மாற்றங்கள்! மாற்றங்கள்!!
******************************
"அண்ணே, ஒரு சின்ன சந்தேகம்."
"சொல்லு."
"மாற்றமே இல்லாதது மாற்றம் மட்டும்தான்னு சொல்ராங்களே..."
"தவறு. மாற்றமே இல்லாதவர் கடவுள் மட்டும்தான்."
"அது எனக்கும் தெரியும். சரி. நான் கேட்க வந்தது வேறு. நேராகவே கேட்கிறேன். மாறுவது சரியா, தவறா? "
"அதற்கு முன் என் கேள்விக்கு பதில் சொல்லு. தூங்குவது சரியா, தவறா?"
"அது இயற்கையின் நியதி. தூங்குவது சரிதான்."
"பின் ஏன் வகுப்பில் தூங்குகிறவனை ஆசிரியர் கண்டிக்ககிறார்? "
"தூங்குவது சரியா, தவறான்னு கேட்டிருக்கக்கூடாது. வகுப்பில் தூங்குவது சரியா, தவறான்னு கேட்டிருக்கணும்."
"நீயும் மாறுவது சரியா, தவறா?ன்னு கேட்டிருக்கக்கூடாது."
"சரி.நேரடியாக விஷயத்துக்ககு வாரேன்.
திவ்ய நற்கருணை முன்பு , முழந்தாள்படியிட்டு (Genuflect) வணங்கும் பழக்கம் முன்பு இருந்தது.
இப்போது அது தலை வணங்கும் பழக்கமாக மாறிவிட்டதே.
திவ்யநற்கருணையில் அன்றிருந்த அதே இயேசுதானே இன்றும் இருக்கிறார்.
சர்வ வல்லப கடவுள் முன்பு முழந்தாள்படியிட்டு வணங்குவதை விட தலை குனிந்து வணங்குவது மேலான வணக்கமா?"
"அதை மாற்றியவர்ட்கு அப்படித்தான் தோன்றியிருக்க வேண்டும்.
முழந்தாள்படியிட்டு வணங்க வேண்டாம் என்று யாரும் கூறவில்லை."
"எனக்குக் கொஞ்சம் சங்டமாகத்தான் இருக்கு.
பாடுபட்ட சுரூபத்துக்கும்
தலை வணங்குகிறோம்,
திவ்ய நற்கருணைக்கும் தலை வணங்குகிறோம்.
பாடுபட்ட சுரூபமும், திவ்ய நற்கருணையும் ஒன்றா?"
"திவ்ய நற்கருணை நமது ஆன்மீக உணவு, உயிருள்ள உணவு.
ஒரு தாய் தன் குழந்தைக்கு உணவு ஊட்டுவதுபோல குருவானவர் அவ்வுணவை நமக்கு ஊட்டினார்- அது ஒரு காலம்.
இப்போது, ..."
"நாம் வளர்ந்துவிட்டோம்போலிருக்கு, கையில் தருகிறார்.
குழந்தையாகவே இருந்திருக்கலாம்!"
"ஒரு கோவிலில் பீடத்தில் வார்த்தைக்குக் கொடுத்திருக்கும் இடத்தை வார்த்தையானவருக்குக் கொடுக்கவில்லை."
" ஆமாம். பீடத்தின் மத்திய இடத்தை வார்த்தைக்குக் கொடுத்துவிட்டு, வார்த்தையானவருக்கு ஒரு ஓரமான இடத்தைக் கொடுப்பது Fashion ஆகிவிட்டது!
இயேசுவுக்கு நமது உள்ளத்தில் இடம் கொடுப்போம்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment