Thursday, September 27, 2018

God's eternal plan and our prayer. இறைவனது திட்டமும், நமது செபமும்.

God's eternal plan and our prayer.

இறைவனது திட்டமும், நமது
செபமும்.
****--****-**********************

இறைவன் நித்திய காலத்திலிருந்தே நமது வாழ்விற்காக திட்டம் ஒன்று வகுத்துள்ளார்.

அவர் தனது திட்டத்திலிருந்து மாறுவதில்லை.

இறைவன் மாறாதவர்.

இறைவன் சுதந்திரமாக வகுத்த திட்டத்தை யாராலும் மாற்றமுடியாது.

இறைவன் தன்  திட்டத்திலிருந்து மாறாதவர் என்றால்,

நாம் ஏன் செபிக்கவேண்டும்?

உண்மையில் கடவுளுடைய மனதை மாற்றுவது செபத்தின் நோக்கமன்று.

The point of praying is not to “change God’s mind.”

சில சமயங்களில் நமது செபத்தின் மூலம் இறைவனது மனதை மாற்றிவிட்டதுபோன்ற தோன்றும்.

உதாரணத்திற்கு, நமக்கு நோய் வருவது இறைவனது சித்தம்.

நாம் நோய் நீங்கும்படி செபிக்கும்போது நாம் குணம்பெற்றால், நமக்கு நோயை வரவிட்ட இறைவன் மனம் மாறி நமது நோயை நீக்கி சுகம் தந்துவிட்டதாக நினைக்கத்தோன்றும்.

ஆனால் உண்மை அதுவல்ல.

காலங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட இறைவனுக்கு,
உலக அனுபவத்தைச் சார்ந்த முக்காலமும் தெரியும்.

கடவுள் நித்தியர்.

ஆகவே அவரது அறிவு(Knowledge) நித்தியமானது.

ஆகவே நமது எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது நித்திய காலமாகவே இறைவனுக்குத் தெரியும்.

நாம் தாயின் கருவில் உருவாகுமுன்பே நாம் பிறந்தபின் நமது வாழ்வில் நடைபெறப்போகும் அத்தனை நிகழ்வுகளும் அவருக்குத் தெரியும்.

நாம் நோயில் விழப்போவதும்,

நாம் குணம் பெற வேண்டப்போவதும்

நித்திய காலமாகவே அவருக்குத் தெரியும்.

ஆகவே, நமது வேண்டுதலுக்கிணங்க. நமக்குக் குணம் தர

அவர் நித்திய காலத்திலிருந்தே திட்டம் வகுத்துவிட்டார்.

ஆகவே கடவுள் தன் நித்திய திட்டப்படிதான் (Eternal plan) செயலாற்றுகிறார்.

தன் மாறாத திட்டப்படிதான் இறைவன் குணமாக்குகிறார்.

நாம் செய்யும் எல்லா செபங்களுக்கும் பதில்

நித்திய காலமாகவே தீர்மானிக்கப்படுகிறது.

நாம் நமது சுதந்திரத்தைப் பயன்படுத்தி நாம் எடுக்கும் முடிவுகளையும், நமது செபங்களையும் கருத்திற்கொண்டுதான் தன் நித்திய திட்டத்தைத் தீட்டுகிறார்.

தன் திட்டத்தைத் தானே மாற்றமாட்டார்.

அவர் மாறுவதில்லை.

நமது செபத்திற்கு மூன்று  விதமாகப் பதிலளிக்கிறார்.

1. நமது செபத்தை அப்படியே  ஏற்றுக் கொள்ளலாம்.

2. நமது செபத்திற்கு உடனே பதிலளிக்காமல்

நாம் கேட்கும் பொருள்

நமக்கு எப்போது கிடைத்தால்

நமக்கு பயன்தரும் என்று இறைவன்
கருதுகிறாரோ

அப்போது தரலாம்.

3.நாம் கேட்கும் பொருள் நமக்குக் கெடுதி தருவதாயிருந்தால் அதைத் தரமாட்டார்.

ஆனாலும் நமது செபம் வீணாய்ப்போகாது.

நமக்குப் பயன்தரும் வேறு        எதாவது ஒரு பொருளைத் தருவார்.

அவர் எதைத்தந்தாலும், தராவிட்டாலும் அது நமது ஆன்மீக இரட்ண்யத்துக்காகத்தான் இருக்கும்.

செபத்தின் நோக்கம் வெறுமனே உதவிகள் பெறுவது மட்டுமல்ல.

அளவில்லாத அன்பும், நன்மைத்தனமும் எல்லாம் வல்ல இறைவனோடு

நம் உறவை வலுப்படுத்திக் கொள்வதுதான் செபத்தின் நோக்கம்.

நமது தேவைகட்காகவும், பிறர்களுடைய தேவைகட்காகவும் இறைவனிடம் வேண்டுவது செபத்தின் ஒரு பகுதிதான்.

ஆனால் செபத்தின் உண்மையான நோக்கம் இறைவன்தான்.

ஆகவே நமது செபம் இறைவனின் திருவுளத்திற்கு எதிரானதாக இருக்கக்கூடாது.

நமது சுதந்திரத்தை

இறைவனுக்குப் பணி புரிய பயன்படுத்தி,

செபத்தை இறைவனோடு இணைந்து வாழப் பயன்படுத்தி வாழ்ந்தால்

இறைவனது திட்டத்தில் நமது இரட்சண்மும் அடங்கும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment