Monday, September 17, 2018

மண்ணகச் சாதனைகட்கு விண்ணகத்தில் பரிசு உண்டா?

மண்ணகச் சாதனைகட்கு விண்ணகத்தில் பரிசு உண்டா?
*****************-****-**********

நண்பர் ஒருவரின் விருப்பத்திற்கு இணங்க

"Earthly achievements and  heavenly rewards."

என்ற கட்டுரையின் கருத்துக்களைத் தமிழில் தருகிகிறேன்.

"ஆண்டவராகிய கடவுள்

களிமண்ணால்
---------------------------

மனிதனை உருவாக்கி,

அவன் முகத்தில்

உயிர் மூச்சை
-----------------------

ஊதவே, மனிதன் உயிருள்ளவன் ஆனான்." (ஆதி.2:7)

கடவுள்

தான் ஏற்கனவே படைத்திருந்த

சடப்பொருள்(Matter) ஆகிய களிமண்ணால்

உடலை உருவாக்கி,

ஆவி(Spirit)
ஆகிய ஆன்மாவைப் படைத்து

அதை உடலோடு சேர்த்து மனிதனை உருவாக்கினார். 

ஆக மனிதன் சடப்பொருளும்,  ஆவியும் சேர்ந்த படைப்பு.

மனித உடல் களிமண்ணைக்கொண்டு படைக்கப்பட்டதால் அது மண்ணுலகைச் சேர்ந்தது.

ஆகவே மனித வாழ்வு முடிந்ததும் அது மண்ணிiற்கே திரும்பிடும்.

இறைவனிடமிருந்து வந்த ஆன்மா

  விண்ணுலகிற்கு கடவுளிடம் செல்லும்.

தாயின்  கருவறையில் கைகோர்க்கும் உடலும், ஆன்மாவும்,

இவ்வுலகில் சேர்ந்தே வாழ்ந்து,

மரணத்தில் பிரிகின்றன.

இறைவன் ஒவ்வொன்றையும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தோடுதான் படைத்திருக்கிறார்.

உடலும், ஆன்மாவும்

சேர்ந்து வாழ்ந்து

பிரிவதன்

நோக்கம் என்ன?

இறைவனை அறிந்து,

அவரை நேசித்து,

அவருக்கு சேவை செய்து,

இறுதியில் அவரோடு நித்திய. பேரின்பத்தில் இணைந்து வாழ ஆன்மா படைக்கப்பட்டது.

இப்பணியில்  அதற்கு உதவியாயிருக்க உடல் படைக்கப்பட்டது.

அதாவது ஆன்மாவிற்காக உடல் படைக்கப்பட்டது,

உடலுக்காக ஆன்மா படைக்கப்படவில்லை.

பயணம் செய்வதற்காக வாகனத்தைப் பயன்படுத்துகிறோம்.

வாகனத்தைப் பயன்படுத்துவதற்காகப் பயணம் செய்வதில்லை.

வாழ்வதற்காக உண்கிறோம் ; உண்பதற்காக வாழவில்லை.

அவ்வாறுதான் ஆன்மா தன் பணிகளைச் செவ்வனே செய்யவே உடல் படைக்கப்பட்டது.

ஆன்மாவின் பணிதான் முக்கியமென்றாலும்,

அதற்கு உதவியாகப் படைக்கப்பட்டிருக்கும் உடல் நலனும்  கவனிக்கப்படவேண்டும்.

வாகனம் பழுதுபட்டால் பயணம் பாதிக்கப்படும்.

ஆகவேதான் தன் விண்ணகப் பயணத்திற்குப்  பயன்படும் உடலையும், உலகையும் ஆன்மா பேணவேண்டியிருக்கிறது.

உடலும், உலகும் தற்காலிகமானவை.

ஆன்மா நிரந்தரமானது.

நிரந்தரமான ஆன்மா

நித்திய வாழ்விற்குள் புக நேரம் வந்ததும்

உடல் விடை பெற்றுத்

தான் எங்கிருந்து வந்ததோ

அங்கேயே (மண்ணிற்குள்) சென்றுவிடுகிறது.

உடலும், உலகும் பேணப்பட செய்யப்படும் காரியங்களை 'இவ்வுலகு சார்ந்த காரியங்கள்' அல்லது 'லௌகீகம்'  (materialism).என்போம்.

ஆன்மா சம்பந்தப்பட்ட காரியங்களை 'ஆன்மீகம்'(spirituality)   என்போம்.

  மனிதன்   ஆன்மாவும், உடலும் சேர்ந்தவனாகையால்

அவன் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும்

ஆன்மீகக் கூறுகளும்,  லௌகீகக் கூறுகளும்

கலந்தே இருக்கும்.

உதாரணத்திற்கு

குருத்துவ வாழ்வை எடுத்துக் கொள்வோம்.

குருக்கள் செய்வது முழுக்க  முழுக்க ஆன்மீகப் பணி.

ஆயினும்

அவர்கள் வாழும் வீடு,

உண்ணும் உணவு,

உடுத்தும் உடை,

பயணிக்கும் வாகனங்கள் போன்றவை

உலகைச் சார்ந்தவை.

இங்கு உலகைச் சார்ந்தவை அவர்களின் ஆன்மீகத்திற்கு உதவியாய் இருக்கின்றன.

இங்கு அவர்களது லௌகீக வாழ்வும் ஆன்மீக வாழ்வாய் மாறுகிறது, அது இறைப்பணியில் பயன்படுவதால்.

இவ்வுலகில் மனிதனின் சாதனைகள் இருவகைப்படும்.

1. உலகியல் சாதனைகள்.
2. ஆன்மீகச்  சாதனைகள்.

கடவுள் மனிதனை விண்ணக வாழ்விற்காக படைத்தார்.

மண்ணக வாழ்வு விண்ணக வாழ்வை நோக்கிய பயணம்தான்.(Heavenward journey)

நமது நிரந்தர பொக்கிஷம் விண்ணகத்தில்தான் உள்ளது.

இப்பொக்கிஷத்தை நமது மண்ணக வாழ்வின் நற்செயல்களால் நிரப்ப வேண்டும்.

மண்ணகத்தில் நாம் ஒவ்வொரு நற்செயலுக்கும் விண்ணகத்தில் பரிசு  உண்டு.

இறைவனின் புகழுக்காகச் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் நற்செயல்தான்.

ஒவ்வொரு நற்செயலுக்கும் விண்ணகத்தில் பரிசு (Reward)  உண்டு.

ஆனால்
இறைவனது புகழுக்காக அன்றி,

சுயபுகழுக்காக (self glory) செய்யப்படும்

எந்த செயலும் இறைவன்  முன்  நற்செயல் அல்ல,

சாதாரண செயல்தான்.

இச்செயல் புரிவோருக்கு அவருக்குக் கிடைக்கும் சுயபுகழே பரிசு,

விண்ணகத்தில் பரிசு இல்லை.

"நீ பிச்சையிடும்பொழுது, மக்கள் புகழ வேண்டுமென்று வெளிவேடக்காரர் செபக்கூடங்களிலும் தெருக்களிலும் செய்வதுபோல், உனக்குமுன் பறைசாற்றச் செய்யாதே.

'அவர்கள் தங்கள் கைம்மாறு பெற்றுவிட்டனர்'

என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்." (மத்.6:2)

சாதனைகட்கு வருவோம்.

உலகியல் சாதனைகள்:

நலம் பயக்கும் சாதனைகளை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

அறிவியல், தொழில்,
பொருளாதாரம், அரசியல் துறைகளில் மனிதர் ஏராளமான சாதனைகள் புரிந்துள்ளனர்.

இவை உலகைச்சார்ந்த சாதனைகள்.

இச்சாதனைகள் புரிந்தவர்கட்கு விண்ணகத்தில் சன்மானம் உண்டா?

முதலில் ஒரு உண்மையைப் புரிந்துகொள்ளவேண்டும்.

சாதனை எதுவாயினும் அதில் ஆன்மீகத்திற்கும் அதில் முக்கிய பங்கு உண்டு.

1.இறைவன் தந்துள்ள திறமைகளைக் (Talents) கொண்டுதான் எதையும் சாதிக்கமுடியும்.

2. சாதனைகள்புரியப் பயன்படும் புத்தி, அறிவு, ஞானம் போன்ற பண்புகள் ஆன்மாவைச்சேர்ந்தவை.

3. எல்லாவற்றிற்கும் மேல்,

"அவனன்றி அணுவும் அசையாது."

இறைவன் துணையின்றி எந்த சாதனையையும் செய்ய முடியாது.

உண்மையில் நலம் பயக்கும் எந்த சாதனையும் இறைவனுடையதே.

இச்சாதனைகளைச் செய்வோர் இறைவனது அதிமிக மகிமைக்காகச் செய்தால்

அவை ஆன்மீகச் சாதனைகளாக மாறிவிடுகின்றன.

அவற்றிற்கு விண்ணகத்தில் சன்மானம் உண்டு.

Earthly achievements are spiritualized when they are done for the glory of God and earn their reward in heaven.

ஆனால் சுயமகிமைக்காகச் சாதிப்பவர்களுக்கு விண்ணகத்தில் சன்மானம் இல்லை.

ஆன்மீகச் சாதனைகள் :

இறைப்பணிக்காக முழுவதும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்

தங்களது அர்ப்பண வாழ்வில் இறைவனுக்காக ஆற்றும் சாதனைகட்கு விண்ணக வாழ்வில் ஒன்றுக்கு நூறாகச் சன்மானம் உண்டு.

ஆனால் இங்கேயும் சுயமகிமை புகுந்தால், அது மட்டுமே சன்மானம்.

"நீ பிச்சையிடும்பொழுது, மக்கள் புகழ வேண்டுமென்று வெளிவேடக்காரர் செபக்கூடங்களிலும் தெருக்களிலும் செய்வதுபோல், உனக்குமுன் பறைசாற்றச் செய்யாதே.

'அவர்கள் தங்கள் கைம்மாறு பெற்றுவிட்டனர்'

என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்." (மத்.6:2)

இறைபணியில் சாதனை புரிவோர்,

"நாங்கள் பயனற்ற ஊழியர்கள், செய்ய வேண்டியதைத்தான் செய்தோம்"

எனச் சொல்லித்
தங்களைத் தாழ்த்திக்கொள்வார்கள்.

விண்ணகத்தில் அவர்களது சன்மானத்தின் அளவு உயர்ந்திருக்கும்.

செயல்ல, நோக்கமே சன்மானத்தைத் தீர்மானிக்கிறது.

சன்மானத்திற்காக அல்ல,

இறைனுக்காக வாழ்வோம்.

சன்மானம் தானே வரும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment