Tuesday, January 29, 2019

உயிர்விட தயாரா இருக்கவேண்டும்.


உயிர்விட தயாரா இருக்கவேண்டும்.
*****************************

"அடியே, செல்வம், ஒரு டீ போடமுடியுமா? "

"நீங்க டீ போட்டா இனிமையா இருக்கு. நான் போட்டா அசிங்கமா  இருக்குமுங்க."

"நான் என்னைக்குடீ, டீப்போட்டேன்?"

"இப்போவே இரண்டு டீ போட்டுட்டீங்களே! "

"அதுவும் சரிதான். உட்கார். ஆளுக்கொரு டீ யாக் குடிச்சிக்கலாம்.உட்கார். ஒரு முக்கியமான விசயம் பேசணும்."

"கொஞ்சம் பொறுங்க. உண்மையான டீயுடன் வந்துடறேன்......இப்போ சொல்லுங்க."

"இன்றைக்கு ஞானோபதேச வகுப்பில பசங்கட்ட ட ஒரு  கேள்வி கேட்டேன்.

'நீங்க ஏன் கிறித்தவங்களா இருக்கீங்கன்னு. எல்லா பசங்களும் சொன்ன ஒரே பதில் 'எங்க அப்பா, அம்மா கிறிஸ்தவங்க. அதனால் நானும் கிறிஸ்தவன்' என்கிறதுதான்."

"அவங்க பசங்கள். அநேக பெரிய ஆட்களிடம் கேட்டாலும் இதே பதிலைத்தான் சொல்லுவார்கள்.

ஒரு பெரிய ஆளிடம் 'நல்ல கிறிஸ்தவன் எப்படி இருப்பான்னு கேட்டா, அவர் சொல்றார், 

'நல்ல கிறிஸ்தவன் ஒழுங்கா கோவிலுக்குப் போவான், செபம் சொல்லுவான், திருவிழாக்கள ஒழுங்கா கொண்டாடுவான்'ன்னு சொல்றார்."

"சரி, உன் கருத்துப்படி நல்ல கிறிஸ்தன்னா யார்?''

"கிறிஸ்துவின் சிந்தனை, சொல், செயல் ஆகியவற்றை தன்னுடையதாக்கி,

அவர் எந்த நோக்கத்துக்காக, வாழ்ந்தாரோஅதே நோக்கத்துக்காக   வாழ்பவரே கிறிஸ்தவர்.

'நல்ல' அடைமொழி தேவையற்றது.

உண்மையிலேயே  கிறிஸ்தவ சிந்தனைப்படி வாழ்பவர்கள் நல்லவர்களாகத்தான் இருப்பர்."

"கிறிஸ்து உலகை இரட்சிக்க வந்தார். இரட்சிப்பு அவர் நோக்கம்.

நாமோ பாவிகள்.

அவர் எந்த நோக்கத்துக்காக, வாழ்ந்தாரோஅதே  நோக்கத்துக்காக   வாழ்பவரே கிறிஸ்தவர் என்றால்,

பாவிகளாகிய நம்மால் எப்படி இரட்சிக்க முடியும்?"

"ஹலோ!  இரட்சகர் கிறிஸ்து மட்டுமே.

பள்ளிக்கூடத்தில் தேர்வு எழுதப்போவது மாணவன் மட்டும்தான்.

ஆனால் அதற்காக எத்தனை பேர் உழைக்கிறார்கள்.

அதாவது மாணவர் நன்கு தேர்வு எழுதும் நோக்கத்திற்காக ஆபீஸ் பியூன்கூட உழைக்கிறானே!

அதே மாதிரிதான்."

"மாணவர்கட்கு மற்றவர்கள் உதவி தேவை. ஆனால் இயேசு கடவுள் சர்வ வல்லபர்.அவரால் எல்லாம் கூடும். அவருக்கு நம் உதவி எதற்கு?"

"கடவுள் மனிதனைத் தன் வல்லமையால் படைத்து,

அவனுக்கு ஒருவேலையும் கொடுக்காமல்

அவனை மோட்சத்தில் கொண்டுபோய் வைத்து

'நித்திய இன்பத்தை அனுபவி' என்று கூறவேண்டும்,  அப்படித்தானே!"

"ஐயோ செல்வம், நான் அப்படிக் கூறவில்லை. இரட்சிப்பில் நாம் எப்படி உதவ முடியும் என்று கேட்டேன்."

"மற்றவர்களை நேசிக்க முடியுமா முடியாதா?"

"முடியும்."

"மற்றவர்கட்காகத் தினமும் செபிக்க முடியுமா முடியாதா?"

"முடியும்."

"மற்றவர்கட்கு முன்மாதிரிகையாக வாழ முடியுமா முடியாதா?"

"முடியும்."

"மற்றவர்களது தவறுகளை மன்னிக்க முடியுமா முடியாதா?"

"முடியும்."

மற்றவங்களுக்கு நற்செய்தியை அறிவிக்க0 முடியுமா, முடியாதா?"

"முடியும்."

"உங்களுக்கு இயல்பாக வரும் துன்பங்களை உலகின் பாவங்களுக்குப் பரிகாரமாக ஒப்புக்கொடுக்க
முடியுமா முடியாதா?"

"முடியும்."

"அவ்வளவுதான்.

இயேசு மற்றவர்களை நேசித்தார்.
1
மற்றவர்கட்காகத் தினமும் தன் தந்தையிடம் செபித்தார்.

மற்றவர்கட்கு முன்மாதிரிகையாக வாழ்ந்தார். 

உலகிற்கு நற்செய்தியை அறிவித்தார்.

மற்றவர்களது பாவங்களை மன்னித்தார்.

மற்றவர்களது பாவங்களுக்குப் பாடுபட்டு  மரித்தார்.

நீங்கள் இப்போது முடியும் என்று சொன்னதைச் செய்தாலே

நீங்கள் இயேசுவைப் போல் சிந்திக்கிறீர்கள்,  பேசுகிறீர்கள், செயல்படுகிறீர்கள் என்று அர்த்தம்.

இவ்வாறு நீங்கள் செய்யும்போது உங்கள் இரட்சண்யத்தையும் உறுதி செய்கிறீர்கள்."

"அதாவது கடவுளுக்கு நமது உதவி தேவை இல்லை.

நாம் இரட்சண்யம் அடைய நமக்கு நமது உழைப்பு தேவை.

இப்போது புரிகிறது."

"என்ன புரிகிறது?"

"உனக்குப் புரிகிறது என்று எனக்குப் புரிகிறது."

"சரி.  என் மனதில் பட்டதைச் சொல்லிவிட்டேன். நீங்கள் ...."

"பொறு. சொல்கிறேன்.

கிறிஸ்தவன் என்றால்  கிறிஸ்து அவன்,   அவன் கிறிஸ்து  என்று பொருள்.

கிறிஸ்துவைப் பின்பற்றுபவன் ஒருவகையில் கிறிஸ்துவாகவே மாறிவிடுகிறான்.

அதனால்தான் புனித சின்னப்பர் 'வாழ்வது நான் அல்ல.கிறிஸ்து என்னில் வாழ்கிறார்' ,என்றார்"

"கொஞ்சம்  பொறுங்க.

'நீங்கள் தெய்வங்கள் போல் ஆகி'

இந்த வார்த்தைகள் ஞாபகத்தில் இருக்கா?"

"என்னடி அப்படிக் கேட்டுட்ட!  சாத்தானின் வார்த்தைகள்! மறக்க முடியுமா"

''சாத்தான் பொடி வைத்துப் பேசியிருக்கதைப் பார்த்தீங்களா?"

"ஆமாண்டி. தெய்வம் ஆதாமையும், ஏவாளையும் தன் தன் சாயலாகத்தான் படைத்தார், 

அதாவது சுதந்திரம், அன்பு, ஞானம் போன்ற தனது பண்புகளை அவர்களிடம் பகிர்ந்து கொண்டு,

தன்னைப்போலவே படைத்தார்.

அதாவது, அவர்கள் இறைவன் கட்டளைப்படி நடந்திருந்தாலே,  அவர்கள் புனித சின்னப்பரைப்போல்,

'வாழ்வது நாங்கள் அல்ல. கடவுள் எங்களிடம் வாழ்கிறார்'

என்று கூறியிருக்கலாம்.

சாத்தான் ஏற்கனவே கடவுளைப்போல சாயலில் உள்ளவர்களிம் போய் பழத்தைத் தின்றால் 'கடவுளைப்போல் ஆவீர்கள் என்று ஏமாற்றியிருக்கிறது பார்த்தியா!"

"சரி அத விடுங்க."

"நீதானடி ஆரம்பிச்ச."

"அதுதான் நானே விடச்சொல்றேன். இப்போ
'வாழ்வது நான் அல்ல.கிறிஸ்து என்னில் வாழ்கிறார்' இதிலிருந்து தொடருங்க.

"பரிசுத்த தமதிரித்துவத்தில் ஆட்கள் மூவராயினும் இறைத்தன்மை ஒன்றே, இறைச் சித்தம் ஒன்றே.

தந்தையின் சித்தமே மகனின் சித்தம்.

தந்தையின் சித்தத்தை நிறைவேற்றவே மகன் மனிதன் ஆனார்,

அதாவது
தந்தையின் சித்தத்தோடு ஒன்றான தனது சித்தத்தை நிறைவேற்ற.

இயேசு தன் சாயலாகப் படைத்த மனிதனிடமிருந்தும் இதையே எதிர்பார்க்கிறார்.

இந்த எதிர்பார்ப்பை முதலில் நிறைவேற்றியவர் அன்னை மரியாள்.

'இதோ ஆண்டவருடைய அடிமை' என்று கூறி ஆண்டவருடைய சித்தத்தைத் தன் சித்தமாக ஏற்றுக்கொண்டார்.

அவளுடைய பிள்ளைகளாகிய நாமும் அதையே செய்ய வேண்டும்.

அப்படிச் செய்யும்போது கிறிஸ்துதான் நம்மை இயக்குகிறார்.

நம்மை இயக்குபவர் கிறிஸ்து என்றால் நம்முள் இயங்குவது, அதாவது வாழ்வது அவர்தானே!

கிறிஸ்துவாக வாழ்பவனே கிறிஸ்வன்!"

"கிறிஸ்துவின் இரட்சண்ய வேலையில் நமக்கும் ஒரு பங்கு உண்டு."

"ஆமா.

God has entrusted to each one of us a share in the great redemptive work of Jesus."

"இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? "

"முதலில் நம்மை பரிசுத்தமாக்கிக் கொள்ள வேண்டும்.

நம்மிடம் இருப்பதைத்தானே மற்றவர்கட்குக் கொடுக்க முடியும்! "

"பரிசுத்தமாக்குவது எப்படி? "

"அதற்கென்றே ஒருவர் இருக்கிறார்."

"யார் அவர்? "

"நம் ஆண்டவராகிய இயேசு."

"பங்குச் சாமியார்னு சொல்லுவீங்கன்னு பார்த்தேன்."

"சரியாகத்தான் நினைச்சிருக்க. பங்குச்சாமியார் மூலமாகத்தான் இயேசு செயல்படுகிறார்.

தேவத்திரவிய அனுமானங்கள் மூலம்தான் பரிசுத்தமாகிறோம்.

அவற்றை நமக்குத் தருவது
பங்குச்சாமியார்தானே!

பங்குச்சாமியாரோடு ஒத்துழைக்கும்போது இயேசுவோடுதான் ஒத்துழைக்கிறோம்."

"அப்புறம்?"

"இருப்பதைக் கொடுக்க வேண்டும்.

அதாவது மற்றவர்களைப் பரிசுத்தமாக்கும் பணியிலும் நாம் கிறிஸ்துவுக்கு உதவியாக இருக்க வேண்டும்.

'அப்படியே, மக்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு, வானகத்திலுள்ள உங்கள் தந்தையை மகிமைப்படுத்தும்படி, உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்வதாக.' (மத்.5:16)

நமது முன்மாதிரிகையான வாழ்வே மற்றவர்கள் பரிசுத்தமாக உதவும்.

கிறிஸ்துவை நேரடியாகப் போதிக்க நமக்குக் கடமை உண்டு.

தோமையார் கிறிஸ்துவைக் கொடுக்வே இந்தியாவிற்கு வந்தார்.

சவேரியாரும், அருளானந்தரும் அந்த நோக்குடன்தான் வந்தார்கள்.

நாமோ நம்மிடம் இருக்கும் இயேசுவை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவே தயங்குகிறோம்.
ஏன்? "

"எல்லோருக்கும் மதசுதந்திரம் இருக்கிறது.

கடவுளே நமது சுதந்திரத்தில் தலையிடுவதில்லை.  அப்புறம் நாம எப்படி?.

நான் கேட்க வில்லை. மற்றவங்க கேட்கிறாங்க."
"

5,மேலும் அவர்களை நோக்கி, "உலகெங்கும் போய்ப் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள்.


16 விசுவசித்து ஞானஸ்நானம் பெறுபவன் மீட்புப் பெறுவான், விசுவசியாதவனுக்குத் தண்டனை கிடைக்கும்.'

நற்செய்தியினை அறிவிப்பது நமது கடமை.

விசுவசிக்க வேண்டியது அவர்கள் கடமை.

டாக்டரிடம் உடம்பைக் காட்டுகிறோம். டாக்டர் உடம்பைப் பரிசோதித்துவிட்டு ஒரு மருந்து எழுதித்தருகிறார்.

சாப்பிட்டால்குணம் ஆகும் என்பார்.

தன் சுதந்திரத்தைச் சரியாகவோ, தவறாகவோ பயன்படுத்துவது நமது பாடு.

நாம் நற்செய்தியை அறிவிக்கும்போது அதைக் கேட்பவர்க்கு இறைவன் நிறைய அருள்வரம் (Actual grace) தருகிறார்.

நற்செய்தியை அவர் விசுவசிக்க வேண்டும்.

விசுவசியாதவரை நாம் கட்டாயப்படுத்த முடியாது.

ஆனால் நற்செய்தியை அறிவிக்கக்கூடாது என்று கூற யாருக்கும் உரிமை இல்லை, அரசு உட்பட.

அரசு தடுக்க உறுதி செய்தால்,  நாம் வேதசாட்சிகளாக மாற உறுதி செய்ய வேண்டும்."

"அதாவது கிறிஸ்து நமக்காக உயிரை விட்டதுபோல நாம் கிறிஸ்துவுக்காக உயிர்விட தயாரா இருக்கவேண்டும்.

லூர்து  செல்வம்.

No comments:

Post a Comment