இயேசு இறப்பதற்காகவே
பிறந்தார்.
*****************************
"செல்வம், இங்க வா, இன்றைக்கு உங்கிட்ட ஒரு முக்கியமான கேள்வி கேட்கணும். உட்கார்."
"ஏங்க நீங்க வாத்தியார் வேலையிலிருந்து ஓய்வு பெற்று 21 வருசம் முடிஞ்சிபோச்சி.
இன்னும் கேள்வி கேட்கிற வேலையிலிருந்து
ஓய்வு பெறவே இல்லையா?"
".கேள்வி ஞானம் பற்றிக் கேள்விப் பட்டிருக்கியா?"
"மற்றவங்க சொல்லுவதைக் காதால் கேட்கும்போது கிடைக்கும் ஞானம் கேள்வி ஞானம். "
"Correct.
ஆனால் மற்றவங்க சொல்லுவதைக் காதால் கேட்கவேண்டு மென்றால்
நாம் அவர்களிடம் நமது வாயினால் கேள்வி கேட்கணும்.
கேட்க வேண்டிய கேள்வியை,
கேட்க வேண்டிய ஆளிடம்,
கேட்க வேண்டிய நேரத்தில்,
கேட்க வேண்டிய விதமாகக்
கேட்கவும் ஞானம் வேண்டும்.
அந்த ஞானமும் கேள்வி ஞானம்தான்."
அப்போ
கேள்வி ஞானத்துக்கு
வாயும் வேண்டும்
காதும் வேண்டும்.
சரி கேளுங்க."
"உன்னுடைய அப்பா ஏன் உனக்கு
'செல்வ பாக்கியம்'னு பெயர் வைத்தார்?"
"இதுதான் ஞானமுள்ள கேள்வியா?"
"ஆமா. கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவப் பெயர்தான் வைத்திருக்க வேண்டும்.
உன் பெயர்ல்ல புனிதர் யாரும் இல்லையே.
நமது கேள்வி பதில்களிலிருந்து எந்தப் புனிதராவது வருகிறாறான்னு பார்ப்போம்."
"எனக்குப் பெயர் வைக்கப்டும்போது நான் கைக்குழந்தை.
அப்போது என்னிடம் பெயர்க் காரணத்தைச் சொன்னாலும் புரிந்திருக்காது.
நான் வளர்ந்தபின் அதைப்பற்றி நினைத்ததேயில்லை.
இப்போது என் கற்பனையைக் கொஞ்சம் பயன்படுத்திப் பார்க்கிறேன்.
என் பதில் கற்பனையாய் இருந்தாலும் அதிலிருந்து ஞானம் பிறக்கும்.
எங்க அப்பா ஒரு ஆட்டு வியாபாரி.
ஆடுதான் அவர் செல்வம்.
ஆகவே தன் செல்வத்தின் ஞாபகமாக
'செல்வபாக்கியம்' என்று பெயர் வைத்திருக்கலாம்.
'ஆடு' என்றவுடன் கிறிஸ்து சம்பந்தப்பபட்ட ஏதாவது உருவகம் வருகிறதா?"
"ஆமா. இயேசுவே தன்னை ஒரு மேய்ப்பராகத்தானே உருவகப்படுத்துகிறார்.
'நல்ல ஆயன் நானே:
நல்ல ஆயன் ஆடுகளுக்காகத் தன்னுயிரையே கொடுப்பான்.'?
(அரு.10:11)
ஆயனுக்கு ஆடுகள்தான் செல்வம்.
இராயப்பரைத் திருச்சபையின் தலைவராக நியமிக்கும்போது 'என் ஆடுகளை மேய்' என்றுதானே சொன்னார்.
இன்றும்கூட நமது ஆன்மீகப் பொறுப்பாளர்களை 'ஆயர்கள்' என்றுதானே அழைக்கிறோம்!
அப்படியானால் நீ இயேசுவுக்குச் சொந்தமான ஆடு. நீ இயேசுவின் செல்வம்."
"அது மட்டுமில்லீங்க.
ஸ்நாபக
அருளப்பர் இயேசுவை
ஒரு ஆட்டுக்குட்டியாக உருவகம் செய்திருக்கிறாரே!
'Agnus Dei.'
'Behold the Lamb of God!
'இதோ! கடவுளுடைய செம்மறி:
இவரே உலகின் பாவங்களைப் போக்குபவர்.' (அரு.1:29)"
"எனக்கு எப்போதோ கேட்ட பாட்டு ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது.
'திவ்ய பலிபோல் பாக்ய செல்வம் உலகில் இல்லையே!'
இந்தப் பாட்டில் உன் பெயர் வருகிறதே!"
"ஆமா எதற்காக அருளப்பர் இயேசுவை 'செம்மறியாக' உருவகப்படுத்துகிறார்? "
" வெறுமனே உருவகப்படுத்தவில்லை,
அவரை செம்மறியாக அறிமுகப்படுத்துகிறார்.
பழைய ஏற்பாட்டில் செம்மறியாடு இறைவனுக்கு ஒப்புக்கொடுக்கப்படும் பலிப்பொருள்.
'ஆபேலோ தன் மந்தையின் தலையீற்றுக்களில் மிகக் கொழுத்த ஆடுகளைக் காணிக்கையாய்க் கொடுத்தான். ஆண்டவர் ஆபேலையும் அவன் காணிக்கைகளையும் ஏற்றுக் கொண்டார்.
(ஆதி.4:4)
'அப்பொழுது ஆபிரகாம் தம் கண்களை ஏறெடுத்துத் திரும்பிப் பார்க்கையில், முட்செடியிலே கொம்புo மாட்டிக் கொண்டு நின்ற ஓர் ஆட்டுக் கிடாயைக் கண்டார்: அதைப் பிடித்துத் தம் மகனுக்குப் பதிலாக அதைத் தகனப் பலியாய் ஒப்புக் கொடுத்தார்.'
(ஆதி.22:13)
அருளப்பர் இயேசுவை
நமது பாவங்களுக்காக பலியாகப்போகும் பலியாடாக
அறிமுகப்படுத்துகிறார்.
இயேசு பிறந்த செய்தி
முதன்முதல் இடையர்களுக்குதான் வானதூதர்களால் அறிவிக்கப்படுகிறது.
இடையர்கள்தான் முதன்முதல் பாலன் இயேசுவைப் பார்த்தார்கள்.
'நானே நல்ல ஆயன்' என்ற இயேசு
'ஆடுகள் உயிர்பெறும்படி வந்தேன்:'
'நல்ல ஆயன் ஆடுகளுக்காகத் தன்னுயிரையே கொடுப்பான்.'
என்கிறார்.
இயேசு தன் ஆடுகளாகிய நமக்காகத்
தன் உயிரைக் கொடுக்கப்போகும் செய்தியை
சந்தர்ப்பப்ம் வாய்க்கும்போதெல்லாம் சொல்லுவார்.
இயேசுவின் பிறப்பு விழாவைக் கொண்டாடும் நாம்
அவர் ஏன் பிறந்தார்?
என்று தியானிக்க வேண்டும்.
தியானத்தின்போது,
அவர் இறப்பற்காகத்தான் பிறந்தார் என்ற உண்மை புரியும்.
நமது பிறப்பின் நோக்கத்தை கடவுள்தான் தீர்மானிக்கிறார்.
Suppose, அந்தப்பொறுப்பை நம்மிடம் விட்டிருந்தால் என்ன செய்திருப்போம்?
இந்த உலகிலேயே சாகாமல் வாழவேண்டும் என்று தீர்மானித்திருப்போம்.
ஆனால் இயேசுவின் பிறப்பின் நோக்கத்தை அவர்தான் முடிவு செய்தார்.
என்ன முடிவு செய்தார்?
சாகவேண்டுமென்று,
அதிலும்,
பாடுகள் பல பட்டு,
அவமானப்படுத்தப்பட்டு
சிலுவையில் அறையட்டு
சாகவேண்டுமென்று
அவரே முடிவெடுக்கிறார்.
யாருக்காக அந்த அவமானமான சாவு?
நமக்காக.
அவருக்குக் கீழ்ப்படியாமல் பாவம் செய்த நமக்காக
அதாவது அவரை அவமதித்த நமக்காக.
நமது பாவங்களின் மன்னிப்புக்காக."
"நமக்காகப் பாடுபட்டு மரித்த அவருக்காக நாம் என்ன செய்யவேண்டும்? "
"நாம் அவருக்காக வாழ்ந்து,
அவருக்காகவே மரிக்கவேண்டும்.
இயேசுவுக்காகாக வாழ்ந்து,
அவருக்காக மரிப்பதே
நமது வாழ்வின் இலட்சியமாக இருக்கவேண்டும்."
"அவர் நமக்கு மரித்ததால்
நமக்கு பாவமன்னிப்பும்,
இரட்சண்யமும் கிடைக்கிறது.
நாம் அவருக்காக வாழ்ந்து, அவருக்காக மரித்தால் அவருக்கு என்ன கிடைக்கும்?"
"அப்போதும்
நமக்குதான்
பாவமன்னிப்பும்,
இரட்சண்யமும்
கிடைக்கும்.
அவர் நிறைவானவர்.
அவருக்கு எதுவும் தேவை இல்லை.
நமது வாழ்வினால் பயன் அடையப்போவது நாம்தான்."
"இறைவனது
செல்வப் பிள்ளைகளாக
என்றென்றும்
வாழவிருக்கும்
நாம்
உண்மையிலேயே
பாக்கியசாலிகள்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment