Tuesday, November 27, 2018

"திருப்பலி, உலகின் மையம்."

"திருப்பலி, உலகின் மையம்."
********************************

உலக வரலாற்றின் மையம் உலகை பாவத்திலிருந்து மீட்கவந்த இறை மகன் இயேசு.

வேதாகமம் உலகின் ஆன்மீக வரலாறுபற்றிய செய்திகளைத் தருகிறது.

அதில் வருகிற மக்களின் லௌகீக வாழ்க்கை வரலாறும் ஆன்மீகப் பின்னணியிலேயே எழுதப்பட்டன.

  பழைய ஏற்பாட்டில்   நமது முதல் பெற்றோர், அவர்களுடைய வம்ச வழியினர், இஸ்ரயேல் மக்கள் ஆகியோர் உலகில் வாழ்ந்த வரலாற்று மக்கள்தான்.

அவர்களைப்பற்றி எழுதப்பட்வை,  உலகப் பார்வையில் அவர்களது சமூக, அரசியல் வாழ்க்கையைப்பற்றி நமக்கு விளக்குவதற்காக எழுதப்படவில்லை.

இறைவன் அவர்கள் வழியாகத் தன்னை வெளிப்படுத்தியது, 

உலக இரட்சண்யத்திற்காக அவரகளைத் தயாரித்தது  போன்ற

ஆன்மீகப் பின்னணியில்தான் அவர்களின் உண்மையான வாழ்க்கை வரலாறு தரப்பட்டிருக்கிறது.

உலக இரட்சண்ய வரலாற்றின் (Salvation history) மையம் கிறிஸ்து.

உலப்படைப்பு,
பாவம் நுழைதல்,
இரட்சகர் பற்றிய அறிவிப்பு,
இஸ்ரேல் மக்கள்
இரட்சகர் வருகைக்காகத் தயாரிக்கப்படுதல்
ஆகிய வரலாற்று நிகழ்வுகள் கிறிஸ்து பிறப்பிற்கு முந்தியவை.

அடுத்து கிறிஸ்துவின் பிறப்பு,
வாழ்க்கை, 
போதனை,
மரணம்,
உயிர்ப்பு, 
விண்ணேற்றம்.

அடுத்து கிறிஸ்துவின் நற்செய்தி  உலகென்றும் பரவியது,
மக்களின் ஆன்மீக வாழ்வு,  இன்றையவரையிலும், எதிர்காலத்திலும்.

ஆக உலக ஆன்மீக வரலாற்றின் மையம் கிறிஸ்து.

அவரது உலக வாழ்வின் இறுதியாக இருந்தாலும்,

அவரது வாழ்வின் மையம் அவரது சிலுவைப் பலி.

சிலுவையில் தன்னை

நமது பாவங்களுக்காகப் பலியாக்கும் நோக்குடனேயே அவர் வாழ்ந்ததால்

சிலுவைப்பலியே

அவரது வாழ்வின் மையம்.  

அவரது பலியினாலேயே நாம் இரட்சிக்கப்பட்டதால்  நமது வாழ்வின் மையமும்    திருப்பலிதான்.

உலகோர் அனைவருக்காகவும் இயேசு பலியானதால் உலகின் மையமும் திருப்பலிதான். 

அனைவரும் வாழ்வதும் ஆன்மீக இரட்சண்யத்துக்காகத்தான்.

இரட்சண்யத்தின் மையம் திருப்பலி.

ஆகவே உலக மக்கள் அனைவரது வாழ்வின் மையமும் திருப்பலிதான்.


அனைத்து வழிபாடுகளும் திருப்பலியையே அதாவது இயேசுவின் மரணத்தையே மையமாகக் கொண்டுள்ளன.

உலகெங்கும் வாழும் கிறிஸ்தவ மக்களை இணைப்பது திருப்பலிதான்.

உள்நாட்டில் திருப்பலியில் கலந்து கொண்டாலும்,

வெளிநாட்டில் திருப்பலியில் கலந்து கொண்டாலும்

சொந்த ஊரில் இருப்பதுபோன்ற உணர்வைத் தருவது

ஒரேமாதிரியான திருப்பலி முறைதான்.

உலகெங்கும் பலிப்பொருளும், பலி செலுத்துபவரும் கிறிஸ்துதான்.

தன்னையே தனது பிரதிநிதிகளான குருக்கள் மூலம் பலியாக்குகிறார்.

திருப்பலி நாம் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக செலுத்தப்படுவதால்

பாவமன்னிப்பத் தேவைப்படுகின்ற அனைவரும்,

அதாவது

நாம் அனைவரும், திருப்பலியில் கலந்துகொள்ளவேண்டும்,

வெறும் பார்வையாளர்களாக அல்ல,

குருவுடன் இணைந்து பலியை ஒப்புக்கொடுப்பவர்களாக.

இறைவனுக்குப் பலி ஒப்புக்கொடுக்கும்
அனைவரும் செய்வதுபோல, 

இயேசுவைப் பலியாக ஒப்புக்கொடுத்தபின்,

இயேசுவையே நமது ஆன்மீக உணவாக அருந்துகிறோம்.

பலியிடப்பட்ட உணவை நாம் அருந்தும்போதுதான் பலி பூர்த்தியாகிறது.

பலிப்பொருளை தகுந்த தயாரிப்போடு உண்ணவேண்டும்.

பாவங்களுக்குப் பரிகாரமாக ஒப்புக்கொடுக்கப்படும் பலிப்பொருளை பாவநிலையோடு அருந்தக்கூடாது.

அது மற்றொரு பாவமாகிவிடும்.

ஆகவே

நல்ல பாவசங்கீத்தனம் செய்து

பாவமன்னிப்புப்
பெற்றபின்புதான்

இறைவிருந்தை அருந்தவேண்டும்.

தன் ஆன்ம நிலையைப் பரிசோதிக்காமல்,

பாவ நிலையில்

கூட்டத்தோடு கூட்டமாகத்

தின்பண்டத்தை வாங்குவதுபோல

கையில் வாங்கி

வாயில் போட்டுக்கொண்டு போவது,

குளிக்கப்போய்

சேற்றைப் பூசிக்கொள்வதற்குச் சமம்.

இயேசு பிறந்ததும், வாழ்ந்ததும் நமக்காகப் பலியாகிடவே.

நாம் பிறந்ததும், வாழ்வதும் இயேசுவுக்காக நாம் பலியாகிடவே.

திருப்பலியில் நடுப்பூசையில் இயேசு பலியிடப்படும்போது

நாம் நம்மையும் இயேசுவின் பலியோடு சேர்த்து பரம பிதாவிற்குப் பலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும்.

ஈர்ப்பு விசை மையத்தை நோக்கியே இருப்பதால்

நமது  வாழ்வும் திருப்பலியை நோக்கியே ஈர்க்கப்பட வேண்டும்.

திருப்பலிதான் நமது வாழ்வு.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment