இப் பொழுது மட்டுமல்ல,
எப் பொழுதும்
இறைவனுக்கே!
********************************
"தம்பி, உனக்கு ஒரு கட்டளை தரப்போகிறேன். கீழ்ப்படிந்தால் பரிசு; மீறினால் பரிசு கிடையாது ; உனக்குப் பிரியமான ஒன்றை இழக்க வேண்டியிருக்கும். சரியா? "
"சரி. கட்டளையைச் சொல்லுங்க."
"இந்த பாத்திரத்தில இரண்டு வடை இருக்கு. இரண்டையும்
மிச்சம் வைக்காமல் சாப்பிடவேண்டும்."
"என்னது. வட சாப்பிடணுமா? இதுக்கு கட்டளை எதுக்கு. காண்பித்தாலே போதுமே. சரி வடையைக் காண்பியுங்கள்."
நம்மிடமும் ருசியான பண்டத்தைக் கொடுத்து சாப்பிடச் சொன்னால் என்ன சொல்வோம்?
முடியாது என்று சொல்வோமா?
ஆனால் சொல்கிறோமே!
ஒன்றுமில்லாமையிலிருந்து நம்மை உண்டாக்கிய கடவுள்
நமக்கு இனிப்பான கட்டளை ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.
"Love me. என்னை நேசியுங்கள்.
Love your brothers and sisters.
உங்கள் சகோதர
சகோதரிகளைஅன்பு செய்யுங்கள்.
நான் உங்கள் தந்தை. உங்களை அளவுகடந்து நேசிக்கிறேன்.
என்னை நேசிப்பதற்காகவே உங்களைப் படைத்திருக்கிறேன்."
இதைவிட எளிதான, இனிமையான கட்டளையைத் தரமுடியுமா?
புனித அகுஸ்டின் சொல்கிறார்,
"Love and do as you like.
நேசியுங்கள்
என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்."
அதெப்படி? என்ன வேண்டுமானாலும்? பாவம் கூடவா?
ஹலோ! நேசியுங்கள்
என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்.
கடவுளை நேசித்துக் கொண்டே எப்படீங்க பாவம் செய்ய முடியும்?
அம்மா மகனிடம் சொன்னாள்,
"என் கையைப் பிடித்துக்கொள். கையை விடாமல் எங்கே வேண்டுமானாலும் போ! "
"Go anywhere you like, but without leaving my hand."
அம்மா கையைப் பிடித்துக்கொண்டே எவ்வளவு தூரம்க போகமுடியும்?
அம்மாவைச் மட்டும்தானே சுற்றி வரமுடியும்!
அப்படியேதான்
இறைவனை நேசித்துக்கொண்டே எப்படிப் பாவம் செய்ய முடியும்?
சரி. இறைவனையும், அயலானையும் நேசி என்பது இனிய கட்டளைதான்.
உலகிலேயே மிக இனிமையான வேலை அன்பு செய்வது மட்டும்தான்.
அன்பு செய்து கொண்டே இருந்தால் போதுமா?
அன்பு இருந்தால் செயல் தானே வரும்.
உயிருள்ள அன்பு சும்மா இருக்காது.
அன்பும் நற்செயலும் இரட்டைக் குழந்தைகள்.
அன்பு பிறந்தவுடன் நற்செயலும் கூடவே பிறந்து விடும்.
நம் அறைக்கு இனிய வாசனை வேண்டுமென்றால், மலர்களைக் கொண்டுவந்தால் போதும்.
வாசனை கூடவே வந்துவிடும்.
காதலர்களைக் கேளுங்கள். சொல்வார்கள்.
உண்மையான காதலனால் காதலிக்குச் சேவை செய்யாமல் இருக்க முடியாது.
அன்பு உயிருள்ளது. துடிப்புள்ளது.
ஒன்றுமே செய்யாவிட்டால் அன்பு செத்துவிட்டது என்று அருத்தம்.
இறைவனையும், அயலானையும் அன்பு செய்துகொண்டே இருப்போம்.
அன்புடன் நற்செயலும் புரிந்துகொண்டுதான் இருப்போம்.
காலையில் எழுந்தவுடன் இறையன்பைத் தியானிப்போம்.
"அன்பே! ஆருயிரே! இறைவா,
உம்மை அளவுகடந்து நேசிக்கிறேன்.
எனக்காக அல்ல,
அன்பே!
உமக்காகவே வாழ்கிறேன்.
என் ஒவ்வொரு மூச்சும் உமக்காக!
என் ஒவ்வொரு அசைவும் உமக்காக!
என் ஒவ்வொரு செயலும் உமக்காக!
ஏற்றருளும் இறைவா,
என்னையும்,
என் செயல்களையும்
ஏற்றருளும்
இறைவா!
நான் இருந்தாலும் உமக்காக!
இறந்தாலும் உமக்காக."
என்று செபிப்போம்.
இப் பொழுது மட்டுமல்ல,
எப் பொழுதும்
இறைவனுக்கே!
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment