எல்லோரும் கணக்குக் கொடுக்க வேண்டும்.
******* ******* ******
உயிர்த்த ஞாயிறு நள்ளிரவுத் திருப்பலிக்குக் கூட்டம் அலைமோதுகிறது.
அதே மக்கள்தான் வாரத்தின் ஏழு நாட்களும் வீட்டில் இருக்கிறார்கள்.
ஞாயிறுத் திருப்பலிக்கு ஏன் அவ்வளவு கூட்டமில்லை?
ஒவ்வொரு ஞாயிறும் ஆண்டவர் உயிர்த்த நாள்தானே!
** ** ** ** **
கையில் திவ்ய நற்கருணையை வைக்கும்போது நற்கருணைத் துகள்கள் (particles) கையில் விழும்.
கையில் விழுந்த துகள்கள் தரையில் விழும்.
தரையில் விழுந்த துகள்கள் வருவோர் போவோர் கால்களில் மிதிபடும்.
ஒவ்வொரு துகளிலும் இயேசு முழுமையாக இருக்கிறார்.
வருவோர் போவோரிடம் மிதிபடுவது நமது ஆண்டவர்!
பாடுபடும்போது பட்ட மிதி போதாதா?
எவ்வளவு பெரிய அவசங்கை!
வாங்குபவர்கள் தேவசாஸ்திரம் படியாதவர்கள்.
அவர்களுக்கு விபரம் தெரியாமலிருக்கலாம்.
ஆனால் கொடுப்பவர்கள்?
அவர்களைக் கேள்வி கேட்க எங்களுக்கு உரிமை இல்லை.
ஆனால் பதில் சொல்லவேண்டிய நேரம் வரும்.
அவசங்கைப் பட்டவரிடம்தான் எல்லோரும் கணக்குக் கொடுக்க வேண்டும்!
***** ****- *****
கோவில் வாசலில் அடிக்கடி நிற்கும் ஒருவர் கோவிலுக்குள் போகும் ஒருவரிடம் கேட்டார்.
"விண்ணகத்திலுள்ள எங்கள் தந்தையே என்று யாரை அழைக்கிறீர்கள்?"
"கடவுளை. அவர்தான் நம் எல்லோருக்கும் தந்தை."
"அப்போ நான் உங்களுக்கு?"
"சகோதரன்."
"சகோதரனை நேசிக்க வேண்டாமா?"
"நான் உன்னை நேசிக்கிறேன்."
"அப்போ,நான் கையை நீட்டும்போது ஏன் பிச்சை போடுவதில்லை?"
"அண்ணன் தம்பிக்கு பிச்சை போடுவதா?
நீ சகோதரனிடம் எப்படி பிச்சை கேட்கலாம்?"
"வேறு என்ன கேட்கலாம்?"
"உதவி கேட்கலாம். நீ கோவில் வாசலில்தானே அடிக்கடி நிற்கிறாய்.
நான் சாமியாரிடம் சொல்லுகிறேன்.
அவர் உனக்கு ஏற்ற வேலை தருவார்.
சம்பளம் தருவார். தினமும் சாப்பாடும் தருவார்.
சொல்லட்டுமா?"
"வேலையா? உமக்கு முடிந்தால் பிச்சை போடும், அல்லது ஆளைவிடும்.''
"!!?!??"
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment