Wednesday, March 28, 2018

"தெய்வ பயமே ஞானத்தின் தொடக்கம்." (பழமொழி. 9:10)

"தெய்வ பயமே ஞானத்தின் தொடக்கம்."
(பழமொழி. 9:10)
********************************

"Hi! Good morning.!"

"ஏன் ப்ரதர், நேரம் மத்தியானம் ஒரு மணி  ஆகுது, 'Good morning' சொல்றீங்க?"

"என்னப் பொறுத்த மட்டில் இப்பதான் morning.

ஏன்னா, ..."

"நான் ஏன்னு கேட்கல. நீ இப்பதான் படுக்கையை விட்டே எழுந்திருச்சிப்ப."

"ஆமா. யார் இல்லேன்னு சொன்னது?

இன்று வாரத்தில ஒரு நாள் லீவு. அத கொஞ்சமாவது அனுபவிக்க வேண்டாமா?"

"என்னது?  இன்றைக்கு வாரத்தில ஒரு நாள் லீவா?  அப்படி எந்த ஆபீஸ்ல திங்கள் கிழமை லீவு ?"

"மண்டு மண்டு! என்ன நாள்னு கூட தெரியாம பெரிய இவன் மாதிரி பேசர."

"எனக்கு என்ன நாள்னு தெரியலியா?

சரி, இன்றைக்கு என்ன கிழமை?"

"ஞாயிற்றுக்கிழமைடா மண்டு."

"இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமையா? மர லூஸ் ஆயிட்டா?"

"எனக்கா, உனக்கா? போய் காலண்டரப் பாரு."

"காலண்டர என்ன பார்க்கிறது. கையில Phone இருக்கும்போது காலண்டர் எதுக்கு.இதோ பார்த்துக்கோ."

"நீதான் பார்க்ணும்."

Phoneஅ உற்றுப் பார்த்துவிட்டு, "ஐயெய்யோ!
இன்றைக்கு உண்மையிலேயே திங்கட்கிழமைதானா? 

நேற்று முழுதும் தூங்கிக்கிட்டா இருந்தேன்?

வீட்ல உள்ளவங்க எழுப்பிவிடாம என்ன செஞ்சிக்கிட்டு இருந்தாங்க?

இன்றைக்கு ஆபீஸ்ல நல்ல டோஸ் கிடைக்கும்."

வீட்டைப் பார்த்து ஓடுகிறான்.

"ஆபீஸ்ல டோஸ் கிடைக்கும்னு சொல்லிக்கிட்டு வீட்டப் பார்த்து ஓடுகிறான்! "

ஞாயிற்றுக்கிழமை முழுதும் தூங்கியதால் ஞாயிறு பூசைக்குப் போக முடியவில்லையே என்ற கவலை கொஞ்சங்கூட இல்லை.

ஆபீஸ்ல டோஸ் கிடைக்குமே என்ற பயம் நிறைய இருக்கிறது !

இறைவனை மறந்தது பற்றி கவலை இல்லை,

ஆபீஸை மறந்ததுதான் மிகப்பெரிய பயம் கலந்த கவலை!

யார் பெரியவர்?

இறைவனா? 

ஆபீஸ் மேனேஜரா?

இறைவன் அன்பே உருவானவர்.

நமக்கு இறைவன் மீது அன்பு இருக்க வேண்டும்.

நமது சாதாரண வாழ்வில்கூட நமக்குப் பிரியமானவர்கள் விரும்புவதை ஆசையோடு செய்வோம்.

நண்பர்கள் வீட்டிற்கு வந்துவிட்டால் விழுந்து
விழுந்து கவனிப்போம்.

நமக்குப் பிரியமானவர்கள் வருவதாக Phone செய்தால் அவர்களது வருகையை எதிர்நோக்கி வாசலிலே காத்துக்கிடப்போம்.

அன்பர்கள்மீது நாம் காட்டும் உணர்வுகளில் ஒரு சிறு பகுதியையாவது நம்முள் வாழும் இறைவன்மீது காட்டுகிறோமா?

இறைவன் நம்முள் இருப்பது நமக்குத் தெரியும்,  ஆனால் அதை உணர்கிறோமா?

தவறு செய்யும்போது ஆபீஸில் கிடைக்க இருக்கும் டோஸுக்குப் பயப்படும் நாம்,

இறைவனுக்கு விரோதமாகப் பாவம் செய்யும்போது பாவத்திற்குரிய சம்பாவனையான நித்திய நரகத்தை நினைத்துப் பயப்படுகிறோமா?

நம்மில் அநேகர் நரகத்தைப் பற்றி பேசுவதையே விரும்புவதில்லை.

நான் மாணவனாக இருந்த காலத்தில், மூன்று நாள் தியானத்தில், மூன்றாவது நாள் தியானத்தை நரகம் ஆக்கிரமித்துக்கொள்ளும்.

Fr.வெனிஷ் நரகத்தின் பெரிய படம் ஒன்றை எங்கள் முன் தொங்கப் போட்டுவிடுவார்.

அந்தப் படமும்,  சுவாமி கொடுக்கும் விளக்கமும் நல்லதொரு பொதுப் பாவசங்கீத்தனம் செய்ய மிகவும் உதவியாக இருக்கும்.

இப்பொழுது மக்களின் மனநிலை மாறிவிட்டது.

மக்களின் மனநிலை எப்படி இருந்தாலும், 

மோட்சம் இருப்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை நரகம் இருப்பதுவும்.

இறைவனின் அன்பில் மூழ்கியவர்கள் நரகத்தை நினைத்து பயப்படவேண்டியதில்லை,

நன்கு படிக்கும் மாணவன் ஆசிரியரின் பிரம்பை நினைத்துப் பயப்பட வேண்டாம் என்பதுபோல.

பாவச் சோதனைக்குச் சம்மதிக்க எண்ணம் வரும்போது நரகத்தைப் பற்றி நினைப்பது நல்லது,

படிக்கச் சோம்பல்படும் மாணவன்ஆசிரியரின் பிரம்பை ஞாபகத்துக்குக் கொண்டுவரவேண்டும் என்பதுபோல.

இறைவனிடம் நமக்கு பயபக்தி (பயம் +பக்தி) இருக்க வேண்டும்.

பக்தி எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பயம்.

"Fear of God is the beginning of wisdom."

"தெய்வ பயமே ஞானத்தின் தொடக்கம்."
(பழமொழி. 9:10)

இறைவனின் அன்பில் மூழ்கி வாழ்வோம்.

இறைவன் கட்டளையை மீற பயப்படுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment