Monday, September 24, 2018

இறைவன் நமது சுதந்திரத்தில் தலையிடுகிறாரா?

இறைவன் நமது சுதந்திரத்தில் தலையிடுகிறாரா?
**********--******-**************

"Good morning."

"Very Good morning. நேற்று 'ஒரு கேள்வி பாக்கி இருக்கிறது' என்று கூறி விட்டு நகர்ந்தாயே, அது என்ன கேள்வி? "

"தானே கொடுத்த அவனது சுதந்திரத்தில் தலையிடக்கூடாது என்பது அவர் சித்தம்.'

என்று சொன்னது ஞாபகம் இருக்கா. "

"சரி, இப்போ கேள்வியைக் கேளு."

"கடவுள் நமது சுதந்திரத்தில் தலையிடமாட்டார் என்றால், பாவிகள் மனம் திரும்புவதற்காக வேண்டி என்ன பயன்?

புனித மோணிக்கா தன் மகன் அகுஸ்தீன் மனம் திரும்ப முப்பது ஆண்டுகள் செபித்தாள்,

அவளுடைய செபத்தின் காரணமாக அகுஸ்தீன் மனம் திரும்பினார்

என அவளது வரலாறு கூறுகிறது.

அது எப்படி சாத்தியமாயிற்று? 

சுதந்திரமாகப் பாவியாய் வாழ்ந்தவரை 

அவரது சுதந்திரத்தில் தலையிடாமல் எப்படி  புனிதராக மாற்றமுடியும்? "

"உன் திருமணம் எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியும்.

இருந்தாலும் உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்காக சிலவிசயங்களை உன் வாயிலிருந்தே வரவழைக்க
வேண்டியிருக்கிறது."

"விளையாடுறியா? நான் கேட்ட கேள்விக்கும்,  என் திருமணத்துக்கும் என்ன சம்பந்தம்? "

"உலகத்திலுள்ள எல்லாபொருட்களும் ஒன்றுக்கொன்று சம்பந்தந்தப்பட்டவைதான்.

All the things  in this world
are interrelated. 

திருமண விசயத்தில் உன் சுதந்திரத்தில் உன் அப்பா தலையிட்டாரா? "

"இல்லை. எனக்கு விருப்பமான பெண்ணையே திருமணம் செய்தேன்."

"காதல் திருமணமா?"

"இல்லை. அப்பா பார்த்த பெண்ணைத்தான் திருமணம் செய்தேன்."

"அப்பா பார்த்த பெண்ணைத்தான் திருமணம் செய்தால் அப்பா உன் சுதந்திரத்தில் தலையிட்டதாகத்தான் அர்த்தம்."

"இல்லை. அப்பா ஒரு பெண்ணைக் காண்பித்து அவளது நற்குணங்களை விளக்கினார்.

நான் அவளை முழு மனதோடு ஏற்றுக்கொண்டேன்."

"அப்போ,

உனது சுதந்திரத்தில் தலையிடாமலேயே

உன் அப்பாவால்

அவர் நினைத்ததை உன்னிடம் 

சாதிக்கமுடிந்தது,

இல்லையா"?

"முடிந்தது"

"உன் அப்பாவால் முடிந்தது  இறைவனால்  முடியயாதா?"

"புரிந்தது மாதிரியும் இருக்கு,
புரியாதது மாதிரியும் ."

"என்ன புரியல?"

"இல்ல......நான் ஒண்ணும் எங்க அப்பாவ பொண்ணு பார்க்கச் சொல்லல, அவரா பார்த்தாரு, சொன்னாரு, நானும் சரின்னுட்டேன்.

அதேமாதிரி கடவுளும் நாம் கேட்காமலே நம்மை  நல்லவங்களா ஆக்கலாமல்லா".

"அதாவது நீ சோம்பேறியா இருக்கணும், 

உன்ன படைச்சபாவத்துக்கு

நொண்டிப்பிள்ளைய தாய் தூக்கிக்கிட்டு போகிறது மாதிரி

அவரே தூக்கிக்கிட்டு போகணும்.

அப்படித்தானே?"

"டேய்!  நீ சொன்னாலும், சொல்லாவிட்டாலும் நான் நொண்டிப்பிள்ளைதான்டா.

என்னால் சுயமா ஒரு துரும்பக்கூட அசைக்க முடியாது.

கடவுளுடைய அருளுதவி இல்லாமல் என்னால் வாழவே முடியாது.

எனக்குச் சுதந்திரம் இருக்கு.

ஆனால் அதைச் சரியாக பயன்டுத்த கடவுளுடைய அருள் தேவை.

அதை நான் கேட்டுப் பெறணும்.

எவ்வளவுக்கு  எவ்வளவு கடவுளுடைய அருளுதவியைக் கேட்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நாம் கடவுளை நெருங்குகிறோம்.

அதிகமான உதவியும் கிடைக்கும்.

கடவுள் ஒருபொதும்  என்னுடைய சுதந்திரத்தில் தலையிடுவதில்லை.

ஆனால் அதை ஒழுங்காகப் பயன்படுத்த வேண்டிய உதவி செய்கிறார்.

God  influences my freedom to make the right choice by His grace and inspiration without violating it.

நாம் நமக்காக மட்டுமல்ல, பிறருக்காகவும் வேண்டலாம்.

மோனிக்காகவும் தன் மகன் மனந்திரும்ப அருள்வரம் கேட்டு 30 ஆண்டுகள் விடாது செபித்தாள்.

கடவுளும் தன் அருளாலும், (Grace),தூண்டுதல்களாலும் (Inspirations) அவரை ஈர்க்க,

அகுஸ்தீன் தான் மனம்திரும்மவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து மனம்திரும்பினார்.

கடவுள் அவருடைய சுதந்திர உரிமையில் தலையிடவில்லை,

தனது அருள்வரத்தால் தன்னை நோக்கி ஈர்த்தார்.

ஏண்டா, நான் பேசிக்கிட்டேயிருக்கேன், பித்துப்பிடிச்சவன் மாதிரி உட்கார்ந்திருக்க!"

"ஏண்டா, கேள்வியை எங்கிட்ட கேட்டுட்டு பதில நீயே சொல்லிக்கிட்டு இருக்க!

அப்ப ஏன் எங்கிட்ட கேட்ட?"

"இப்ப என்ன கெட்டுப் போச்சி.

நான் ஏதாவது விட்டிருந்தா நீ சொல்லேன்."

"இறைவனது சுதந்திரம் முழுமையானது.(Perfect)

மனிதன் அளவுள்ளவன். ஆகவே  அவனது சுதந்திரமும் அளவுள்ளது. (Limited)

இறைவனது சுதந்திரம் முழுமையானதாகையால் அதன்மேல் யாரும் ஆதிக்கம் செலுத்த முடியாது. (No one can influence it.)

அதாவது  அவர் சுதந்திரமாக எடுத்த முடிவை யாராலும் மாற்ற முடியாது.

ஆனால் மனித சுதந்திரம் அளவுள்ளதாகையால் அதில் மற்றவர் ஆதிக்கம் செலுத்தமுடியும்.(It can be influenced by others)

உதாரணத்திற்கு, ஒருவருக்கு smart phone உபயோகிப்பதில்  விருப்பம் இல்லை.

அதை வாங்கவோ, வாங்காதிருக்கவோ அவருக்கு முழு உரிமை உண்டு.

அவ்வுரிமையைப் பயன்படுத்தி  Smart phone ஏ வாங்குவதில்லை எனத் தீர்மானித்துவிட்டார்.

ஒருநாள் நண்பர் ஒருவர் ஒரு கூட்டத்தில் Smart phone உபயோகிப்பதன் வசதிகளை விளக்கிக்கொண்டிருந்தார்.

அவ்விளக்கம் அவரைக் கவர்ந்தது.

It had its influence on him.

அவருடைய சுதந்திரத்தில் யாரும் தலையிடவில்லை.

Smart phone வாங்குவதில்லை என்ற தீர்மானத்தை அவரே மாற்றிக்கொண்டார்.

வாங்கினார்.

ஆக கடவுளால் நமது சுதந்திரத்தில் தலையிடாமலேயே
நம்மை மனமாற்றம் செய்ய முடியும்.

நாம் பாவிகள் மனம்மாற வேண்டும்போது

நமது வேண்டுதலுக்கு விடையளிக்கும் வகையில் இறைவன்

தனது அருள்மழையால் அவர்களை ஈர்ப்பார்.

அவர்களும் மனம்திரும்புவர்.

நாம் பிறருக்காக வேண்டும்போது, நமக்காக யாராவது வேண்டிக்கொண்டிருப்பர்.

நாம் ஒருவருக்கொருவர் வேண்டும்போது

இறைவனோடு இணைந்து

நாம் ஒரே குடும்பத்தினர்

என்பதை நிரூபிக்கிறோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment