கடவுளைக் கண்களால் பார்க்க முடியும்.
********************************
மூவொரு இறைவனை நமது ஊனக்கண்களால் பார்க்க முடியுமா?
முடியும்.
நமது விசுவாசக் கண்களின் துணை இருந்தால் நமது ஊனக்கண்களாலும் இறைவனைக் காண முடீயும்.
எப்படி?
இயேசு தந்தையுள் இருக்கிறார்; தந்தை இயேசுவுக்குள் இருக்கிறார்.
இதை இயேசுவே கூறியுள்ளார்.
"நான் தந்தையுள் இருக்கிறேன்;
தந்தை என்னுள் இருக்கிறார்.
நான் சொல்வதை நம்புங்கள்;"(யோவான்.14:11)
நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டுமிருக்கிறீர்கள்”
"என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். "(யோவான். 14:9)
அவ்வாறே பரிசுத்த ஆவி தந்தையுள்ளும், இயேசுவுக்குள்ளும் இருக்கிறார்.
அபடியானால் இயேசுவைப் பார்க்கும்போது நாம் மூவொரு இறைவனையே பார்க்கிறோம்.
மனித சுபாவத்தில் இயேசுவை ஊனக்கண்களால் பார்க்க முடியும்.
33 ஆண்டுகள் இயேசு இவ்வுலகில் வாழ்ந்தபோது மக்கள் அவரைக் கண்களால் கண்டார்கள், அவரோடு உரையாடினார்கள்.
இப்போதும் அதே இயேசுவை நமது கண்களால் பார்க்க முடியும், நமது ஊனக்கண்களோடு நமது விசுவாசக் கண்களும் சேர்ந்துகொண்டால்.
திருப்பலியின்போது, மரியாளிடமிருந்து பிறந்த அதே இயேசு, நமக்காக சிலுவையில் உயிர்நீத்த அதே இயேசு அப்ப, ரச வடிவில் இறங்கிவருகிறார்.
நமது ஊனக்கண்களுக்கு அப்ப ரசம் தோன்றினாலும், அவை அப்ப ரசம் அல்ல, இயேசுதான் அந்த வடிவில் இருக்கிறார்.
நமது விசுவாசக் கண்களால் இயேசுவையே பார்க்கிறோம்.
இயேசுவைப் பார்க்கும்போது திரிஏக இறைவனையே பார்க்கிறோம்.
திவ்ய நற்கருணையை நமது ஊனக் கண்களால் பார்க்கும்போது நாம் கடவுளைத்தான் பார்க்கிறோம்.
விசுவாசத்தினால் எல்லாம் ஆகும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment