Sunday, November 19, 2017

இறைவனுக்காக வாழ்வோம்.

இறைவனுக்காக வாழ்வோம்.
********************************

நாம் என்ன செய்தாலும் இறைவனின் அதிமிக மகிமைக்காகவே செய்ய வேண்டும்.

இந்த விதியைப் பின்பற்றினால் நாம் பாவம் செய்ய மாட்டோம்.

கடவுளுடைய மகிமைக்காக பாவம் செய்ய முடியுமா?

எனக்கு ஒரு பையனைத் தெரியும்.

அவனுக்கு யார் காசு கொடுத்தாலும் அவனது அம்மாவிடம்  கொடுத்துவிடுவான்.

ஒரு நாள் அவனிடம் கேட்டேன்,  "ஏண்டா கிடைத்த காசைச் செலவழிக்காமல் அம்மாவிடம் கொடுக்கிறாய்?" என்று.

அவன் சொன்னான்,  "அம்மாவிடம் ஒரு ரூபாய்  கொடுத்தால் பத்து ரூபாயாகத் தருவாங்க, நான் கேட்கும்போது! "

நாம் கடவுளுக்காகச் செய்வதும் இது மாதிரிதான்.

கடவுள் நிறைவானவர்.
God is perfect.

மகிமையிலும் நிறைவானவர்.  He is perfect in His glory also.

மனிதன் படைக்கப்படுவதற்கு முன்பே நித்திய காலமும் அவர் நிறைவானவர்தான்.

நிறைவை அதிக நிறைவாக்க முடியாது.
Perfection cannot be made more perfect.

இறைவனுடைய மகிமையோடு அதிக மகிமை சேர்க்க முடியாது.

நாம் இறைவனது மகிமைக்காக எதையாவது செய்யும்போது இறைவன் அதை நமக்குப் பரிசாக விண்ணகத்தில் சேர்த்து வைக்கிறார்.

நாம் இறைவனுக்காக செய்யும் எல்லா நல்ல காரியங்களும் பயன்படப்போவது நமக்குதான்.

நாம் வாழ இறைவன் வேண்டும், இறைவன் சுயமாக வாழ்கிறார், நம்மால் அல்ல.

இறைவனுக்காக வாழ்வோம், விண்ணில் பயன் பெறுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment