Friday, October 19, 2018

"பரலோகத்தையும், பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்க்கிறேன்." "அன்றென்றுமுள்ள அப்பம்

"பரலோகத்தையும்,  பூலோகத்தையும்  படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்க்கிறேன்."

"அன்றென்றுமுள்ள அப்பம்
எங்களுக்கு இன்று தாரும்."
***********************-*********

விசுவாசப் பிரமாணத்திலிருந்து எடுக்கப்பட்ட முதல் வாக்கியத்துக்கும்,

கர்த்தர் கர்ப்பித்த செபத்திலிருந்து எடுக்கப்பட்ட. இரண்டாவது  வாக்கியத்துக்கும் இடையில் ஒரு வித்தியாசம் இருக்கிறது.

விசுவசிக்க்கிறேன்.- ஒருமை.

எங்களுக்கு.-  பன்மை.

ஒருமை, பன்மை வித்தியாசத்தில் அப்படி என்ன விசேசம்?

ஒருமை படைக்கப்பட்ட ஒவ்வொருவரையும் தனித்தனியே குறிக்கும்.

Singular term refers to each and every person, taken individually.

Each and every person must believe in God.

ஒவ்வொரு தனிப்பட்ட நபரும்
இறைவனை விசுவசிக்க வேண்டும், நம்ப வேண்டும், நேசிக்கவேண்டும்.

இயேசு மனுக்குலம் மொத்தத்திற்காக மட்டுமல்ல, தனிப்பட்ட ஒவ்வொருவருக்காகவும் தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்தார்.

இரட்சண்யம் அடைய விரும்பும் ஒவ்வொருவரும் விசுவசிக்க வேண்டும்.

கூட்டத்தோடு நாமும் 'விசுவசிக்கிறோம்' என்று சொன்னால், அது வார்த்தையளவில்கூட இருக்கலாம்.

மற்றவர்கள் விசுவசிப்பது நமக்கு எப்படித் தெரியும்?

'விசுவசிக்கிறேன்' என்று சொன்னால் நாம் சொல்வது உண்மையா, வெறும் வார்த்தையா என்று நமக்கு தெரியும்.

நாம் விசுவசிக்கவும், விசுவாத்தை ஆழப்படுத்திக்கொள்ளவும் அது உதவியாய் இருக்கும்.

இயேசு தனது தந்தையை "எங்கள் ததையே" என்று அழைக்கச் சொன்னார்.

தந்தையிடம் வேண்டும்போது,

"  'எங்கள் அனுதின
உணவை'

எங்களுக்கு இன்று அளித்தருளும்"

என்று வேண்டச் சொன்னார்.

"நான் விசுவசிக்கிறேன்" என்று ஒருமையில் சொல்லிவிட்டு

உணவைக் கேட்கும்போது ஏன் "எங்கள் அனுதின உணவை" என்று பன்மையில் கூறுகிறோம்?

"பகிர்ந்து உண்டால் பசி தீரும்" என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.

நாம் உணவை, தனியே அல்ல,  பகிர்ந்து உண்ண வேண்டும் என்பதையே இயேசு விரும்புகிறார்.

நாம் எல்லோரும் இறைவனின் பிள்ளைகள்.

உணவை மட்டுமல்ல,  இறைவன் தரும் எந்தப் பொருளையும், தேவைப்படும் அயலானுக்குக் கொடுக்காமல், தனித்தே பயன்படுத்த நமக்கு உரிமை இல்லை.

நல்ல சமாரித்தன் உவமை இந்தக் கருத்தையும் விளக்குகிறது.

அடிபட்டுக் கிடப்பவன்,

"கள்வர்கையில் அகப்பட்டான்.

அவர்கள் அவன் ஆடைகளைப் பறித்துக்கொண்டு

அவனைக் காயப்படுத்திக் குற்றுயிராய் விட்டுச் சென்றார்கள்."

அடிபட்டுக் கிடந்தவனிடம் ஏதுமில்லை.

நல்ல சமாரித்தனிடம் இரக்கம்  இருந்தது, பொருள் இருந்தது.

தன்னிடம் இருந்ததை இல்லாதவனோடு பகிர்ந்து கொள்கிறான்,

அதாவது,

அவற்றை அவனுக்காகப் பயன்படுத்திக் காப்பாற்றுகிறான்.

"உன்மீது நீ அன்புகாட்டுவதுபோல், உன் அயலான்மீதும் நீ அன்புகாட்டுவாயாக"

இறைவனால் படைக்கப்பட்ட அனைவரும் நமது உடன்பிறந்தவர்களே.

நாம் நம்மை எப்படி நேசிக்கிறோமோ

அப்படியே நமது உடன்பிறந்தவர்களையும் நேசிக்கவேண்டும்.

இறைவனிடம் எதைக் கேட்டாலும் அதை நமக்காக மட்டுமல்ல. நமது உடன்பிறப்புகளுக்கும் சேர்த்தே கேட்கவேண்டும்.

அவ்வாறு கேட்டால்  இறைவன் நாம் கேட்டவற்றை ஒன்று அவரவர்க்கு தனித்தனியே கொடுப்பார்,  அல்லது நம் மூலமாகக் கொடுப்பார்.

ஆகவே நமது தேவைக்கு அதிகமாக நமக்குக் கொடுக்கப்பட்டால் அவற்றை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவேண்டும்.

"இறைவா!  நீர் உலகோர் அனைவருக்கும் தந்தை என்று  விசுவசிகக்கிறேன்.

எல்லொரையும் உம் அருள் வரத்தால் நிரப்பி இரட்சித்தருளும், ஆண்டவரே."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment