ID card. அடையாள அட்டை.
*******************************
பள்ளிக்கூடம் சென்றால் மாணவர்கள் கழுத்திலும்,
அலுவலகம் சென்றால் அலுவலர்கள் கழுத்திலும்
ஒரு அட்டை தொங்கும்.
எல்லோருக்கும் தெரியும், அது அவர்களுடைய ID card, அடையாள அட்டை.
இந்த மாணவன் இந்த பள்ளியில் படிப்பவன்,
இவர் இந்த அலுவலகத்தில் பணி புரிபவர் என்பதற்கான சான்று அது.
அதை அணியாமல் பள்ளிக்கோ, அலுவலகங்களுக்கோ செல்லக்கூடாது என்பது விதி.
அடையாள அட்டையைப் போலவே,
மாணவர்கள்,
மற்றும்
காவலர், படையினர், செவிலியர் போன்ற சில பணியாளர்களுக்கு
சீருடை (Uniform) என்று ஒன்று இருக்கிறது என்றும் எல்லோருக்கும் தெரியும்.
அதை அவரவர் பணி நேரத்தில் அணிய வேண்டும் என்றும் எல்லோருக்கும் தெரியும்.
பள்ளியில் அல்லது பணியில் இல்லாத நேரத்தில் இஸ்டப்பட்ட உடை அணிந்துகொள்ளலாம்,
ஏனெனில் அப்போது அவர்களை அடையாளம் காண வேண்டிய அவசியம் இல்லை.
ஆக, பணி நேரத்தில் சீருடை அணியவேண்டும்.
முழுநேரப் பணியாளர்களாய் இருந்தால்?
சீருடையின் நோக்கமே
அவர்களைப் பார்ப்பவர்கட்கு
அவர்கள் யார் என்று தெரியவேண்டும் என்பதுதான்.
அப்படியானால் முழுநேரப் பணியாளர்கள் மற்றவர்கள் பார்க்கும் இடத்தில் இருக்கும்போது,
அது எந்த நேரமாய் இருந்தாலும்சரி,
எந்த இடமாய் இருந்தாலும்சரி
சீருடையில் இருப்பதுதான் முறை.
நான் யாரை முழுநேரப் பணியாளர்கள் என்று குறிப்பிடுகிறேன் என்பதை யூகித்திருப்பீர்கள்.
இப்போது கூறப்போவது நடந்த சம்பவம்.
ஒரு ஊரில் ஒரு பெரியவர்க்கு மிகவும் சுகமில்லை.
அவருக்கு அவஸ்தை கொடுக்க பங்கு சுவாமியாரை அழைத்துவர வேண்டும்.
அந்த ஊர் பங்கின் Substation.
பங்குக் கோவில் 10கி.மீ.க்கு அப்பால் உள்ளது.
Town bus ஏறிச் சென்று சுவாமியாரைக் கூட்டி வர வேண்டும்.
பெரியவரைப் பார்க்க வெளியூர்க்காரர் ஒருவர் வந்திருந்தார்
சுவாமியாரைக் கூட்டி வரும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவர் பங்கு சுவாமியாரைப் பார்த்ததில்லை.
ஆயினும் பங்குக் கோவிலுக்குச் விசாரித்தால் தெரியப்போகிறது என்று சுவாமியைக் கூட்டிவரச் சம்மதித்தார்.
Busல் ஏறி, அருகில் இருந்தவரோடு பேசிக்கொண்டே பங்குக் கோவில் இருந்த ஊருக்கு வந்து சேர்ந்தார்.
Busலிருந்து இறங்கி, ஒரு Tea குடித்துவிட்டு, கோவிலுக்கு நடந்தார்.
நேரே சுவாமியின் அறைவீட்டிற்குச் சென்று சீசப்பிள்ளையிடம் விசயத்தைச் சொன்னார்.
"சுவாமி வெளியூர் சென்றிருக்கிறார். அநேகமாக இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவார். இங்கே உட்காருங்கள்" என்று வெராண்டாவில் இருந்த நாற்காலியைக் காண்பித்தார்.
உட்கார்ந்திருந்தபோது அவரோடு Busல் வந்தவர் கோவிலிலிருந்து வெளியே வந்து , சுவாமியின் அறையைப் பார்த்து வந்தார்.
"நீங்களும் சுவாமியைப் பார்க்கவா வந்தீர்கள்?"
"நீங்கள் என்ன விசயமாய் வந்தீர்கள்?"
" ஒரு பெரியவருக்கு அவஸ்தை கொடுக்க சுவாமியை அழைத்துப்போக வந்தேன்."
"அவஸ்தையா? இதை Busல் ஏறுமுன்பே சொல்லியிருக்கலாமே.
சீசப்பிள்ளை, அவஸ்தைப் பையை எடுங்கள்." என்று கூறிவிட்டு, அவசரமாக அறைக்குள் போய் அங்கியோடு வெளியே வந்தார்.
கூப்பிடப்போனவர்க்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
அதை வெளியே காட்டிக்கொள்ளாமல்,
"நீங்கதான் சாமியாரா? அங்கியில்லாமலிருந்தால் மற்றவர்கட்கு எப்படித் தெரியும்? "
"சரி, வாங்க." என்று கூறிவிட்டு, Bus stand க்கு நடந்து, Busல் ஏறி, பெரியவரின் வீட்டிற்குச் சென்றார்கள்.
ஆனால் அவர்கள் வீட்டிற்குள் நுழைந்து கொண்டிருந்தபோது பெரியவரின் ஆன்மா உடலை விட்டுப் பிரிந்துகொண்டிருந்தது.
குருவானவர் அங்கி அணிந்திருந்தால், பெரியவர் சாகுமுன் அழைத்து வரப்பட்டிருப்பார்.
அவரது ஆசீரோடு ஆன்மா பிரிந்திருக்கும்.
பெரியவரது இப்படிப்பட்ட சாவிற்கு யார் பொறுப்பு?
அன்பாந்த தந்தையரே,
உடை உங்கள் சொந்த விசயம்.
உங்களுடைய சொந்த விசயத்தில் தலையிட எங்களுக்கு உரிமை இல்லை.
ஆனால்,
நீங்கள் எங்களுடையவர்கள்.
இயேசு எங்கள் ஆன்மீக நலனை உங்கள் கையில் ஒப்படைத்திருக்றார்.
அங்கி உங்களுக்கு சாதாரண உடையாகத் தெரியலாம்.
ஆனால் எங்களுக்கு அதுதான் உங்கள் ID card, அடையாள அட்டை.
அதுதான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் உங்களை அடையாளம் காண உதவும்.
ஒருவன் தேம்ஸ் நதியில் படகில் சென்றபோது குடிக்க நல்ல நீர் கிடைக்கவில்லையே என்று அழுதானாம், அது தேம்ஸ் நதி என்பதை அறியாமல்.
குருக்களோடு பயணிக்கும் ஒருவன் 'பாவசங்கீர்த்தனம் செய்ய ஒரு குரு கிடைக்கவில்லையே' என்று அழுதால் எப்படி இருக்கும்?
நீங்கள்தான் எங்களுக்கு இயேசு -
எங்கள் பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை இயேசு உங்களிடம்தான் தந்துள்ளார்.
Pants, shirt போட்ட இயேசுவை எங்களால் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை.
ஒரு ஐந்து நிமிடம் சிந்தியுங்கள்,
அங்கியின் பெருமை புரியும்.
அங்கியைக் கழற்றமாட்டீர்கள்.
ஏனெனில் அது இயேசு அணிந்த உடை.
குணமாக விரும்பியவர் தொட விரும்பிய உடை.
அங்கிக்கு தன்னிலெ எந்த பெருமையும் இல்லை.
இயேசு அணிந்ததால் அதற்கு பெருமை வந்தது.
இயேசு தொங்கியதால் சிலுவைக்கு மதிப்பு வந்தது.
இயேசு அணிந்ததால் அங்கிக்கு மதிப்பு வந்தது.
இயேசுவைப்போல் உடை அணிவதில் உங்களுக்கு என்ன சங்கடம்?
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment