Friday, May 4, 2018

இருந்தால் மட்டும் போதாது.

இருந்தால் மட்டும் போதாது.
******************************

"ஹாய்!  புது மாப்ள! எப்படி  இருக்க?"

"ஹய்! நல்லா இருக்கேன்."

"அப்படித் தெரியலிய!  கல்யாணம் முடிச்சி ஒரு மாதம் ஆகுது. நிறைய வீடுகளில விருந்து வச்சிருப்பாங்க.
புது மாப்பிள்ளைக்கு உடம்பு எவ்வளவு தடிச்சிருக்கணும் ?
அப்படி ஒண்ணும் தெரியலிய."

"நான் ஒண்ணு கேட்கணுமே.
கேட்கலாமா?''

"தாராளமா கேளு.ஏநான் ஒண்ணும் புதுமாப்ள இல்ல, வெட்கப்படுததுக்கு."

"உன் தம்பி வீட்டுக்குப் போனியா? "

"தம்பியா?  எனக்கெங்க தம்பி இருக்கான்? "

"தினமும் பூசைக்குப் போறல்ல? "

"ஆமா."

"தினமும் நன்ம எடுக்கிறல்ல?'

"ஆமா."

"தினமும் பூசையில 'சமாதானம்' சொல்றல்ல?"

"ஆமா."

"உன் 'ஆமாக்களூக்கு' அர்த்தமே இல்ல."

"இருக்கு. ஆமான்னா 'Yes'ன்னு அர்த்தம்."

"உன் அகராதி அர்த்தத்த எவன்  கேட்டான்.

நீ கண்ட பூசைகளினால,

எடுத்த நன்மைகளினால,

சொன்ன சமாதானங்களினால

உன் வாழ்க்கையில

ஒரு மாற்றமும் ஏற்படலிய.

கூடப்பிறந்த தம்பியையே இல்லைங்கிற.''

"..........."

"பதில் சொல்ல முடியலல்ல. கிறிஸ்தவனா இருந்தா மட்டும் போதாது.

நல்ல கிறிஸ்தவனா வாழணும்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment