மூன்று பைத்தியங்களின் கதை.
...................................................
திருவனந்தபுரம் எக்ஸ்ப்ரஸ் தன் முழு வேகத்தில் சென்னையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.
முதல் வகுப்பு பெட்டியில் மூன்று பைத்தியங்கள் பிரயாணம் செய்துகொண்டிருந்தன.
நடுப்பைத்தியம் வலது பக்க பைத்தியத்தைப் பார்த்து,
"நீ எங்கே போய்க்கொண்டீருக்கிறாய்? "
"சென்னைக்கு."
இடது பக்க பைத்தியத்தைப் பார்த்து,
"நீ எங்கே போய்க்கொண்டீருக்கிறாய்?"
"திருவனந்தபுரத்துக்கு. "
நடுப்பைத்தியத்துக்கு ஒரே ஆச்சரியம்.
என்னே இந்தியாவின் தொழில் நுட்ப சாதனை!
ஒரே நேரத்தில் எதிர்எதிர் திசைகளில் செல்லும் இரண்டு பயணிகள் ஒரே இரயிலில் செல்லும் அளவுக்கு இந்தியதொழில் நுட்பம் வளர்துள்ளதது!
வடக்கே போவோரும், தெற்கே போவோரும் ஒரே இரலில்!
இது பைத்தியங்களுக்கு மட்டுமே சாத்தியம்.
எப்படி எதிர்த்திசைகளில் செல்பவர்கள் ஒரே இரயிலில் பயணிக்க முடியாதோ, அப்படியே எதிர்எதிர் கொள்கைகளுள்ள இரண்டு தலைவர்களுக்கு ஒருவன் ஊழியனாக இருக்க முடியாது.
நாம் ஒரே நேரத்தில் கடவுளுக்கும் செல்வத்துக்கும் ஊழியம் செய்ய முடியாது.
கடவுள் நம்மை நித்திய வாழ்வுக்கு அழைக்கிறார்.
உலகமும் அதன் செல்வமும் நமது இவ்வுலக வாழ்வோடு முடிந்துவிடக் கூடியவை.
கடவுள் பேரின்ப வாழ்வுக்கு அழைக்கிறார்.
செல்வத்தால் சிற்றின்பத்தை மட்டுமே தர இயலும்.
கடவுள் படைத்தவர்.
செல்வம் படைக்கப்பட்ட பொருள்.
ஒருவன் நித்திய வாழ்வு தரும் சர்வ வல்லப கடவுளுக்கும் , அநித்திய அழியும் பொருளுக்கும் ஊழியம் செய்ய மூமுடியுமா?
இறைவன் நம்மைப் படைக்குமுன் நாம் பயன்படுத்துவதற்காக உலகையும் அதன் செல்வங்களையும் படைத்தார்.
நம்மைத் தனக்காகப் படைத்தார்.
நாம் செல்வத்தைப் பயன்படுத்த வேண்டும், செல்வம் நம்மைப் பயன்படுத்தக்கூடாது.
அதாவது நாம் செல்வத்தின் ஊழியனாக மாறி விடக்கெடாது.
நாம் இறைவனின் ஊழியர்கள்.
இறைவனுக்காக நாம் செய்யும் ஊழியத்திற்காக செல்வத்தைப் பயன்படுத்த வேண்டும்.
செல்வத்தைச் சம்பாதிப்பதற்காக இறைவனைப் பயன்படுத்தக்கூடாது.
இறைவனின் ஊழியனாக மாற இறைவன்மீது பற்று வைக்க வேண்ணடும்.
இறைன்மீது பற்றுள்ளவன் இறைவனுக்காக தன் வசமுள்ள செல்வத்தை, ஏன், தன்னையே தியாகம் செய்வான்.
இறைவன் மீது உண்மையான பற்று உள்ளவனுக்கு செல்வத்தின் பற்று இருக்காது.
செல்வத்தின்மீது பற்று உள்ளவனுக்கு இறைவன்மீது பற்று இருக்காது.
செல்வத்தின்மீது பற்று உள்ளவன் அதை ஈட்டுவதற்காக இறைவனது கட்டளைகளை மீறத் தயங்கமாட்டான்.
இறைவன் மீது உண்மையான பற்றுள்ளவன் அவருக்காக தன் செல்வத்தை முழுதும் இழக்கத் தயங்கமாட்டான்.
இறைப்பணிக்காக தன் உற்றார் உறவினரையும் விட்டுப் போக தயங்க மாட்டான்.
செல்வத்தின்மீது பற்று இருக்கக்கூடாது என்றால் பணம் சம்பாதிக்கக்கூடாதா?
செல்வம் இறைவனின் படைப்பு.
அது இல்லாமல் உலகில் வாழ முடியாது.
நாம் வாழ்வதற்காக செல்வத்தை ஈட்ட வேண்டும்,
ஈட்டடிய செல்வத்தை இறைப்பணிக்காக யன்படுத்த வேண்டும்.
செல்வத்தை ஈட்டுவதற்காக மட்டும் வாழக்கூடாது.
செல்வத்துக்காக வாழ்பவர்கள் அதன் அடிமைகள்.
"இதோ ஆண்டவரின் அடிமை" என்ற நம் அன்னையின் கூற்றுப்படி நாம் கடவுளின் அடிமைகளாக வாழ வேண்டும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment