Wednesday, October 3, 2018

Invisible God communicates with us through the medium of visible things. நமது கண்களால் காணமுடியாத கடவுள் காணக்கூடிய பொருட்கள் மூலம் பேசுகிறார்.

Invisible God communicates with us through the medium of visible things.

நமது கண்களால் காணமுடியாத கடவுள் காணக்கூடிய பொருட்கள் மூலம் பேசுகிறார்.
*********************************

இறைவன் நம்மோடு பேசுகிறார்.

ஒன்றுமில்லாமையிலிருந்து நம்மைப் படைத்த
இறைவன்

நம்மோடு பேசுகிறார்.

பொங்கி வடியும் அன்பினால் நம்மைப் படைத்த
இறைவன்

நம்மோடு பேசுகிறார்.

"பெற்ற தாய் பிள்ளையை மறந்தாலும் உன்னை  நான் மறவேன்"

என நித்திய காலமாய்

தன் உள்ளத்தில் நம்மைச் சுமக்கின்ற

தந்தையாம் இறைவன்

நம்மோடு பேசுகிறார்.

எப்படிப் பேசுகின்றார்?

எந்த மொழியில் பேசுகின்றார்?

தான் படைத்த படைப்பின் வழியாகப் பேசுகின்றார்.

மௌன மொழியில் பேசுகின்றார்.

உலகமும்,  அதில் இருக்கும், வாழும் அத்தனை பொருட்களும் நம்மைப் படைத்த அதே இறைவனால்தானே படைக்கப்பட்டன.

அவற்றின் மூலமாக இறைவன் பேசுகிறார்.

நமது கண்களால் காணமுடியாத இறைவன் கண்களால் காணப்படும் பொருட்கள்  வழியாகப் பேசுகின்றார்.

அவற்றுக்குச் சொல்லுமில்லை,

பேச்சுமில்லை;

அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை.

ஆயினும்,

நமது புறக்காது வழியாக அல்ல

அகக்காது வழியாக இறைவன் பேசுகின்றார்.

இது புரியவேண்டுமா?

குழந்தையைப் பெற்றெடுத்த தாயின் முகத்தைப் பாருங்கள்.

குழந்தையின் முகத்தையும் பாருங்கள்

இரண்டு முகங்களிலும் பூத்துக் குலுங்கிக்கொண்டிருக்கும்

புன்னகையைப் பாருங்கள்.

அப்புன்னகைதான் அவர்கள் தங்கள் அன்பைப் பரிமாறிக்கொள்ளப் பயன்படுத்தும் மௌன மொழி.

சொல்மொழியைவிட சக்தி வாய்ந்தது மௌனமொழி.

சொல்மொழியில் சொல்லைத் தேடவேண்டும்.

அதுவும் பொறுத்தமான சொல்லாக இருக்கவேண்டும்.

அதுவும் கேட்பவனுக்கும் புரியவேண்டும்.

பெண்ணொருத்தி சொன்னாள் ஆண்மகனைப் பார்த்து,

"I love you."

அவன் சொன்னான்,

"I love you too."

அவளுக்கு வந்தது கோபம்.

"என்னடா சொன்ன?  'You too'ன்னா உன்னையும்னு அருத்தம். அப்படீன்னா நீ வேறொரு பொண்ணையும் Love பண்ற. அப்படித்தானே? "

வாய் உளரிவிட்டால் வார்த்தைகள் தடம் மாறிப்போய்விடும்.

மௌன மொழியில் அந்த பிரச்சனை இல்லை.

மௌனமான பார்வை ஒன்று போதும் அன்பின் ஆழத்தைத் தெரிவிக்க.

"நமது கண்களால் காணமுடியாத இறைவன் கண்களால் காணப்படும் பொருட்கள்  வழியாகப் பேசுகின்றார்."

காணப்படும் பொருட்கள்  வழியாக எப்படிப் பேசுகின்றார்?

இது புரியவேண்டுமானால் முதலில்  நாம் பார்க்கும் ஒவ்வொரு பொருளிலும் இறைவனைக் காணவேண்டும்.

அது எப்படிப் பொருளில் இறைவனைக் காணமுடியும்?

என் நண்பன் ஒருவன் ஒருநாள் கையில் சாக்லெட் கவரை வைத்துக்கொண்டு இரசித்துக் கொண்டிருந்தான்.

"என்னடா அது கையில? "

"உனக்குச் சொன்னால் புரியாது."

"சொல்லு, புரிதான்னு பார்ப்போம்."

"அவள் சாக்லட்ட தின்னுட்டு கவரை எறிஞ்சிட்டுப் போயிருக்கா.

நான் அந்தக் கவர்ல அவளைப் பார்க்கிறேன்.

அவளைத்தான் இரசிச்சிக்கிட்டிருக்கிறேன்.

இதப் புரியணும்னா அனுபவம் வேணும்.''

எனக்கு அந்த அனுபவம் நிறையவே இருக்கு.

மே 21ல திருமணம். ஜுன் மாதம் Training school போய்ட்டேன். அப்புறம் விடுமுறை நாட்கள் தவிர மற்றெல்லா நாட்களிலும் சந்திச்சிக்கிட்டது கடிதங்கள் மூலமாகத்தான்.

ஒவ்வொரு கடிதத்திலும் என் மனைவியைப் பார்த்தேன்.

திருமணமான அனைவருக்குமே இந்த அனுபவம் இருக்கும்.

எல்லாப் பொருட்களையும் படைத்தவர் இறைவனே.

நாம் காணும் ஒவ்வொரு பொருளிலும் நாம் இறைவனைக் காணவேண்டும்.

ஒவ்வொரு பொருளும் அவரது மகிமையை வெளிப்படுத்துகிறது.

"வானங்கள் இறைவனின்
மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன;"

"வான்வெளி அவர்தம் கைகளின்
வேலைப்பாட்டை விவரிக்கின்றது.''

தோட்டத்தில் பூத்துக்குலுங்கும் மலர்கள் மூலம் இறைவன் பேசுகிறார்,

"மகனே / மகளே, இந்த மலர்கள் தானாக வரவில்லை.

உன்னைப் படைத்ததுபோல அவற்றையும் நான்தான்
படைத்தேன்.

உனக்காகவே படைத்தேன்.

இவற்றைப் பார்க்கும்போதெல்லாம் நான் உன் ஞாபகத்திற்கு வரவேண்டும்.

தண்ணீரைப் பார்.

உன் பயன்பாட்டிற்காகக்தான் அதைப்படைத்தேன்.

நீ எந்தப் பொருளைப் பார்த்தாலும் என் ஞாபகம் உனக்கு வரவேண்டும்.

சர்வசதாகாலமும் அன்பின் மிகுதியால் உன்னை நினைத்துக் கொண்டிருக்கின்றேன்.

நீயும் அப்படியே செய்ய வேண்டும் என ஆசிக்கிறேன்.

நான் படைத்த படைப்புகள் அனைத்தும் உனக்கு உதவும்.

உலகைப் பார்.

அதன் மேலுள்ள அனைத்துப் பொருட்களும் உனக்காகப் படைக்கப்பட்டன.

அவற்றைச் சரியாகப் பயன்டுத்த வேண்டும்.

தவறாகப் பயன்படுத்தாதே.

Use them, don't misuse them.

அன்பின் காரணமாக நான் உனக்கு அளித்திருப்பதுபோல்

என்னைப் பின்பற்றி நீயும் மற்றவர்களை அன்பு செய்து

உன்னுடையவற்றை அவர்களோடு பகிர்ந்துகொள்.

நான் இலவசமாய்க் கொடுத்ததுபோல நீயும்
இலவசமாய்க் கொடு.

உலகைப் பார்.

என்னுடைய அன்பும், அழகும் புரியும்.

வானத்தை அண்ணாந்து பார்.

என் வல்லமை புரியும்.

மெஞ்ஞானம் மட்டுமல்ல விஞ்ஞானமும் என்னுடையதுதான்.

உன் உடலை உற்றுப் பார்.

நான்  ஒரு Engineer என்பது உனக்குப் புரியும்.

உன் உடலை ஒரு வீடாக கற்பனை செய்துகொள்.

அழகான கதவுடன் முன்வாசல்,

ஒவ்வொரு பயன்பாட்டுக்கும் ஒரு அறை,

(Dining hall, rest room, recreation room -pun intended)

பின்வாசல்

என ஒரு அழகான வீடாக உன் உடலை வடிவமைத்துக் கட்டிய நான் ஒரு Civil engineer.

உடலை நகரும் ஒரு வாகனமாக கற்பனை செய்துபார்,

நான் ஒரு Mechanical Engineer என்பது புரியும்.

உடலில் மூளையிலிருந்து எல்லா உறுப்புகட்கும் உள்ள தகவல் வசதியை யோசித்துப்பார், நான் ஓரு Communication Engineer என்பது புரியும்.

ஆன்மீகவாதிகள் மட்டுமல்ல,  விஞ்ஞானிகளும் என் மக்களே.

ஆக,

உலகில் எல்லா பொருட்களிலும் நான் இருக்கிறேன்.

எந்தப் பொருளைப் பார்த்தாலும் நானும், என் அன்பும் உன் நினைவுக்கு வரவேண்டும்.

நீ என்னையும், பிறரையும் அன்பு செய்ய வேண்டும்."

இறைவன் தன் படைப்புகள் மூலம் பேசியதைக் கேட்டோம்.

நமது பதில் என்ன?

சிந்திப்போம

லூர்து செல்வம்

No comments:

Post a Comment