"கடவுளுக்கும் செல்வத்திற்க்கும் நீங்கள் ஊழியம் செய்ய முடியாது."(லூக்.16:13)
****** ******* ******* ***
"ஹலோ! சார்,என்ன இது திருதிருன்னு முழிச்சிக்கிட்டிருக்கீங்க?"
"வேறு எப்படி முழிக்கிறதுன்னு தெரியலீங்க!"
"ஏன்? என்னாச்சி?"
"பஸ்ஸ விட்டுட்டேன்."
"கழுத போது. ஒரு பஸ் போனா இன்னொரு பஸ். இங்க நிமிசத்துக்கு ஒரு பஸ் வந்துட்டும் போய்ட்டும் இருக்கு. எதாவது ஒண்ண பிடிச்சி போகவேண்டியதுதானே!
அதுக்காக. எதையோ பறி கொடுத்தது மாதிரி நிற்கிறீங்க!"
"பறி கொடுத்தது மாதிரி இல்ல, பறி கொடுத்துட்டுதான் நிற்கிறேன்.
சாப்பாடு ருசியா இருக்கேன்னு ஆறஅமர ருசிச்சிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.
என் Luggageஓட பஸ் போய்ட்டு."
"போனா போகுது சார், வேறே Luggage வாங்கிக் கொள்ளலாம்."
"கடையிலபோயி 'ஒரு Luggage போய்டிச்சி,இன்னொன்று தாங்க'ன்னா சிரிப்பான்.
என்னுடைய Certificates இருந்த bag போய்டிச்சி சார்."
"Certificatesஆ? ஏதாவது Interview க்குப் போய்க்கிட்டிருந்தீங்களா?"
"ஆமா சார்."
"ஐயோ பாவன்னு சொல்ல மாட்டேன். நல்ல வேள போயிடிச்சின்னு சந்தோசப்படுவேன்."
"ஏன்யா, அடுத்தவன் துக்கத்தில
சந்தோசப்படுத நீயெல்லாம் ஒரு மனுசனா?"
"உன் துக்கத்தில சந்தோசப்படல,
ஏதோ ஒரு ஆபீஸ் பிழைச்சிதேன்னு சந்தோசப்படுகிறேன்."
"என்னது? ஒரு ஆபீஸ் பிழைச்சிதா?"
"ஆமா.ருசியான சாப்பாட்டுக்காக பஸ்ஸ விட்டிட்டிங்கள,
Suppose உங்களுக்கு வேலை கிடைத்துவிட்டதுன்னு வச்சிக்கிடுவோம்,
ஒரு நேரத்து ருசியான சாப்பாட்டுக்காக நீங்கவேலை பார்க்கிற ஆபீச கைவிடமாட்டீங்க என்பதற்கு என்ன guarantee?"
இதை எழுதும்போது
ஒரு வேளைத் தின்பண்டத்திற்காக
"தலைச்சனுக்குரிய தன் உரிமையை விற்று விட்ட" எசாயூ (ஆதி.25:33) ஞாபகத்துக்கு வருகிறான்.
இந்தமாதிரி ஆசாமிகள் உலகில் நிறைய பேர் இருக்கிறார்கள்.
நேரே ஆன்மீகத்திற்கு வருவோம்.
அற்ப சிற்றின்பத்திற்காக அழியா பேரின்பத்தை விட்டுக் கொடுத்துக் கொண்டிருப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே, போகிறது.
இவ்வுலகையும் அதைச் சார்ந்த பொருட்களையும் இறைவன் நமது பயன்பாட்டிற்காகத்தான் படைத்தார்.
அவற்றைப் பயன்படுத்தாமல் நம்மால் வாழமுடியாது.
முதலில் உலகைப் படைத்துவிட்டு, பிறகு அதிலுள்ள மண்ணைக்கொண்டுதான் மனிதனைப் படைத்தார்.
ஆகவே மனித உடல் மண்ணிலுள்ள உலோகங்கள், மற்றும் தண்ணீர்,காற்று ஆகியவற்றாலாகிய ஒரு
சடப்பொருள்தான்.
அப்பா நமது கையில் பணத்தைக் கொடுத்து
வாங்கப்படவேண்டிய பொருட்களின் பட்டியலையும் கொடுத்து
கடைக்கு அனுப்பி வைத்தால் நாம் என்ன செய்யவேண்டும்?
பணத்தைக் கொடுத்து பட்டியல்படி பொருட்களை வாங்கிவர வெண்டுமா?
அல்லது
கடைக்கே போகாமல் பணத்தை நம் இஸ்டப்படி செலவழிக்க வேண்டுமா?
கடவுள் நமக்கு ஒரு உடலைக் கொடுத்து,
உலகத்தையும் கொடுத்து,
நேரத்தையும் கொடுத்து, சொல்கிறார்,
"பிள்ளைகளே,
நீங்கள் நித்திய காலமும் என்னோடு வாழ
உங்களைத் தயாரிப்பதற்காக
உங்களுக்கு உலகத்தையும் நேரத்தையும் கொடுத்திருக்கிறேன்.
அவற்றை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான கட்டளைகளையும் கொடுத்திருக்கிறேன்.
எனது கட்டளைகள்படி அவற்றைப் பயன்படுத்தினால் நித்திய காலமும் என்னோடு பேரின்பமாக வாழ்வீர்கள்.
எனது கட்டளைகளை மீறி உங்கள் இஸ்டப்படி பயன்படுத்தினால் நித்தியமும் என்னை இழந்து பெருந்துன்பத்தில் வாழ்வீர்கள்."
ஆக நாம் வாழும் உலகும், நேரமும், உடலும் தரப்பட்டிருப்பது இறைவனுக்காக வாழ,
நமது இஸ்டப்படி வாழ அல்ல.
முதலில் நமது உடலை இறைப்பணிக்காக பயன்படுத்த வேண்டும்,
வெறுமனே 'இரை'ப்பணிக்காக அல்ல!
சாப்பாட்டு இன்பத்தில் Interview வைக் கோட்டைவிட்ட ஆசாமியைப்போல,
நாம் உடல் சிற்றின்பத்திற்காக
நித்திய பேரின்பத்தை கோட்டைவிட்டுவிடக் கூடாது!
பணம், உணவு உட்பட உலகப்பொருகட்கள் நம்மிடம் தரப்பட்டிருப்பது
அவற்றை நமக்காக மட்டும் பயன்படுத்த அல்ல,
இறைவனுக்காக நம் அயலானோடு பகிர்ந்து பயன்படுத்துவதற்காகவும்தான்.
நமக்குத் தரப்பட்டிருக்கும் நேரம் நமக்கு மட்டும் பயன்படுத்துவதற்றாக அல்ல,
இறைப்பணிக்காகவும், பிறர்பணிக்காகவும் பயன்படுத்துவதற்காகவும்தான்.
உண்மையில் இறைவனுக்காக செய்யப்படும் பிறர்பணியும் இறைப்பணிதான்!
இறைவன் நமது எஜமான். நாம் பயன்படுத்துபவை எல்லாம் அவருக்கே சொந்தம்.
அவற்றை அவர் சொன்னபடி பயன்படுத்தினால் நாம் அவரது ஊழியர்கள்.
அவரைப்பற்றிக் கவலைப்படாமல் அவற்றை அவற்றிற்காகவே பயன்படுத்தினால்
நாம் அந்தப் பொருட்களின் ஊழியர்கள்.
இன்று பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவர்கள் உண்மையில் பணத்தின் அடிமைகள்.
ஏனெனில் பணம்தான் அவர்களின் வாழ்க்கைப் போக்கைத் தீர்மானிக்கிறது.
எஜமானுக்காக எதையும் செய்யும் ஊழியர்களைப்போல பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.
நாட்டில் வேகமாக வளர்ந்துவரும் லஞ்ச ஊழல் பிரச்சனைக்கு மித மிஞ்சிய பணஆசைதான் காரணம்.
எதையும் பணத்தால் சாதிக்கமுடியும் என்று எண்ணுபவன் கடவுளைத் தேடமாட்டான்.
ஏனெனில்,
"கடவுளுக்கும் செல்வத்திற்கும் நீங்கள் ஊழியம் செய்ய முடியாது."
பணஆசை உள்ள எவரும்,
யாராக இருந்தாலும் சரி,
ஆன்மீகவாதியாக இருக்க முடியாது,
ஆன்மீக வியாதியாக வேண்டுமானால் இருக்கலாம்!
'இறைவனுக்காக' செய்யப்படும் பிறர்பணி இறைப்பணியாக இருப்பதால்,
உலகப் பொருட்களைக் கொண்டு பிறர்பணி ஆற்றுவோம்,
இறையருள் பெற்று ஈடுஇணையற்ற விண்ணக வாழ்வை அடைவோம்.
இறைவனோடு நித்திய பேரின்பத்தில் இணைவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment