Saturday, May 5, 2018

"நமது குருக்களின் உருவில் வாழ்வது கிறிஸ்துவே."

"நமது குருக்களின் உருவில் வாழ்வது கிறிஸ்துவே."
*********************************

இயேசு உலகில் வாழ்ந்தபோது அவர்கால மக்கள் அவரோடு எப்படிப் பழகியிருப்பார்கள்?

அவர் பொது வாழ்விற்குள் நுழையுமுன்

அவர் இறைமகன் என்ற உண்மை

மாதா,  சூசையப்பர், எலிசபெத், சக்கரியாஸ், ஸ்நாபக அருளப்பர் 

ஆகிய வெகு சிலருக்கே தெரியும்.

அவர் பொது வாழ்விற்குள் நுழையும்போது அவருக்கு வயது 31.

தான் இறைமகன் என்பதை எண்பித்து,

நற்செய்தியை அறிவித்து,

நமக்காகப் பாடுகள் பட்டு,

சிலுவையில் பலியாகிட

மூன்று ஆண்டுகள்.

இந்த மூன்று ஆண்டுகளும் இயேசு மக்களோடு நெருங்கிப் பழகினார்.

அவர் யூதர்களுடைய செபக்கூடங்களில் அவர் போதித்துவந்தார்.

சென்றவிடமெல்லாம் நோயாளிகளைக் குணமாக்கினார்.

பாவங்களை மன்னித்தார்.

நற்செய்தியை அறிவித்தார்.

தங்கள் நோய்களிடமிருந்து பெறவும்,

அவரது போதனையைக் கேட்கவும்

அவரைப் பின்ற்றியவர்களுள் அநேகர்

அவரது சீடர்களாக மாறினார்கள்.

2000 ஆண்டுகட்கு முன்பு இவ்வுலகில் வாழ்ந்த அதே இயேசு

இப்போது நம்மிடையே வாழ்கிறார்.

திவ்ய நற்கருணைப் பேழைக்குள்

தனது  உயிர், உடல், ஆன்மாவுடன்

உண்மையிலேயே பிரசன்னமாய் இருக்கிறார்.

Jesus is really present in the Holy Eucharist.

மேலும் நம்மிடையே நமது குருக்கள் வடிவில் வாழ்ந்து வருகிறார்.

"வாழ்பவன் நானல்ல: என்னில் வாழ்பவர் கிறிஸ்துவே."

என்ற புனித சின்னப்பர் கூற்றுக்கு இணங்க,

"நமது குருக்களின் உருவில் வாழ்வது கிறிஸ்துவே."

கிறிஸ்துவுக்குப் பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உண்டு.

அதே அதிகாரத்தைக் கிறிஸ்து குருக்களுக்கும் கொடுத்திருக்கிறார்.

"எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ,

அவர்களுக்கு அவை மன்னிக்கப்பெறும்: "
(அரு.20:23 )

                  **

"இது உங்களுக்காக அளிக்கப்படும் என் உடல்"

"இக்கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படும் என் இரத்தத்தினாலாகும் புதிய உடன்படிக்கை.''

இயேசு இவ்வார்த்தைகளால்

அப்பத்தையும், இரசத்தையும்

முறையே தன் உடலாகவும்,
இரத்தமாகவும் மாற்றி

தன் அப்போஸ்தலர்களுக்கு உண்ணக் கொடுத்தார்.

குருவானவரும் இயேசு கொடுத்த அதிகாரத்தினால்

இதே வசீகர வார்த்தைகளால்

ஓஸ்தியையும்,  இரசத்தையும்

இயேசுவின் உடலாகவும், இரத்தமுமாக மாற்றி

நமக்கு உணவாகத் தருகிறார்.

ஆக, குருவானவர் இயேசுவாகவே செயலாற்றுகிறார்.

பாவ நோயிலிருந்து நமககுக் குணமளித்தல்,

இயேசுவின் நற்செய்தியை மக்களுக்கு அறிவித்தல்,

திருப்பலி நிறைவேற்றி இறைமக்களுக்கு இயேசுவை உணவாக அளித்தல்,

தேவத்திரவிய அனுமானங்களை நிறைவேற்றுதல்,

இறைமக்களுக்கு ஆன்மீக வழி காட்டுதல்

ஆகிய ஆன்மீகப் பணிகளே குருக்களுக்கு உரியவை.

மக்களும் குருக்களை,

பாவமன்னிப்பு பெறுதல்,

இறைவார்த்தையைக் கேட்டல்,

இயேசுவை உணவாகப் பெறுதல்

போன்ற ஆன்மீகக் காரியங்களுக்காக மட்டுமே அணுக வேண்டும்.

குருக்களிடம் ஆன்மீகப் பணிகள் மட்டும் கொடுக்கப்பட வேண்டும்.

நிர்வாகப் பணிகளைக் கொடுத்தால் பெரும்பாலான நேரத்தை நிர்வாகமே விழுங்கிவிடும்.

இயேசு லௌகீக நிர்வாகத்தை விரும்வில்லை.

"அப்போது, கூட்டத்தில் ஒருவன், "போதகரே, என் சகோதரன் என்னுடன் சொத்தைப் பங்கிட்டுக்கொள்ளுமாறு சொல்லும்" என்றான்.

14 அதற்கு அவர், "அன்பனே, நியாயம் தீர்க்கவோ பாகம்பிரிக்கவோ என்னை ஏற்படுத்தியவர் யார்?" என்றார்."(லூக். 12:13,14)

யார்யாருக்கு என்னென்ன பணி தரப்பட்டுள்ளதோ அதைச் செவ்வனே செய்வோம்.

லூர்து செல்வம்

No comments:

Post a Comment