செபமாலை செபித்துக் கொண்டே அன்னையோடு பயணிப்போம்.
(தொடர்ச்சி)
12.இயேசுவின் விண்ணேற்றம்.
இயேசு சிலுவையில் மரணிக்கும் வரை இயேசு நம்மைப் போல இவ்வுலகில் வாழ்ந்தார்.
மரித்த வினாடியில் அவரது ஆன்மா விண்ணக நிலையை அடைந்தது.
உயிர்த்த வினாடியில் அவர் ஆன்ம சரீரத்தோடு விண்ணக நிலையை அடைந்தார்.
உயிர்த்த பின் நாற்பது நாட்களும் விண்ணக நிலையில் வாழ்ந்து கொண்டு தான் சீடர்களுக்குக் காட்சி கொடுத்தார்.
விண்ணகம் என்பது எங்கோ உயரத்திலோ, தூரத்திலோ இருக்கும் இடமல்ல.
அது உலகைப் போல் ஒரு இடம் அல்ல.
அது ஒரு வாழ்க்கை நிலை.
Heaven is a state of life beyond space and time.
பாதாளம் என்பது மரித்த பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் கடவுளைக் காண முடியாத நிலை.
இயேசு மரித்தவுடன் அவர்கள் மீட்கப்பட்ட செய்தியை அவர்களுக்கு அறிவித்தார்.
அவர்கள் இறை மகனைப் பார்த்தார்கள். அதுதான் அவர்களுக்கு மோட்சம்.
மரணத்துக்கு முன் வாழ்ந்தது போல் இயேசு சீடர்களோடோ, தனது அன்னையோடோ வாழவில்லை.
நாற்பது நாட்களாக அவ்வப்போது காட்சி கொடுத்தார்.
நாற்பது நாட்களுக்குப் பின் காட்சி கொடுப்பதை நிறுத்தி விட்டார்.
நாற்பதாவது நாளில் தான் ஆண்டவர் விண்ணெய்திய விழாவைக் கொண்டாடுகிறோம்.
ஆனாலும் விண்ணகம் எய்திய இயேசு உலகம் முடியுமட்டும் திவ்ய நற்கருணை மூலமாக நம்மோடு வாழ்கிறார்.
இயேசு விண்ணக நிலையில் வாழ்ந்தாலும் திவ்ய நற்கருணை மூலமாக நமது ஆலயத்தில் வாழ்வது மட்டுமல்ல,
நமக்குள் ஆன்மீக உணவாக வருகிறார்.
நாம் அவரை உண்கிறோம்.
மோட்சத்தில் ஆன்ம, சரீரத்தோடு வாழ்ந்து கொண்டிருப்பது போலவே, நம்மோடு திவ்ய நற்கருணையிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அவரைப் பார்க்கவும், அவரோடு பேசவும் மோட்சத்துக்குப் போகும் வரைக் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
தினம் திருப்பலிக்குப் போனாலே போதும்.
திரு விருந்தின் போது நம்மோடு நாமாகக் கலந்து விடுவார்.
ஆலயமே நமக்கு மோட்சம் தான்.
தினமும் திருப்பலியில் இயேசுவைச் சந்திப்போம்.
விண்ணகப் பேரின்பத்தை உலகிலேயே முன் ருசித்துச் பார்ப்போம்.
Let us pretaste Heaven in this world itself.
லூர்து செல்வம்
No comments:
Post a Comment