Sunday, September 23, 2018

"எல்லாம் அவன் செயல்."

"எல்லாம் அவன் செயல்."
*******************************

"இயற்கையைக் கடவுள்தான படைச்சாரு? "

"அதென்ன திடீர்ச் சந்தேகம்? இயற்கை உன்ன ஏதாவது பண்ணிச்சா? அது பத்தி கடவுள்ட்ட கம்ப்லெய்ன்ட் ஏதாவது கொடுக்கப்போறீயா? "

"கொஞ்ச வருசத்துக்கு முன்னால சுனாமி வந்து நிறையபேர சாகடிச்சது ஞாபகம் இருக்கா?"

"ஏன், என் ஞாபக சக்திய test பண்றியா?"

"என்ன நீ, நான் சீரியசா கேட்டா நீ நக்கலா பதில் சொல்லிக்கிட்டு இருக்க?"

"நான் பதிலே சொல்லல, நானும் கேள்விதான் கேட்டேன். சரி, ரொம்ப சீரியஸ் ஆயிடாத. பக்கத்தில ஆஸ்பிட்டல் இல்ல. கேட்க வந்தத கேளு."

"நாம் வாழத்தானே கடவுள் உலகப் படைச்சாரு.

உலகம் ஏன் நம்ம விரோதியா பார்க்குது?

சுனாமி, புயல், நிலநடுக்கம், வெள்ளம்னு என்னவெல்லாமோ கொண்டு நம்மக் கொடுமைப் படுத்திக்கிட்டிருக்கு.

கடவுளுக்கு நம்மமேல அன்பிருக்கு.

அப்புறம் ஏன் நம்ம துன்பங்கள் நிறஞ்ச உலகத்தில வச்சாரு?"

"உன் கேள்வி புரியுது. அன்புள்ள கடவுள் ஏன்  உலத்துல துன்பங்கள அனுமதிக்கிறாரு.

சரியா? "
.
"சரிதான். இப்ப பதில் சொல்லு."

"இப்ப நான் ஒரு கேள்வி கேட்கலாமா? "

"கேளு."

"நேற்று சாயந்தரம் உன் மகன்,school ல இருந்து வந்தவுடன் என்ன சொன்னான்? "

"  'school ல என்ன பாடாபடுத்துராங்க, அடிஅடின்னு அடிக்கிறாங்க, இங்லிஸ் வாத்தியார் அடி பின்னிருதாரு, நான் இனிம schoolக்கு போகமாட்டேன்'னு  சொன்னான்."

"அதுக்கு நீ என்ன சொன்ன?"

"அவன் சொல்லும்போதும், நான் பதில் சொல்லும்போதும் நீயும் கூடதான இருந்த."

"பரவாயில்லை. சொல்லு."

"எல்லா அப்பாக்களும் சொல்றதத்தான் சொன்னேன். 'வாத்தியார் அடிக்கது  உன் நன்மைக்குதான். நீ நல்லா படிச்சி வாழ்க்கையில முன்னேற வேண்டுங்கிறதுக்காகக்தான் கண்டிக்கிறாங்க. நல்லாப் படி. ஆவலாதி சொல்வத நிறுத்து'ன்னேன்.

நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாம சம்பந்தமில்லாம கேள்வி கேட்டுக்கிட்டிருக்க!"

"   'அப்பா, இந்த உலகம் ரொம்ப மோசம்பா.

எங்க திரும்பினாலும் கஸ்டமும், துன்பமுமாத்தான் இருக்கு.

அதுவும் நல்லவனுக்குதான் துன்பம் அதிகம் வருது.

நித்திய காலமா என்ன அன்பு செய்கிற நீங்க இப்படி கஸ்டங்கள் நிறைந்த உலகத்தில வாழ வச்சிட்டீங்ளப்பா.

ஏம்பா? 'ன்னு நீ நமது விண்ணகத் தந்தையிடம் சொல்றன்னு வச்சிக்குவோம்.

அவர் என்ன பதில் சொல்லியிருப்பாரு? "

"இதத்தான் நான் உங்கிட்ட கேட்டேன். நீ பதில என்னையே சொல்லச் சொல்ற."

"நீயும் ஒரு அப்பாதான. உன் மகனிடம்  சொன்ன பதில அடிப்படையா வச்சி  ஒரு பதிலச் சொல்லேன்."

"மகனே, நான் உன்னைப் படைத்தது இந்த உலகத்தில நிரந்தரமாக வாழ்வதற்காக அல்ல.

நித்திய காலமாக என்னோடு பேரின்பமாக வாழ்வதற்காகத்தான் உன்னைப் படைத்தேன்.

உன்னைப் படைக்கும்போதே மோட்சத்திலேயே படைச்சிருக்கலாம்.

ஆனால்  அதுல உனக்கு என்ன பெருமை.

பரிட்சையே வைக்காம ஒரு மாணவனுக்கு நூறு மார்க்கு போட்டா அந்த மார்க்குக்கு என்ன மதிப்பு?

பந்தையமே வைக்காம,  'நீதான் First, பிடி பரிச'ன்னு
சொல்லி பரிசக் கொடுத்தா அந்த பரிசுக்கு என்ன மரியாதை.

உன்னைப் படைத்தது மோட்ச வாழ்வுக்காகத்தான்.

ஆனால்  நீயே அதைச் சம்பாதிக்க வேண்டுமென்பதற்காக

உனக்கு முழுச் சுதந்திரக்கொடுத்து,

நீ அனுசரிப்பதற்காகப்

பத்து கட்டளைகளையும் கொடுத்தேன்.

நீ நான் கொடுத்த சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, அவற்றை மீறினாய்.

மீறியதற்குரிய பரிகாரம் செய்து பரிசுத்தமானால்தான் நீ மோட்ச வாழ்வுக்குத் தகுதி ஆவாய்.

அந்தப் பரிகாரத்தையும் என் மகனே செய்தார்.

அந்த பரிகாரத்தின் பலனைப் பெற

முழு மனதோடு

அவர் சுமந்தது போல

நீயும் சிலுவையைச் சுமந்துதான்,

அதாவது கஸ்டப்பட்டுதான்,

விண்ணக வாழ்வைச் சம்பாதிக்க வேண்டும்.

அதற்காகத்தான் உலகத்திற்குள் கஸ்டங்களையும், துன்பங்களையும் அனுமதித்தேன்.

உன் நன்மைக்காகத்தான் அவற்றை அனுமதித்தேன்.

நீ நல்ல மனதோடு அவற்றை ஏற்றுக்கொண்டு, பாவப் பரிகாரமாக அவற்றை எனக்கு  ஒப்புக்கொடுக்க வேண்டும்.

  பரிசுத்தமடைந்து   என்னோடு பேரின்ப வாழ்விற்குள் நுழைய வேண்டும்.

இப்படி ஆவலாதி எல்லாம்
கூறக்கூடாது.

புரிகிறதா?"

"Very good.

பதிலை உங்கிட்ட வச்சிக்கிட்டு எங்கிட்ட கேட்டிருக்கிற.

பாராட்டுக்ள். "

"பாராட்டெல்லாம் வேண்டாம்.
இனிம நான் கேட்கிற கேள்விகட்கு  நீதான் பதில் கூற வேண்டும்."

"நமது கேள்வி பதிலைத் தொடருமுன்னால ஒரு முக்கிய விசயத்த ஞாபகத்திதில வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் இருப்பதுபோல,

ஒவ்வொரு கருத்துக்கும் இரண்டோ அதற்கு மேற்பட்டோ பக்கங்கள் உண்டு.

கண்ணோக்கிற்கு(point of view) ஏற்ப பக்கம் மாறுடும்.

தென்காசி எங்கே இருக்கிறது என்று கேட்டால்

பாவூர்சத்திரத்தில் நிற்பவன்

"மேற்கே இருக்கிறது" என்பான்.

செங்கோட்டையில் நிற்பவன், 

"கிழக்கே இருக்கிறது" என்பான்.

நகை செய்வதற்காகத் தங்கத்தை ஆசாரியிடம் கொடுக்கிறோம்.

ஆசாரி தங்கத்தை தீயிலிட்டு  உருக்கி, கம்பியாக நீட்டி, அடித்து அழகான நகை செய்கிறான்.

நகை தயாரானதும் நாம்,  "நகை Super" என்போம்.

தங்கத்துக்குப் பேசத்தெரிந்தால்,

"அட பாவிகளா, உங்களது மகிழ்ச்சிக்காக என்னை என்ன பாடு படுத்திவிட்டீர்கள்!

என்னைத் தீயில் போட்டீர்களே,

நீங்கள் கொஞ்சம் தீயில் இருந்து

பாருங்கள்!" என்கும்.

ஒரு வட்டம் வரைந்துகொள்.

வட்டத்தின் மையப்புள்ளி வழியே செல்லும் எண்ணற்ற கோடுகள் வரையப்பட்டிருப்பதாக கற்பனை செய்துகொள்.

ஒவ்வொரு கோட்டையும்  மற்றொரு கோடு 90°யில்
வெட்டிச்செல்லும்.

ஒரே வட்டத்திற்குள் எண்ணிறந்த 90°கோணங்கள்
கிடைக்கும்.

ஒவ்வொரு 90°கோணத்தையும் ஒரு கண்ணோக்கு (Point of view) என்று எடுத்துக்கொள்வோம்.

ஒரு 90°கோணத்தில் உள்ளவர்கள் ஒரே கண்ணோக்கு உள்ளவர்கள்.

ஒரே கண்ணோக்கு உள்ளவர்கள் ஒருவரையொருவர் புரிந்துகொள்வது எளிது.

நாம் பேசிக்கொண்டிருக்கும் விசயத்தைப் பொறுத்தட்டில் இரண்டு கண்ணோக்குகள் உண்டு.

1. உலகியல் கண்ணோக்கு.
2.  விசுவாசக் கண்ணோக்கு.

நம் ஆண்டவராகிய இயேசுவைப் பின்பற்றுபவர்கள் எல்லோரும் ஒரே விசுவாசத்தைக் கொண்டவர்கள்.

நமது வாழ்வைப் பொறுத்தமட்டில்

விசுவாசத்தை எடுத்துவிட்டால் நமது வாழ்வே பொருளற்றதாகிவிடும்.

ஆகவே நீ எந்தக் கேள்வியைக் கேட்டாலும் எனது பதில் விசுவாசக் கண்ணோக்கில்தான் இருக்கும்.

நீயும் அதே கண்ணோக்கில் கேட்டால்தான் புரியும்.

சரி கேள்."

"இவ்வளவு  பெரிய முன்னுரையா? 

இயற்கையைப் படைத்தவர் இறைவன்.

மனிதனைப் படைத்தவரும் இறைவன்.

நிலநடுக்கம், வெள்ளம், சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஆயிரகக்கணக்கான மனிதர்ளின் மரணத்திற்குக் காரணமாகின்றனவே.

இறைவன் இதை ஏன் அனுமதிக்கிறார்?"

"நமது விசுவாசப்படி
எல்லாம் இறைவனின் சித்தப்படிதான் நடக்கின்றன.

நிலநடுக்கம், வெள்ளம், சுனாமி போன்றவை இயற்கைச் சீற்றங்களல்ல.

நாம் அழிவு எனக் கருதும் நிகழ்வுகளுக்கு அவை காரணமாக இருப்பதால் நாம் அவற்றைச் சீற்றம் என்கிறோம்.

ஆனால்அவை இறைவன் வகுத்த இயற்கை விதிகளின்படி நடக்கும் நிகழ்ச்சிகள்தான்.

அவற்றின் விளைவுகளும் இறைவன் சித்தத்திற்குள் அடங்கும். ஆயிரக்கணக்கானோர் மரணிப்பது உலகியல்கருத்துப்படி சோகநிகழ்வாகத் தோன்றலாம்.

விசுவாசப்படி மரணம் மண்ணுலக வாழ்விலிருந்து,

நாம் எந்த வாழ்வுக்காக படைக்கப்பட்டோமோ அந்த மறுவுலக வாழ்விற்கான நுழைவாயில்.

யார்யார் எப்போ மரணிக்கவேண்டும்,

எங்கே மரணிக்கவேண்டும் என்பதெல்லாம் இறைவன் திட்டத்திற்குள் அடங்கும்.

ஆயிரக்கணக்கில் மரணித்தாலும்,

இலட்சக்கணக்கில் மரணித்தாலும்,

ஏன், உலகோர் அனைவரும் மொத்தமாக மரணித்தாலும்

எல்லாம் இறைவன் செயல்தான்.

இறைவன் செயலை மனமுவந்து ஏற்றுக்கொள்வது அவருடைய மக்களாகிய நமது கடமை."

"ஒரு சந்தேகம்.

எல்லாம் இறைவன் செயல் என்கிறாயே,

நாம்  பாவம் செய்வது கூடவா?"

"இக்கேள்விக்குப் பதில் சொல்ல கொஞ்சம் முன்னுரை தேவை.

இறைவன் மனிதனை நல்லவனாகப் படைத்தார்.

முழுச் சுதந்திரத்தோடு அவனைப் படைத்தார்.

அவனோ தனக்குத் தரப்பட்ட
சுதந்திரத்தைத் தவராகப் பயன்படுத்தி அவரது கட்டளையை மீறிப் பாவம் செய்தான்.

அவன் பாவம் செய்யவேண்டுமென்பது அவரது சித்தமல்ல.

ஆனால் தானே கொடுத்த அவனது சுதந்திரத்தில் தலையிடக்கூடாது என்பது அவர் சித்தம்.

ஆகவே மனிதன் பாவம் செய்தபோது இறைவன் தடுக்கவில்லை.

மனிதன் பாவம் செய்தது அவன் செயல், இறைவன் செயல் அல்ல.

ஆனால் அதைத் தடுக்காதது இறைவன் செயல்.

நமது சுதந்திரத்தில் இறைவன் தலையிடமாட்டார்.

ஆனால்  முழுச் சுதந்திரத்தோடு

நமது சுதந்திரத்தை

நாமே இறைவன் பாதத்தில் ஒப்புவிக்கலாம்.

We can voluntarily surrender our freedom  to the will of God.

"இதோ ஆண்டவருடைய அடிமை." என்று மாதா சொன்னபோது இதைத்தான் செய்தார்.

விசுவசிப்பவர்கட்குப் புரியும்."

"இன்னொரு கேள்வி இருக்கிறது. அது நாளைக்கு."

நமது சுதந்திரத்தை இறைவன் பாதத்தில் சரணடைய பயன் படுத்துவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment