Tuesday, October 2, 2018

இறைத்திட்டமும், தலை விதியும் ஒன்றா?

இறைத்திட்டமும், தலை விதியும் ஒன்றா?
*******************************

கிறிஸ்தவர்களாகிய நாம் "எல்லாம் இறைவன் திருவுளப்படி நடக்கும்." என்கிறோம்.

பிற சமையத்தவருள் சிலர், "எல்லாம் தலைவிதிப்படி நடக்கும்" என்கிறார்கள்.

இரண்டும் ஒன்றா?

இல்லை.

தலைவிதியைப் பற்றிய அவர்களுடைய கருத்து என்ன?

"ஒருவன் பிறக்கும்போதே அவன் வாழ்வில் என்னென்ன நடக்கும் என அவன்தலையில் பிரம்மா எழுதிவிடுறார்," என்பது அவர்களது கருத்து. அதாவது 'மனிதன் சுயமாக செயல்முடியாது, எல்லாம் விதிப்படி நடக்கும் ' என்பது இதன் பொருள்.

இதன்படி மனிதன் இயந்திரத்தைப் போன்றவன்.

இயந்திரத்தை வடிவமைத்தவன் எப்படி இயங்கவேண்டும் என்று அமைத்தானோ அப்படி மட்டுமே இயந்திரம் இயங்கும், வேறு மாதிரி இயங்க முடியாது.

இறைத்திட்டத்துக்கும், தலைவிதிக்கும் சம்பந்தமேயில்லை.

தலைவிதிப்படி மனிதன் Program செய்யப்பட்ட ரோபோ.

இறைவன் திருவுளப்படி,

மனிதன்

முழுச்சுதந்திரத்தோடு

படைக்கப்பட்டவன்.

அதாவது

தான் செய்ய நினைப்பதைச் செய்ய

முழுச் சுதந்திரம் உடையவன்.

இறைவன் முழுச்சுதந்தரத்தோடு செயலாற்றுபவர்,

தன் சாயலாகப் மனிதனைச் சுதந்திரத்தோடு படைத்தார்.

மனித வாழ்வை ஒரு ஓட்டத்திற்கு ஒப்பிடுவோம்.

மனிதன் Starting point ல் நிற்கிறான்,

அவன் முன்னால் இரண்டு ஓடுபாதைள்(Tracks) உள்ளன.

ஒன்று சரியான பாதை. அதன் வழியே ஓடினால் முடிவில்(Finishing point) பரிசு கிடைக்கும்.

அடுத்தது தவறான பாதை. அதன்  வழியே ஓடினால் முடிவில் பரிசு கிடைக்காது.

ஓட விரும்பும் பாதையைத் தேர்ந்தெடுக்க மனிதனுக்கு முழுச் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.

Man has been gifted with full freedom of choice, to choose the path which he wants to take.

சரியான பாதை வழியே ஓடி முடிப்பவனுக்கு இறைவன் தன்னையே பரிசாக அளிக்கிறார்.

ஆரம்பத்தில் தேர்ந்தெடுத்த பாதையை Finishing point க்கு முன் எந்த இடத்திலும் மாற்றிக்கொள்ளும் சுதந்திரமும் மனிதனுக்கு உண்டு.

இயேசுவோடு மரித்த கள்ளர்களில் ஒருவன் கடைசி நேரத்தில் நல்ல பாதைக்கு மாறி இரட்சிக்கப்பட்ட வரலாறு நம் அனைவருக்கும் தெரியும்.

இறைவன் சர்வ ஞானம் உள்ளவர்.

முக்காலமும்  அறிந்தவர்.

நாம் நமது தாயின் வயிற்றில் கருவாக உருவானதற்கு கோடானுகோடி ஆண்டுகட்கு முன்னரே,

ஆரம்பமே இல்லாத காலத்திலிருந்தே நம்மை அவரது உள்ளத்தில் சுமந்தவர்.

காலங்களைக் கடந்து,

நாம் யாரென்று நமக்கே தெரியாத

துவக்கமே இல்லாத காலத்திலிருந்தே நம்மை அன்பு செய்தவர்.

அன்பின் காரணமாகவே நம்மைப் படைத்தவர்.

அவருக்கு முக்காலமும் தெரியுமாகையால்,

நாம் நமது சுதந்திரத்தை எப்படிப் பயன்படுத்துவோம் என்று அவருக்குத் தெரியும்.

யார்யார் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்திப் பாவம் செய்வார்கள் என்பதும் கடவுளுக்குத் தெரியும்.

இதை முன்கூட்டிய அறியும் இறைவன்,

நமது சுதந்திரத்தில் தலையிடாமல்,

நம்மைப் பாவத்திலிருந்து மீட்டு,

இரட்சண்யப்பாதையில் வழிநடத்தி,

இறுதியில் அவரைச் சென்றடைய

நித்திய காலமாகவே திட்டம் வகுத்திருக்கிறார்.

இதை இறைவனது நித்திய திட்டம் (God's eternal plan) என்று அழைக்கிறோம்.

இதையே சுருக்கமாக. 'இறைவனது திருவுளம்' என்று அழைக்கிறோம்.

'எல்லாம் இறைவனது திருவுளப்படி நடக்கும்' என்று நாம் சொல்கிறோம்.

இறைத்திட்டத்தில் முக்கிய அம்சங்கள்.

1. நாம் எந்த நோக்கத்திற்காக படைக்கப்பட்டோமோ அந்த நோக்கத்தை நோக்கி நம்மை வழி நடத்துவதே இறைத்திட்டம்.

2.இறைவன் உதவியுடன் சுதந்திரமாகச் செயல்பட்டு அந்நோக்கத்தை அடையவேண்டுமென்பது
இறைத்திட்டம்.

3.நாம் சுதந்திரமாகத் தவறுகள் செய்வோம் என்பதை தன் ஞானத்தால் முன்னறியும் இறைவன்,

அவற்றைச் சரி செய்வதற்கான ஏற்பாட்டையும் செய்து விடுகிறார்.

மனுக்குலத்தைப் படைக்கத் திட்டமிட்டபோதே மனுக்குலம் பாவம் செய்யும் என்று இறைவனுக்குத் தெரியும்.

ஆகவே மனுக்குலத்தை மீட்க மீட்பரை அனுப்பவும் உடனே திட்டமிட்டார்.

இரண்டுமே நித்திய திட்டங்கள்.(Eternal plans)

4.தீமையிலிருந்து நன்மையை வரவழைக்க இறைவனுக்குத் தெரியும்.

பழைய ஏற்பாட்டில் சோசப்பின் சகோதரர்கள் அவரை வியாபாரிகளிடம் விற்றது பாவம்.

அதிலிருந்து வரவழைக்கப்பட்ட நன்மை,

நாட்டில் பஞ்சம் ஏற்பட்டபோது எகிப்தின் அமைச்சராகி நாட்டுக்கு மட்டுமல்ல,

தன்னை விற்றவர்கட்கே உணவழித்தது.

இயேசுவை யூதர்கள் கொன்றது மிகப் பெரிய பாவம்.

அதிலிருந்து பிறந்த மிகப் பெரிய நன்மை நமது இரட்சண்யம்.

5.நாம் இறைவனிடம் என்னென்ன வேண்டுவோம் என்பதை நித்தியகாலமாகவே அறியும் இறைவன் அதற்கான பதிலையும் நித்திய காலமாகவே தயாரித்துவிடுறார்.

அவர் திட்டமிட்ட நேரத்தில் அது நம்மை வந்தடையும்.

6. பாவம் தவிர

நமது வாழ்வின் மற்ற எல்லா நிகழ்வுகளும்,

(நமக்கு ஏற்படும் துன்பங்கள், துயரங்கள், வெற்றிகள்,தோல்விகள், மகிழ்ச்சி etc.)

எல்லாம் நம்மை நித்திய வாழ்வை நோக்கி வழிநடத்துவதற்காக

இறைவனால் நித்திய காலமாக திட்டமிடப்பட்டவையே.

நமக்கு முழுச் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளமையால்

நாம் பாவம் செய்யும்போது இறைவன் தடுப்பதில்லை.

ஆனால்

நமது பாவங்களுக்காக நாம் மனஸ்தாபப்பட,

வேண்டிய அருள் வரங்களைத் தருகிறார்.

நாம் மனஸ்தாபப்பட்டு மன்னிப்புக் கேட்போம் என நித்திய காலமாகவே தெரியுமாகையால்

அதற்கான மன்னிப்பையும் நித்திய காலமாக தயாராக வைத்திருக்கிறார்.

அவர் திட்டமிட்டு நமக்கு  வரும் துன்பங்கள்

ஒன்று நம்மைப் பாவ வழியிலிருந்து திருத்துவதற்காக (Corrective measures) இருக்கும்,

அல்லது நம்மை மேலும் மேலும் தூய்மைப்படுத்துவற்காக இருக்கும்.

அவர் திட்டமிட்டு அனுப்பும் துன்பங்கள்

நம்மை நித்திய வாழ்வை நோக்கி வழிநடத்துவதற்காக  நமக்கு இறைவன் தரும் ஆசீர்வாதங்கள்.(Blessings)

அவற்றை மகிழ்ச்சியோடு ஏற்று இறைவனுக்கு நன்றி கூறவேண்டும்.

"என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள் ."

7.இறைவனது நித்திய திட்டம்
நமது இரட்சண்யத்தையே (Salvation) நோக்கமாகக் கொண்டு வகுக்கப்பட்டுள்ளதால்

இறைவனே நம் வாழ்வின் இயக்குனர்.

'விதி'யினர் நம்புவதுபோல நாம் Program செய்யப்பட்ட ரோபோக்கள் அல்ல.

முழுச்சுதந்தரத்தோடு இறைவனால் இயக்கப்பட்டு

அவருடைய உதவியுடன்

அவரோடு நித்தியமாக இணையவிருக்கும்

அவரது செல்லப்பிள்ளைகள்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment