Tuesday, September 17, 2019

என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுவோம்.

என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுவோம்.
****    *****     ******      *******

"ஏண்டா லேட்டு?"

"கொஞ்சம் பிந்திப்போச்சி, சார்."

"ஏண்டா பிந்திப்போச்சி?"

"கொஞ்சம் லேட் ஆயிடிச்சு,சார்."

"அப்போ நீ உண்மையான பதில சொல்லமாட்ட!"

"சார், சத்தியமா நான் சொல்றதுதான் உண்மையான பதில்.

லேட் ஆனதுனாலதான் சார் பிந்திப்பபோச்சி."

"கைய நீட்டு."

"சார்....."

"நீட்ல."

"சார் உண்மையைச் சொல்லிடறேன்."

"அப்போ நீ நான் சொன்னதக் கேட்கமாட்ட. பிரம்பு சொல்றதத்தான் கேட்ப."

"எங்க அப்பா காலையில இதத்தான் சொன்னாரு."

"என்ன சொன்னாரு?"

"இந்தக்காலத்துப் பசங்க அன்பாச் சொன்னா கேட்க மாட்டாங்க, அடிகொடுத்தாத்தான் கேப்பாங்கன்னு  சொன்னாரு."

"அப்போ நீ காலையில அப்பாக்கிட்ட அடிவாங்கிக்கிட்டு வந்திருக்க."

"அடிவாங்கினதினாலதான் வந்திருக்கேன்,சார். எங்கவீட்ல எல்லாரும் ஒரு கல்யாண வீட்டுக்குப் போறாங்க. நானும் வருவேன்னு சொன்னேன்.அதுக்குதான் சார்,
அடி."

"அந்த அடியே போதும். இங்கே பார். படிக்கிறகாலத்தில உன் கவனம் முழுவதும் படிப்புலதான் இரருக்கணும், விருந்துகளில் அல்ல. புரியுதா?"

"புரியுது சார். அடிபட்டபிறகுதான் புரியுது."

"இப்போவாவது புரிஞ்சித, ரொம்ப சந்தோசம். கொஞ்சம் கையக்காண்பி."

"சார், அது போதும்னு சொன்னீங்க!"

"அடிக்கமாட்டேன். அடிபட்ட இடத்தப் பார்க்கணும்.....எலே, சரியாவுள்ள அடியா இருந்திருக்கும் போலிருக்கு!"

"கை வீங்கிவிட்டது. அம்மா ஒத்தடம் கொடுத்தாங்க. அதுதான் பிந்திவிட்டது"

"சரி, இடத்துக்குப் போ.

மாணவர்களே கொஞ்சம் கவனிங்க. எப்பவுமே அனுபவத்திலிருந்து பாடம் கத்துக்கணும்.

இப்ப இந்த மாணவனின் அனுபவத்திலிருந்து நீங்க என்ன பாடம் கத்துக்கிட்டீங்க?"

"சார், இன்றைக்கு வீட்டுக்கு போனவுடனே வீட்டில் பிரம்பு இருக்கான்னு தேடிப்பார்த்து, இருந்தா எடுத்து தூரப்போட்டிடணும்."

"சார், அவன் சொல்றது தப்பு.

நம்ம எல்லோருக்கும் அப்பா கடவுள்.

கடவுள் அன்பானவர். நாமும் அன்பா இருக்கணுங்கறது அவரது ஆசை.

அதுக்காக சிலகட்டளைகளைக் கொடுத்திருக்கிறாரு.

எல்லாம் அன்பின் கட்டளைகள்தான்.

ஆனால் அநேக சமயங்களில நாம் கட்டளைகளை மீறுகிறோம்.

ஆனாலும் கடவுள் அன்பாதான் இருக்கிறாரு.

நம்மைத் திருத்துவதற்காக அப்பப்போ சில கஸ்டங்கள வரவிடுவாரு.

நாம் கஸ்டங்கள் வந்தவுடன் கடவுளை நினைக்க வேண்டும்,

கட்டளைகளை மீறியதற்காக மனம் வருந்த வேண்டும்.

கடவுளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

கஸ்டங்கள் வந்ததற்காக வருந்தக்கூடாது.

திருந்வேண்டும்.

ஒருவகையில் சந்தோசப்பட வேண்டும்.

ஏனெனில் கடவுளுக்கு நம்மேல் அன்பு இருப்பதால்தான் நம்மைத் திருத்துவதற்காக கஸ்டங்களை வரவிடுகிறார்.

அந்த மாணவன் அடி வாங்கியதும் இதே காரணத்திற்காகத்தான்.

அடிவிழுந்திருக்காவிட்டால் இன்றைக்கு பள்ளிக்கு வந்திருக்க மாட்டான்."

"Very good. கஸ்டங்களை நீக்கச் சொல்லி கடவுளிடம் கேட்கலாமா?"

"கேட்கலாம். கடவுள் நமது அப்பாதான.

ஆனால் யாருக்கு என்ன செய்தா  அவனுக்கு நல்லதுன்னு கடவுளுக்குத் தெரியும்.

நம்ம வகுப்ல பாருங்க. சிலர் சொன்னவுடனே கேட்கிறாங்க.

சிலர் அதட்டினா  கேட்கிறாங்க.

சில பிரம்பக் காண்பித்தாலே
கேட்கிறாங்க.

சிலர் இலேசா தட்டினா கேட்கிறாங்க.

சிலர் அடிச்சா கேட்கிறாங்க.

சிலர் ஓங்கி அடிச்சா கேட்கிறாங்க.

யார்யாருக்கு என்ன செய்யணும்னு உங்களுக்குத் தெரியுதுல்ல,  கடவுளுக்குத் தெரியாதா?"

"Very good. மணிய அவனுடைய அப்பா அடிச்சாரு, அம்மா ஒத்தடம் கொடுத்தாங்கள்லா,

நமக்கு அப்பாவும் கடவுள்தான்,
அம்மாவும் கடவுள்தான்.

நம்மை அடிப்பவரும் அவர்தான், அரவணைக்கிறவரும் அவர்தான்.

ஆகையினால நமக்கு என்ன நேர்ந்தாலும் அவருக்கு நன்றி கூறவேண்டும்."

"சார், ஒரு சந்தேகம்.  ஒருவன் Bikeஅ Overspeedல ஓட்டி கீழே விழுந்துவிட்டான்.

உடல் எல்லாம் காயங்கள்.

அவன் கடவுளுக்கு நன்றி கூறவேண்டுமா?"

"Overspeedல ஓட்டியது தப்பு.
கீழே விழுந்ததும், காயங்ஙளும் அதன் விளைவுகள்.

இதில் அவனுக்கு இரண்டு நன்மைகள் கிடைத்துள்ளன.

1. இனி அதிக வேகத்தில் வண்டி ஓட்டக்கூடாது  என்று   ஒரு பாடம் கற்றிருக்கிறான்.

2.பட்டகாயங்களையும், வேதனையையும் தனது பாவங்களுக்குப் பரிகாரமாக கடவுளுக்கு ஒப்புக்கொடுக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

கற்ற பாடத்திற்காகவும், கிடைத்த சந்தர்ப்பத்திற்காகவும் இறைவனுக்கு நன்றி கூறலாமமே!"

"ஒருவன் சோம்பேறித்தனத்தின் காரணமாக தேர்வில் fail ஆகிவிட்டான்.

அவன் எப்படி நன்றிகூறுவது?"

"சோம்பேறித்தனத்தின் விளைவு தோல்வி.

'சோம்பேறியாக இருந்தால் தோல்விதான் கிட்டும்'  என்ற பாடத்தைக் கற்றுக்கொண்டால்

அதைக் கற்றுத்தந்த தோல்விக்காக இறைவனுக்கு நன்றி கூறலாமே."

"டிங்...டிங்......"

"Alright. Get ready for the English class!"

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment