Friday, January 4, 2019

நாம் ஒன்றுக்கும் உதவாதவர்களா?

நாம் ஒன்றுக்கும் உதவாதவர்களா?
*-***************************

"ஏங்க, என்னாச்சு? எதையோ பறிகொடுத்தது மாதிரி உட்கார்ந்திருக்கீங்க."

"பறிகொடுக்கிறதுக்கு எங்கிட்ட  என்ன இருக்கு?

என்ன நினைத்தால் எனக்கே கேவலமாயிருக்கு.

ஒவ்வொருத்தன் வாழ்க்கையில என்னவெல்லாம் சாதிச்சிருக்கான்.

81வயசு ஆயிது. உருப்படியா என்ன செஞ்சிருக்கேன்? ஒண்ணுமில்ல.

I am a good for nothing fellow! "

"ஏங்க, மணிமணியா மூணு பிள்ளைகள பெத்துருக்கீங்க.

அவங்க சாதிச்சிக்கிட்டுதான் இருக்காங்க.

அது உங்களுக்குப் பெருமை இல்லையா?"

"அவங்க சாதிச்சிக்கிட்டு
இருக்காங்க.

சந்தோசம்.

நான் என்ன சாதிச்சிருக்கேன்.

36 வருசம் வாத்தியார் வேலை பார்த்திருக்கேன்.

ஒரு Selection
grade  கூட வாங்கல! "

"உட்காருங்க. நான் சொல்லப்போறத குறுக்கே  எதுவும் பேசாம கேளுங்க.

நம்ம உடலில பல உறுப்புக்கள் இருக்கின்றன.

எந்த ஒரு உறுப்பும் மற்ற ஒரு உறுப்பைவிட சிறந்தது என்று பெருமை பாராட்ட முடியாது.

ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு வேலை.

அந்தந்த உறுப்பு செய்கிற
வேலைய அந்தந்த
உறுப்புதான் செய்யமுடியும்.

தலை வந்து 'நான்தான் மற்ற உறுப்புகளை இயக்குகிறேன்,

அதனால 'நான்தான் எல்லாவற்றையும் விட முக்கியமானவன்'னு சொல்ல முடியாது.

ஏன்னா, மற்ற உறுப்புகளின் உதவி இன்றி தலையால் ஒன்றுமே செய்யமுடியாது.

காலால் மட்டுமே நடக்க முடியும், தலையால் முடியாது.

விளங்கும்படியா ஒரு உதாரணம் சொல்றேன்.

பாரதப் பிரதமர் சொல்லுகிறார் :

"இந்தியாவில் வாழும் 130 மக்களிலும் எனக்குதான் அதிகாரம் அதிகம்"

அவர் சொன்ன அடுத்த வினாடி ஜனாதிபதி உட்பட 130 கோடி மக்களும் இந்தியாவை விட்டுவிட்டு வேறு நாட்டில் குடியேறிவிட்டார்கள்.

காஷ்மீரிலிருந்து கன்யாகுமரி வரை பிரதமரைத்தவிர யாருமே இல்லை.

பிரதமர் தன் அதிகாரத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வார்?

கண்ணால் பார்க்க மட்டுமே முடியும்.

காதால் கேட்க மட்டுமே முடியும்.

அந்தந்த உறுப்பு அததன் வகையில் முக்கியம், அடுத்ததைவிட அதிக முக்கியமானதல்ல.

கத்தோலிக்க திருச்சபை இயேசுவின் ஞான உடல்.(Mystical body)

பரிசுத்த பாப்பானவர் அதன் தலைமை நிருவாகி.

ஆயர்களும், குருக்களும் உதவி நிருவாகிகள்.

விசுவாசிகள் ஆளப்படுபவர்கள்.

அவரவர்கட்கு அவரவர் வகையில் கடமைகளும், அதிகாரங்களும் உண்டு.

ஒவ்வொருவருக்கும் திருச்சபைக்குக்  கீழ்ப்படியவேண்டிய கடமை உண்டு.

உடல் உறுப்புகளின் உதாரணத்தைப்போல் அவரவர்க்கு அவரவர்க்குரிய அந்தஸ்தின் கடமைகள்  உண்டு.

இக்கடமைகள் இறைவனின் பிள்ளைகள் என்பதாலும், திருச்சபையின் உறுப்பினர்கள் என்பதாலும் வந்தவை.

ஒரு சாதாரண விசுவாசி

பாப்பரசர்க்கும், ஆயருக்கும், பங்குத் தந்தைக்கும்

கீழ்ப்படிவது அவர்கள் இயேசுவின் பிரதிநிதிகள்  என்பதால் மட்டுமே,

அவர்கள் சாதனையாளர்கள் என்பதற்காக அல்ல.

அவர்கட்குக் கீழ்ப்படியும்போது நாம்  இயேசுவுக்குக் கீழ்ப்படிகிறோம்.

நாம் இறந்தபின்

திருச்சபையில் நாம் வகித்த அதிகார இடத்தின் அடிப்படையிலோ,

நமது சாதனைகளின் 
அடிப்படையிலோ

தீர்ப்பிடப் படப்போவதில்லை.

நமது தூய்மைத் தன்மையின் (holiness) அடிப்படையில்தான் தீர்ப்பிடப்படுவோம்.

தூய்மைத்தன்மை

நமது அதிகாரத்தாலோ,

சாதனைகளாலோ,

தேவ சாஸ்திர அறிவாலோ(Theological knowledge)

வருவதில்லை,

நாம் இறைவனின்

அன்புக் கட்டளைகட்கும்,

திருச்சபையின் கட்டளைகட்கும் கீழ்ப்படிவதால் வருவது.

கீழ்ப்படியும் பொறுப்பு சாதாரண விசுவாசி முதல் போப் வரை ஒரே மாதிரியானது.

அந்த வகையில் படிப்பறிவில்லாத ஒரு சாதாரண விசுவாசி

பாப்பரசரைவிடக்கூட அதிகத் தூய்மையானவனாக இருக்கலாம்.

கட்டளைகளை  மீறுபவர்கள் யாராயிருந்தாலும் பாவம் செய்கிறார்கள்.

பாவத்தின் அடிப்படையில்
அனைவரும்,

அதிகார, அறிவு வேறுபாடின்றி,

பாவிகளே.

என்னிடம் பாவமே இல்லை என்பவன் பொய்யன்.

"நம்மிடம் பாவமில்லை என்போமானால் நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்கிறோம்:

உண்மை என்பது நம்மிடம் இல்லை."(1அரு.1 8)

ஒவ்வொரு திருப்பலியின்போதும் பாவ மன்னிப்பு வேண்டுதலின்போது

குருவானரும், விசுவாசிகளும்

நமது பாவங்களை ஏற்கும்  வகையில்,

'என் பாவமே, என் பாவமே,

என் பெரும் பாவமே, ' என்று கூறுகிறோம்.

பாவ மன்னிற்புக்கான முதற்படி பாவங்களை ஏற்றுக்கொள்வதுதான்.

இயேசு பாவிகளைத் தேடியே உலகிற்கு வந்தார்.

"நீதிமான்களை அன்று,

மனந்திரும்பும்படி

பாவிகளையே அழைக்க வந்துள்ளேன்" (லூக்.5:32)

படித்தவன், பாமரன் வேறுபாடின்றி அனைவரும் தாங்கள் பாவிகள் என்பதை ஏற்றுக் கொண்டாகவேண்டும்.

அதிகம் பெற்றவர்களிடமிருந்து

அதிகம் எதிர்பார்க்ப்படும்.

குறைவாகப் பெற்றவர்களிடமிருந்து

குறைவாக எதிர்பார்க்ப்படும்.

ஞாயிறு திருப்பலிக்கு வருபவர்ளைக் கவனித்துப் பாருங்கள்.

அதிகம் படிக்காதவர்கள், ஏழைகள்தான் அதிகம் இருப்பார்கள்.

படிப்பு வராமலிருப்பதும், ஏழையாய்ப் பிறப்பதும் நமது தப்பில்லை.

நாம் எந்த நிலையில் இருக்கிறோமோ

அந்த நிலையில் நாம் இறைவனுக்குப் பிரியமாய் நடக்க முயலவேண்டும்.

நம்மை மற்றவர்களோடு ஒப்பிட்டுப்பார்த்து

'அவர்களைப்போல் சாதிக்க முடியவில்லையே என வருந்தக்கூடாது.

நாம் எப்படி இருக்கிறோமோ அது இறைவன் தந்தது.

அது குறைவாய் இருந்தாலும்

அதைக் கடவுளின் உதவியுடன் அதிகமாக்கி (தாலந்து உவமையைப் போல)

நிறைவாய்ப் பயன்டுத்துவோம்.

கடவுளுக்கு அதுதான் பிரியமாய் இருக்கும்."

நம்மிடம் உள்ள எல்லாம் இறைவன் கொடுத்த பரிசுகளே.

இயேசு தாலந்துகள் உவமையில் கூறுவதுபோல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவு கொடுத்திருக்கிறார்.

நாம் நமக்குக்குக் கொடுக்கப்பட்டிருப்பதை

மற்றவர்க்குக் கொடுக்கப்பட்டிருப்பதோடு ஒப்பபிட்டுப் பார்த்து

நேரத்தை வீணடிக்காமல்

நமக்குக் கொடுக்கப்பட்டிருப்பதை நிறைவாகப்பயன்படுத்தி

இறைவனைத் திருப்திப்படுத்த வேண்டும்.

கோவிலில் காணிக்கை கொடுத்த நிகழ்ச்சியில்

குறைவாகக் காணிக்கை செலுத்திய ஏழைப்பெண்ணையே

இயேசு பாராட்டுகிறார்.

ஏனெனில் அவள் அவளிடம் உள்ளதை எல்லாம் இறைவனுக்குக் கொடுத்துவிட்டாள்.

நாமும் அப்படியே செய்வோம்.

லூர்து செல்வம்

No comments:

Post a Comment