இப்போ சொல்லு. போருக்குப் பின் ஏற்பட்டது  அமைதி ஒப்பந்தமா, சமாதான ஒப்பந்தமா? "

"அமைதி ஒப்பந்தம்தான், சார்."

"அது சமாதான ஒப்பந்தமா இருந்திருக்க, என்ன செய்திருக்க வேண்டும்?"

"சண்டை போட்ட நாடுகள்
எல்லாம் தாங்கள் போரிட்டது தவறு  என்பதை உணர்ந்து, அதற்காக வருந்தி, ஒருவருக்கொருவர் மன்னிப்புக் கேட்டு,  இனி போரிடுவதில்லை என்று ஒப்பந்தம் செய்தால்,  அதுவே சமாதான ஒப்பந்தம்."

"Very good. சமாதானம் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் தங்கள் சுமூகமான உறவிற்காக ஒருவரை ஒருவர் மன்னித்து ஏற்றுக்கொள்வது.

இருவருள் ஒருவர் மட்டும் அடுத்தவருக்கு எதிராகக் குற்றம் செய்திருந்தால், குற்றம் செய்தவர் வருந்தி அடுத்தவரோடு சமாதானம் செய்துகொள்ள வேண்டும்."

"சார், ஒரு சின்ன சந்தேகம்."

"கேளு."

"நாங்க உங்க பிரம்புக்குப் பயந்து அமைதியாய்  இருந்தது உண்மைதான். ஆனால் அமைதியாய் இருப்பவர்கள் எல்லாம் பயந்துபோயா இருக்கிறார்கள்?"

"உன் கேள்வி சரிதான். 'சமாதானம்' என்ற வார்த்தைக்குப் பதில் 'அமைதி' என்ற வார்த்தையைப் பயன்படுத்த முடியாது என்பதை விளக்கவே அந்த உதாரணத்தைச் சொன்னேன்.

பாவம் செய்தவர்கள் இறைவனோடு சமாதானம் செய்துகொள்ள வேண்டும், அமைதி செய்துகொள்ள முடியாது.
அமைதி
'' என்ற சொல்லுக்குப் பல பயன்பாடுகள் உண்டு.

1. மன அமைதி.  இறைவனோடு நல்ல உறவோடு இருக்கும்போது நமது மன நிலை.

பாவம் செய்தால் மன அ
மைதி இருக்காது.

தீர்வுகாண இயலாத பிரச்சினைகள் நீடித்தாலும் மனதில் அமைதி இருக்காது.

2. வகுப்பில் அமைதி- Silence

3.கடல் அமைதியாய் இருக்கிறது - பெரிய அலைகள் இல்லை.

4. நாட்டில் அமைதி - போராட்டங்கள் இல்லை.

5.  நாடுகளுக்கிடையே போர்கள் நிகழாவிட்டால்,  'அமைதி நிலவுகிறது' என்போம். ஆனால் இந்த அமைதி நிலையில் நாடுகள் அடுத்த போருக்குத் தயாரித்துக்கொண்டிருக்கும்.

ஆக, அமைதியும், சமாதானமும் ஒரே பொருள் உள்ள வார்த்தைகள் அல்ல.

இறைவனோடு நமது உறவு சுமூகமாக இருந்தால்,

அதாவது,  நம்மிடம் பாவம் இல்லாதிருந்தால்,

அதாவது நாம் இறைவனோடு சமாதானமாயிருந்தால்

நமது மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும்.

சமாதானம் இருக்குமிடத்தில் அமைதி இருக்கும்.

சமாதானம் இருக்குமிடத்தில் மகிழ்ச்சி இருக்கும்.

ஆனால் அமைதியின் பொருள் சமாதானம் அல்ல.

திரும்பவும்   சொல்கிறேன்,    சமாதானம் இருக்குமிடத்தில் அமைதி இருக்கும்.

ஒருவரோடொருவர் சமாதானமாய் இருப்போம்.

புரிகிறதா?"

"புரிகிறது, சார்."

"உலகில் நல்ல மனது உள்ளவர்கட்கு சமாதானம் உண்டாகுக."

இது விண்ணிலிருந்து வந்த கிறிஸ்மஸ் செய்தி.

லூர்து செல்வம்.

"

Thursday, December 21, 2017

வருகிறது கிறிஸ்மஸ்.

வருகிறது கிறிஸ்மஸ்
*.      *      *       *      *       *     *

அழகு  நிறை  குடில்கள்,

அலங்கார    ஸ்டார்கள்,

மணம் பரப்பும் மலர் வகைகள்,

புதுப்புது உடை வகைகள்,

அறுசுவை உணவு வகைகள்,

இவையெல்லாம் நமக்குப் பிடிக்கும்,

கிறிஸ்மஸ் விழாவில்.

இவையெல்லாம் இயேசுவுக்கும் பிடிக்கும்,

நமது உள்ளம் சுத்தமாயிருந்தால் மட்டும்.

இயேசு பிறக்கவேண்டியது

நமது உள்ளம் என்னும் குடிலில் மட்டும்தான்.

நமது   உள்ளத்தில் பிறந்து,

இதயத்தில் வாழ்ந்திடவே

மனிதனாய்ப் பிறந்தார் நம்

மாமன்னர் இயேசு.

குடில் கட்டுவோம், தப்பில்லை.

ஸ்டார்கள் கட்டுவோம்,  தப்பில்லை.

புது ட்ரெஸ் எடுப்போம், தப்பில்லை.

அறுசுவை உணவுண்போம், தப்பில்லை.

அதற்கெல்லாம் முன்னால்,

உள்ளத்தைச் சுத்தமாக்குவோம் ,

பாவசங்கீர்த்தனம் மூலம்.

சுத்தமான உள்ளத்தையும்,

அன்பு நிறை இதயத்தையும்

இயேசு  விரும்புகிறார்,

வெறும் ஆடம்பரத்தையல்ல.

ஏழ்மையில் பிறந்த இயேசு

எளிய நல் மனத்தோரையே

விரும்புகிறார் எப்போதும்.

“ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்;

ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது."
(மத்.5:3)

லூர்து செல்வம்.








Wednesday, December 20, 2017

"Glory to God in the highest: and on earth peace to men of good will."(Luke. 2:14)

"Glory to God in the highest: and on earth peace to men of good will."(Luke. 2:14)
********************************

Christmas is just around the corner.

It is important to  make time for silent reflection on the true meaning of Christmas ,  specifically on the  figures in the Nativity.

Just imagine

Mary and Joseph 

travelling from Nazareth to Bethlehem , 

Mary on a donkey

and Joseph  walking  the whole  distance of about  97 miles. 

Why do they go to Bethlehem?

In obedience to the order of an earthly king "emperor Augustus, enjoining that the whole world should be registered "(Luke. 2:1)

Child Jesus, still in His mother's womb,  chooses to obey an order of an earthly king, though He is the Creator of the whole universe.

I remember His  words at a later time,  "Give unto Caesar what is Caesar's."

Real Christmas consists in

Jesus' coming

in search of sinners,

in obedience to His Father's will.

Of course, being God one with His Father, it is His will.

The grace of Christmas is one of

love,

humility

and

tenderness.

Another important person in the Nativity scene is Joseph.

We know how he decided

to divorce Mary,

not knowing the real cause of her pregnancy

and

how he accepted her

after being informed by Angel Gabriel

that the Child conceived was God Himself.

He believed the Angel's words and obeyed him.

Here we see Faith and obedience go together.

Of course we believe in the Church, but how far do we obey Her words?

Unless we obey the precepts of the Church

and

the words of her spiritual administrators, 

that means,  our spiritual Fathers,

our Christmas celebration

is mere waste of time.

Very important person next to Jesus in Christmas is Mother Mary.

She  allowed God to "change the destiny of mankind" by  accepting to conceive our Saviour.

Her words to Angel Gabriel at Annunciation reveal

her Faith,

humility,

obedience,

total surrender to the will of God

and

her spirit of dedication."

A child should inherit the qualities of its mother at least to a certain extent , though not fully.

"தாயைப்போல் பிள்ளை,
நூலைப்போல் சேலை." is a Tamil proverb.

There is a little difference between her Faith and our Faith.

We believe in  the  virginal conception of Jesus, though we cannot understand it.

But she experienced it herself.

She was a virgin and she conceived Jesus.

Though she was Mother of God Almighty,  she was very humble.

"Behold the handmaid of the Lord" - these words of hers reveal her humility.

The moment she knew that she would conceive God Himself, she obeyed the will of God without demanding further explanation from the Angel.

We must also obey Jesus and
His will every day.

Mary is  a model for us to follow.

The place where Jesus was born is an  important factor in our meditation on the Nativity scene.

Joseph had a house of his own in Nazareth.

He did not come to Bethlehem in search of a place for Jesus to be born.

He did not choose a poor place when a comfortable place was available.

It was only 'because there was no room for them in the inn', Joseph chose a stable.

So it was  not Joseph's plan.

It was God's plan.

It was His plan that His divine Son should  be born as a man in a poor stable.

The Holy Family lived according to the will of our Heavenly Father.

The Holy Family is a model for our human families for
carrying out the will of God.

"Rise up, take with thee the child and his mother, and flee to Egypt; there remain, until I give thee word."

"He rose up, therefore, while it was still night, and took the child and his mother with him, and withdrew into Egypt, where he remained until the death of Herod."

"Rise up, take with thee the child and his mother, and return to the land of Israel; for those who sought the child’s life are dead."

"So he arose, and took the child and his mother with him, and came into the land of Israel."

The above  quotes from the Gospel according to St.Matthew reveal how the Holy Family obeyed the will of God.

Joseph, the head of The Holy Family obeyed every word that came to Him from above.

He knew that the Child  under his care was God and it was His will that he was carrying out.

Our Christmas celebrations will be fruitful only if our families are akin to the Holy Family in their carrying out the will of God.

Our families may meet with unexpected sufferings,

but we must remember that whatever happens to us

is according to the plan of God,

who wills only our good.

Another important factor of Christmas is the people to whom the first Christmas message was given.

The message was given to the shepherds,

who were poor and simple

and

who were keeping awake all the night,

taking care of their sheep.

They were like Jesus in their poverty and simplicity.

Are we like Jesus in our spirit of poverty, which is very dear to Jesus?

The most important thing in Christmas is the Christmas message.

"Glory to God in the highest: and on earth peace to men of good will."

Christmas should make us live our life for the glory of God.

Jesus came to the world to bring about peace  between God and us.

To  be really peaceful we must be men of good will.

Only good willed people can do good to others.

Let us pray to God to bless us with the grace to celebrate our Christmas in such a way as to make us men of good will.

Lourdu Selvam.



I

Monday, December 18, 2017

அவரன்றி அணுவும் அசையாது.

அவரன்றி அணுவும் அசையாது.
*********************************

ஒரு ஆசாரி மரத்திலிருந்து ஒரு நாற்காலி செய்தார்.

இனி ஆசாரி இல்லாவிட்டாலும்  நாற்காலி இருக்கும்.

ஆசாரிக்கும்,   நாற்காலிக்கும் ஒரு உறவும் இல்லை, அவர் அதைச் செய்தார் என்பதைத் தவிர.

கொத்தனார் வீடு கட்டியபின் கொத்தனார் மறந்தாலும் வீடு இருக்கும்.

ஆசாரி ஏற்கனவே இருந்த மரம் இருந்தது.

ஆகவே நாற்காலியின் இருப்பிற்கு(Existence)  ஆசாரி காரணம் அல்ல.

கொத்தனார் வீடு கட்டுமுன்பே  கட்டுமான பொருட்கள் இருந்தன.

ஆகவே வீட்டின் இருப்பிற்கு(Existence)  கொத்தனார் காரணம் அல்ல.

கடவுள் உலகை ஒன்றுமில்லாமையிலிருந்து படைத்தார்.

ஆகவே உலகின் இருப்பிற்கு கடவுள் மட்டுமே காரணம்.

ஆசாரி மறந்தாலும் நாற்காலி இருக்கும்.

ஆனால் கடவுள் மறந்தால் உலகம் ஒன்றுமில்லாமை ஆகிவிடும்.

ஏனெனில் உலகின் இருப்பிற்குக் காரணம் அவரே.

ஆனால் கடவுள் மறக்க மாட்டார், அவரால் மறக்க முடியாது.

கடவுள் விரும்பினால் உலகை ஒன்றுமில்லாமையாக்க முடியும்.

அவர் சர்வ வல்லவர்.

உலகம் படைக்கப் பட்டதற்கு மட்டுமல்ல, அது இயங்கிக்கொண்டிருப்பதற்கும் அவர்தான் காரணம்.

அவரன்றி அணுவும் அசையாது.

அவர் எங்குமிருக்கிறார்.

ஒவ்வொரு அணுவிற்குள்ளும் அவர் இருக்கிறார்.

இதைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

உலகம் சடப்பொருள் (Matter). அது இடத்தை அடைத்துக்கொண்டிருக்கிறது

ஒரு சடப்பொருள் இருக்கும் இடத்தில் இன்னொரு சடப்பொருள் இருக்க முடியாது.

ஆனால் இறைவன் ஆவி.

ஆவிக்கு இடம் தேவையில்லை.

அவரால்  இடத்தை அடைத்துக்கொண்டிருக்க முடியாது. (He cannot occupy space.)

அப்படியானால் சடப் பொருளான அணுவிற்குள் ஆவியான அவர்  எப்படி  இருக்கிறார்?

தனது வல்லமையினால் அணுவிற்குள்ளும் இருக்கிறார்.

அவரது வல்லமையால்தான் ஒவ்வொரு அணுவும் இருக்கிது,  இயங்குகிறது.

இயற்கையில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வும் இறைவனினன் வல்லமையினாலும்,  சித்தத்தினாலுமே நடைபெறுகின்றன.

இயற்கை இயங்குவதற்கான நியதிகளை (Laws of nature) வகுத்தவர் இறைவனே.

அந்நியதிகளின்படியே, அதாவது இறைவனின் திட்டப்படியே இயற்கை இயங்குகிறது.

இறைவன் மாறாதவர்,  ஆகவே அவர் ஏற்படுத்திய நியதிகளும் மாறாது.

மனிதன் சடப்பொருளாகிய உடலையும், ஆவியாகிய ஆன்மாவையும் கொண்டவன்.

மனித உடலும் அணுக்களால் ஆனதுதான்.

ஆகவே நமது ஒவ்வொரு அணுவிலும் இறைவன் இருக்கிறார்.

நமது ஆன்மாவையும் இறைவன் தனது வல்லமையால்தான் படைத்தார்.

நமது ஆன்மாவிற்குள்ளும் இறைவன் இருக்கிறார்.

இறைவன் எங்கும் இருப்பதால் நாம் இறைவனுக்குள் இருக்கிறோம்.

இறைவன் சர்வ வல்லவர், அளவில்லா அன்பு மிக்கவர்.

ஆகவே நாம் இறைவனின் அன்பிற்குள்ளும், வல்லமைக்குள்ளும் இருக்கிறோம்.

இறையன்பும், வல்லமையும் நமக்குப் பாதுகாப்பு அரணாய் அமைந்துள்ளன.

இத்தகைய பாதுகாப்பில் வாழும் நாம் எதற்கு அஞ்ச வேண்டும்?

இவ்வுலகில் நமது அன்பிற்கு உரியவர்கள் நமது அருகே
இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கிறோம்!

சர்வ வல்லவ அன்பர் நம்மோடு இருக்கும்போது எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும்!

இறையன்பு எப்போதும் நம்முடனே, உள்ளும், புறமும் இருப்பதை உணர்ந்தால் நம்மால் பாவம் செய்ய முடியுமா?

ஒருவகையில் நமது மோட்ச வாழ்வு இப்போதே ஆரம்பித்துவிட்டது என்று கூட கூறலாம்.

மோட்சத்தில் இறைவனோடு வாழ்வோம்.

இங்கேயும் நாம் இறைவனோடுதான் வாழ்கிறோம்.

ஒரு வித்தியாசம்- மோட்சத்தில் இறைவனை நேருக்கு நேர் (Face to face ) சந்திப்போம்.

இங்கே நமது உடல்  என்னும் திரை நாம்  இறைவனை நேருக்கு நேர்  பார்க்காதபடி தடுக்கிறது.

இத்திரை நீங்கும்போது நமது நித்திய வாழ்வு ஆரம்பமாகும்.

இயேசு எப்போதும் நம்மோடு இருக்கிறார் என்பதை நாம் ஏற்றுக்கொண்டால் நாம் பயப்படும் பல பிரச்சனைகள் தாமாகவே நீங்கிவிடும்.

1.நமது வாழ்வில் கஷ்டங்கள் வரும்போது,

அதுவும் நமது சக்திக்கு மீறியவையாய்த் தோன்றும்போது,

சர்வ வல்லவரான,

அளவற்ற அன்புள்ள தந்தை

எப்போதும் நம்முடன் இருக்கிறார்

என்ற நம்பிக்கை

நம்மைக் காப்பாற்றும்.

2. இந்த நம்பிக்கையால் நமது
கஷ்டங்களை நீக்கும்   பொறுப்பை நமது தந்தையிடம் ஒப்படைப்போம்.

நமது மனம் அமைதி அடையும்.

3. தொடர்ந்து கஷ்டங்கள் நீங்காதிருந்தால்,  'இறைவன் நம் தந்தை' என்ற நம்பிக்கையை நம் செபம், தியானம் மூலம் வலுப்படுத்த வேண்டும்.

இந்நம்பிக்கை வலுப்பெற்றால் 'நம் தந்தை' நமக்கு  என்ன செyyய்தாலும் அது நம் நன்மைக்காகத்தான் இருக்கும் என்பதை உணர்வோம்.

தந்தையால் பிள்ளைக்கு தீயதை அனுமதிக்க இயலாது.

இதை உணர்ந்தால் என்ன துன்பம் வந்தாலும் நாம் மகிழ்ச்சியாய் இருப்போம்.

4.துன்பம் ஒரு பிரச்சினையே
அல்ல.

இயேசு துன்பப்படுவதற்காவே பிறந்தார்.

5. சிலுவைக்குப் பின்தான் உயிற்பு.

இறைவன் எப்போதும் நம்மோடு  இருப்பதால் நாம் அவருக்கு ஏற்றபடி நாம் வாழ வேண்டும்.

இறைவன் நம்மோடு வாழ்வதுபோலவே நம் அயலானோடும் வாழ்கிறார்.

ஆகவே நாம் அயலானை அன்பு செய்யும்போது அவனுள் வாழும் இறைவனை அன்பு செய்கிறோம்.

நாம் அயலானை வெறுத்தால் அவனுள் வாழும் இறைவனை வெறுக்கிறோம்.

நாம் அயலானுக்குத் தீமை செய்தால் அவனுள் வாழும் இறைவனுக்குத் தீமை செய்கிறோம்.

நாம் இறைனை உண்மையிலேயே அன்பு செய்தால் நம் அயலானையும் அன்பு செய்வோம்.

இறைவனுக்காக நம் அயலானுக்குச் சேவை செய்தால், இறைவனுக்கே சேவை செய்கிறோம்.

நமது சேவையும் இறைவனாலேயே இயக்கப்பட வேண்டும்.

லூர்து செல்வம்.



,